விராட் கோலிக்கு பிடித்த பாடல்.. சிம்பு வைத்த செம ட்விஸ்ட்.. இது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தெரியுமா?
சென்னை: மார்ச் மாதம் முதல் ஐபிஎல் சீசன் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல ஒவ்வொரு அணியும் வெற்றி பெறும் முனைப்போடு விளையாடி வருகின்றனர். இந்நிலையில், பெங்களூரு அணியின் நட்சத்திர வீரராக கலக்கி வரும் விராட் கோலி, தனக்கு மிகவும் பிடித்த பாடல் இது தான் என்று சிம்பு நடிப்பில் வெளியான படத்தை தெரிவித்திருக்கிறார். இதை கேட்டு சிம்பு ரசிகர்கள் மட்டும் அல்ல நடிகர் சிம்புவும் அவரது ஃபேனாக மாறிவிட்டாராம். விராட் கோலிக்கு பிடித்த பாட்டை கேட்டால் அசந்து போயிடுவீங்க.
18-வது ஐபிஎல் டி20 சீசன் தொடங்கி ஏறக்குறைய 74 ஆட்டங்கள் முடிந்துவிட்டநிலையில் இன்னும் எந்த அணிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இருக்கிறது என்பதை ஊகிக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. நடப்பு சாம்பியன், முன்னாள் சாம்பியன்கள், 18 ஆண்டுகளாக கோப்பைக்காக காத்திருக்கும் அணி, முதல் முறையாக கோப்பைக்காக போராடும் அணிகள் என ஒவ்வொரு அணியும் ப்ளே ஆஃப்-க்குள் செல்ல தங்களது முழுத் திறமையையம் வெளிப்படுத்தி விளையாடி வருகிறார்கள்.இந்நிலையில், ஐபில் அணியில் தங்களுக்கு பிடித்த அணிகளை ரசிகர்கள் தேர்ந்தெடுத்து வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இதில், திரை பிரபலங்களும் அதிகம் இருக்கின்றனர்.

குறிப்பாக சென்னை அணி விளையாடும் ஒவ்வொரு மேட்சையும் காண வருகை தரும் திரை பிரபலங்கள் ரசிகர்களோடு ரசிகனாக அமர்ந்து ரசிப்பார்கள். தல தோனிை பிடிக்காதவர்கள் எவரும் இல்லை. அதேபோன்று கிரிக்கெட்டில் கிங் என்று அழைக்கப்படும் விராட் கோலிக்கும் ரசிகர்கள் ஏராளம் பேர் உள்ளனர். கடந்த சீசனை காட்டிலும் நடப்பு சீசனில் பெங்களூரு கோப்பையை வெல்லும் முனைப்போடு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதில், கோலியின் ஆட்டம் தான் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. கடைசி வரை நின்று வெற்றி வாய்ப்பை தேடி தருகிறார்.
கோலிக்கு பிடித்த பாடல்: இந்நிலையில், விராட் கோலி சமீபத்தில் அளித்த பேட்டியில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இதுதான். தற்போது இதைத்தான் அதிக முறை கேட்டு வருவதாக தெரிவித்திருக்கிறார். தனது கையில் இருந்த போனை எடுத்து காட்டிய கோலி; அதில் சிம்பு நடித்த பத்து தல படத்தில் இடம்பெற்ற நீ சிங்கம் தான் பாடலை குறிப்பிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து கோலியின் வீடியோவை பார்த்த சிம்பு அதனை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து அதில் விராட் கோலியை டேக் செய்து நீ சிங்கம் தான் என நெகிழ்ச்சியுடன் போஸ்ட் ஒன்றை பதிவிட்டிருக்கிறார். இதனை பார்த்த சிம்புவின் ரசிகர்கள் இதனை வைரலாக்கி வருகின்றனர். மேலும், நீ சிங்கம் பாடல் தற்போது கோலிக்காக டெடிகேட் செய்தும் வருவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா பத்து தல படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் சிம்பு, கெளதம் கார்த்திக், பவானி ஷங்கர், கெளதம் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கடந்த 2023இல் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. பத்து தல படத்தில் சிம்புவிற்கு ஹீரோயின் கிடையாது என்பது பரவலாக பேசப்பட்டது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். நீ சிங்கம் தான பாடலை விவேக் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











