நான் வெர்ஜின்.. அதை நான் செஞ்சதே இல்லை.. என்னங்க சிம்பு இப்படி சொல்லிருக்காரு

சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடித்துவருகிறார் சிம்பு. இந்தப் படம் தவிர்த்து தேசிங்கு பெரியசாமி, அஸ்வத் மாரிமுத்து ஆகியோரின் இயக்கத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். விரைவில் அந்தப் படங்களின் ஷூட்டிங்கும் தொடங்கவிருக்கிறது. இந்த மூன்று படங்களுமே கண்டிப்பாக எஸ்டிஆர் கரியரி மிகப்பெரிய படங்களாக அமையும் என்று அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.

எஸ்டிஆர் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் சிம்பு இடையில் சில காரணங்களால் சினிமாவில் முழு கவனத்தையும் செலுத்தாமல் இருந்தார். அவரது பயணம் ஆன்மீகத்தை நோக்கி இருந்தது. அதை பார்த்த பலரும் இனிமேல் சிம்பு அவ்வளவுதான்; அவர் முழுக்க முழுக்க சாமியாராகப்போகிறார் என்றெல்லாம் சொன்னார்கள். அதை கேட்டு சிம்புவின் ரசிகர்கள் உச்சக்கட்ட அதிர்ச்சியடைந்தார்கள். ஆனால் சிம்புவோ அந்த சீன்லாம் இங்கே இல்லை என்பதை சொல்லாமல் சொல்லி மீண்டும் நடிக்க வந்தார்.

தரமான கம்பேக்: அதுவும் சாதாரணமாக நடிக்க வரவில்லை; எக்குத்தப்பாக எகிறியிருந்த உடல் எடையை முழுவதுமாக குறைத்து 20 வயது இளைஞர் போல் தோன்றினார். வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்த மாநாடு, கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்த வெந்து தணிந்தது காடு படங்கள் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகின. அந்த உற்சாகத்தோடு கமல்ஹாசனுடன் இணைந்து தக் லைஃப் படத்திலும் நடித்தார். ஆனால் படம் படுதோல்வி. அதேசமயம் சிம்புவின் நடிப்பு கொண்டாடப்பட்டது.

Simbu Said He Is a Virgin in a Throwback Interview Here Are the Details
Photo Credit:

வெற்றிமாறனுடன் அரசன்: இப்படிப்பட்ட சூழலில் வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தை ஒட்டுமொத்த கோலிவுட்டும் எதிர்பார்த்து காத்திருக்கிறது. ஏற்கனவே இந்தக் கூட்டணி வடசென்னை படத்திலேயே அமைந்திருக்க வேண்டியது. ஆனால் அது நடக்கவில்லை. தற்போது படத்தின் ஷூட்டிங் விருதுநகர் மாவட்டம் கோவில்பட்டியில் நடந்துவருகிறது. அங்கு மொத்தம் இரண்டு வாரங்கள்வரை ஷூட் நடக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. நேற்றுகூட ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

சிங்கிளான சிம்பு: இப்படி பிஸியாக நடித்துவரும் சிம்பு இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். முதலில் நடிகை நயன்தாரா அடுத்ததாக நடிகை ஹன்சிகா மோத்வானியை காதலித்தார். ஆனால் இரண்டு காதலும் பாதியிலேயே முடிந்தது. இப்போது எந்த ரிலேஷன்ஷிப்பில் இல்லாத அவர் எப்போது திருமணம் செய்துகொள்வார் என்பது பலரது கேள்வி. சமீபத்தில் மலேசியாவில் நடந்த நிகழ்ச்சியில்கூட அவரிடம் இதுகுறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தனியாக இருக்கிறோமா ரிலேஷ்ஷிப்பில் இருக்கிறோமா என்பது விஷயம் இல்லை. ஒழுங்காக இருக்கிறோமா என்றுதான் பார்க்க வேண்டும். இப்படி நான் பேசுவதற்கு காரணமே வாழ்க்கையில் ரொம்ப அடி வாங்கியதுதான் என்று கூறியிருந்தார்.

ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு திருநங்கை அப்சராவுக்கு சிம்பு கொடுத்த பேட்டி ட்ரெண்டாகியிருக்கிறது. அந்தப் பேட்டியில் அவர், 'நான் வெர்ஜின்தான். இதுவரை நான் செக்ஸ் வைத்துக்கொண்டது இல்லை. நான் காதலித்த பெண்களிடம் காதலைத்தான் செய்திருக்கிறேன். காதலைத்தான் உருவாக்கியிருக்கிறேன்' என்றார். இதை பார்த்த ரசிகர்களோ என்னது சிம்பு அதை செய்ததே இல்லைய?.. இதெல்லாம் நம்பும்படியா இருக்கிறது என்று ஜாலியாக கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Read more about: simbu சிம்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X