எனக்கு கடவுள் கொடுப்பாரு...நாயுடன் காதலர் தினம்...வைரலாகும் சிம்பு வீடியோ

சென்னை : காதலர் தினத்தை முன்னிட்டு நாயுடன் பேசிய சிம்பு வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பட்டய கிளப்பி வருகிறது.

காதலர் தினமான இன்று பல்வேறு திரை நட்சத்திரங்களும் பல விதங்களில் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி, போட்டோ, வீடியோ பதிவிட்டு, ரசிகர்களுக்கு வாழ்த்து கூறி உள்ளனர். ஆனால் நடிகர் சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதிலும் அவரது ரசிகர்களை இந்த வீடியோ பெரிதும் கவர்ந்துள்ளது. அதற்கு காரணம், நாயுடன் காதலர் தினம் என்ற வாசகத்துடன், நாயுடன் தனது திருமணம் பற்றி சிம்பு பேசி உள்ளது தான்.

 நான் தனியா இருக்க நீ மட்டும் ஜாலியாவா :

நான் தனியா இருக்க நீ மட்டும் ஜாலியாவா :

நாயுடன் பேசும் சிம்பு அந்த வீடியோவில், நீ பொண்ணு...இப்பதான் நீ வளர்ந்த வந்திருக்க. இப்ப நீ ஒரு பையன மீட் பண்ணனும், அந்த பையனோட சில விஷயங்கள் நடக்கனும். அதுக்கு முதல எனக்கு கல்யாணம் நடக்கனும். புரியுதா...நான் மட்டும் தனியா இருக்கப்போ, நீ மட்டும் ஜாலியா இருக்கைனா அது நியாயம் கிடையாது.

என்னை கோவிசுக்க கூடாது

அதுனால நீ நைட் எல்லாம் உட்கார்ந்து எனக்கு கல்யாணம் ஆகனும்னு வேண்டிக்கோ. எனக்கு கல்யாணம் ஆனா தான் நீ ஜாலியா இருக்க முடியும். இல்லைனா முடியாது. அதுக்கபுறம் நீ வந்து என்கிட்ட கோவிசுக்க கூடாது. என் கஷ்டம் உனக்கு புரியுதா இல்லையா...

எனக்கு கடவுள் கொடுப்பாரு

எனக்கு கடவுள் கொடுப்பாரு

பரவாயில்ல...எனக்கு அந்த கடவுள் கொடுப்பாரு. வரும் போது வரட்டும். நீ சந்தோஷமா இரு. எனக்கு கல்யாணம் ஆகுமா...ஆகாதா...ஏதாவது சொல்லு...ஆகிடுமா...தேங்க்யூ. இவ்வாறு அதில் சிம்பு பேசி உள்ளார்.

லைக்குகளை குவிக்கும் வீடியோ

லைக்குகளை குவிக்கும் வீடியோ

இந்த வீடியோவை சிம்பு பதிவிட்ட ஒரு மணி நேரத்தில் 2.35 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பார்த்துவிட்டு, லைக் செய்துள்ளனர். 3000 க்கும் அதிகமானவர்கள் கருத்து பதிவிட்டுள்ளனர். இதில் பலருக்கும் சிம்பு பதில் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. சமீபத்தில் சிறுவன் ஒருவனுடன் சிம்பு பேசிய வீடியோவும் வைரலானது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X