“வந்தா ராஜாவாத்தான் வருவேன்”... தல ரசிகரா இருந்துட்டு இப்டி பண்றீங்களே சிம்பு?

சுந்தர். சி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் வந்தா ராஜாவாத்தான் வருவேன் திரைப்படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

Recommended Video

பொங்கல் அன்று வெளியாக போகும் “வந்தா ராஜாவாத்தான் வருவேன்”

சென்னை: அஜித்தின் விஸ்வாசம் படத்துக்கு போட்டியாக பொங்கல் ரிலீசில் களமிறங்குகிறது சிம்பு நடிக்கும் 'வந்தா ராஜாவாத் தான் வருவேன்'படம்.

செக்கச் சிவந்த வானம் படத்தைத் தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இப்படத்திற்கு செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்பு பேசிய பிரபல வசனமான, 'வந்தா ராஜாவாத்தான் வருவேன்' என்பதையே தலைப்பாக வைத்துள்ளனர்.

இந்தப் படமானது, கடந்த 2013ம் ஆண்டு த்ரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண், சமந்தா இணைந்து நடித்த 'அத்திரண்டிகி தாரேதி' என்ற படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

தமிழ் ரீமேக்:

தமிழ் ரீமேக்:

தெலுங்கில் இப்படம் அதிக வசூலை குவித்து சாதனை படைத்தது. மேலும் 4 நந்தி விருதுகளைப் பெற்ற இந்தப் படம் கன்னடம் மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை லைக்கா நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது.

ஹிப் ஹாப் ஆதி இசை:

ஹிப் ஹாப் ஆதி இசை:

இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க மேகா ஆகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் ஜார்ஜியாவில் தொடங்கியது. இந்தப் படத்தில் மகத் மற்றும் கேத்ரின் தெரேசா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.

பர்ஸ்ட் லுக் போஸ்டர்:

பர்ஸ்ட் லுக் போஸ்டர்:

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் டைட்டில் தீபாவளியையொட்டி லைகாவால் இணையத்தில் வெளியிடப்பட்டது. அதில் இப்படம் பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விசுவாசம்:

விசுவாசம்:

ஏற்கெனவே சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விசுவாசம் பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது. இது தவிர கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் பேட்ட படமும் பொங்கலுக்குத் தான் ரிலீசாக உள்ளது. இந்த சூழ்நிலையில் தான் பெரும்பான்மையான படங்களில் அஜித் ரசிகராக நடித்து வரும் சிம்பு, நேரடியாக பொங்கலுக்கு அஜித் படத்துடன் மோத இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X