பாத்ரூமில் இருந்து கொண்டு அடம் பிடித்த சிம்புவா இது?: வியக்கும் கோலிவுட்
சென்னை: ஜோதிகாவின் காற்றின் மொழி பட டப்பிங் வேலையை ஒரே நாளில் முடித்து அசத்தியுள்ளார் சிம்பு.
ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள படம் காற்றின்மொழி. படப்பிடிப்பை படுவேகமாக நடத்தி முடித்துவிட்டனர். இந்த படத்தில் சிம்பு கவுரவத் தோற்றத்தில் வருகிறார்.
சிம்புவுக்கு பிடித்த நடிகைகளில் ஒருவர் ஜோதிகா என்பது குறிப்பிடத்தக்கது. இதை அவரே பல மேடைகளில் தெரிவித்துள்ளார்.

சிம்பு
ஹலோ எஃப்.எம். ரேடியோவில் நிகழ்ச்சி தொகுப்பாளராக நடித்துள்ளார் ஜோதிகா. சிம்பு திரையுலக பிரபலமாகவே நடித்துள்ளார். ஹலோ எஃப்.எம். நிகழ்ச்சியில் கலந்து கொள்வது தான் அவர் வரும் காட்சி. இந்த காட்சியில் நடிக்குமாறு ராதாமோகன் சிம்புவிடம் கேட்க, அவரும் உடனே சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

காற்றின் மொழி
காற்றின் மொழி படத்திற்கான டப்பிங்கை ஒரே நாளில் பேசி முடித்துள்ளார் சிம்பு. ஜோதிகா மீது தனக்கு தனி மரியாதை உண்டு என்று சிம்பு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், காற்றின் மொழி குறித்து ராதாமோகன் என்னிடம் கூறியதுமே இந்த படத்தில் நடிக்கிறேன் என்று தெரிவித்தேன். ஜோதிகாவுடன் சேர்ந்து நடிப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

அக்டோபர்
காற்றின் மொழி படத்தில் சிம்பு நடித்தது படத்திற்கு பெரிய பலம் என்று நினைக்கிறார் தயாரிப்பாளர் தனஞ்செயன். சிம்பு மனநிறைவோடு நடித்துக் கொடுத்து டப்பிங் பேசியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். காற்றின் மொழி படம் அக்டோபர் மாதம் ரிலீஸ் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடம்
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்திற்கு பிறகு சிம்பு ரொம்பவே மாறிவிட்டார். அந்த படத்திற்கு அவர் தனது வீட்டு கழிவறையில் இருந்து டப்பிங் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் தான் அவர் காற்றின் மொழி படத்திற்கு ஒரே நாளில் டப்பிங் பேசியது கோலிவுட்காரர்களை வியக்க வைத்துள்ளது. மனிதர் இந்த அளவுக்கு மாறிவிட்டாரே என்ற வியப்பு தான்.


Click it and Unblock the Notifications











