Simbu Salary: படத்தோட பட்ஜெட்டே அவ்வளவு தான்... சிம்பு கேட்ட சம்பளத்தால் அதிர்ச்சியான தயாரிப்பாளர்

சென்னை: ஆத்மன் சிம்பு தற்போது கமல் தயாரிக்கும் STR 48 படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

தேசிங் பெரியசாமி இயக்கும் இந்தப் படம் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது.

STR 48 படத்திற்காக லண்டன் சென்று சில பயிற்சிகளை எடுத்து வருகிறாராம் சிம்பு.

இந்நிலையில், தனது புதிய படத்திற்காக சிம்பு கேட்ட சம்பளம் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன.

 Simbu Salary: Simbu is hiking his salary of 20 crore rupees to act in a film

சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய சிம்பு: பத்து தல படத்தைத் தொடர்ந்து STR 48ல் நடிக்கவுள்ளார் சிம்பு. தேசிங் பெரியசாமி இயக்கவுள்ள இந்தப் படத்தின் கதை சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக எழுதப்பட்டது என சொல்லப்படுகிறது. பிரம்மாண்டமாக உருவாகும் STR 48 படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது. இந்நிலையில் STR 48 படத்திற்காக லண்டனில் ஸ்பெஷல் ட்ரெய்னிங் எடுத்து வருகிறாராம் சிம்பு.

அவர் சென்னை திரும்பியதும் STR 48 படப்பிடிப்பு தொடங்கப்படும் என சொல்லப்படுகிறது. இதனிடையே சிம்புவின் புதிய படம் குறித்த பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறதாம். மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்கள் மூலம் கம்பேக் கொடுத்த சிம்புவுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் தேடி வருகின்றன. ஏற்கனவே வெந்து தணிந்தது காடு இரண்டாம் பாகம் உருவாகும் என சொல்லப்பட்டது.

 Simbu Salary: Simbu is hiking his salary of 20 crore rupees to act in a film

அதேபோல், சிங்கப்பூர் சலூன் படத்தில் கமிட்டாகிவிட்டு பின்னர் சிம்பு விலகிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. அதேநேரம் STR 48 படத்தை முடித்துவிட்டே அடுத்த ப்ராஜக்ட் குறித்து முடிவெடுக்கவுள்ளாராம் சிம்பு. ஆனால், இந்த கேப்பில் தயாரிப்பாளர் ஒருவர் சிம்புவிடம் கால்ஷீட் கேட்டு சென்றதாக தெரிகிறது. மொத்தமாக 40 கோடி பட்ஜெட்டில் ஒரு படத்தை தயாரிக்கலாம் என பிளான் செய்துவிட்டு சிம்புவிடம் சென்றுள்ளார்.

ஆனால், சிம்பு 20 முதல் 30 கோடி ரூபாய் வரை சம்பளம் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநாடு படத்திற்குப் பின்னர் தனது படங்களுக்கு நல்ல ஓப்பனிங் இருப்பதால் சம்பளத்தை அதிகரித்துவிட்டதாகவும் சிம்பு தரப்பில் இருந்து சொல்லப்பட்டதாம். ஆனால், படத்தின் மொத்த பட்ஜெட்டே 40 கோடி தான், இதில் சம்பளம் மட்டும் 30 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்றால் தாக்குப்பிடிக்காது என அப்படியே யூடர்ன் அடித்துவிட்டாராம்.

ஏற்கனவே STR 48 படத்திற்கும் சிம்பு அதிகமாக சம்பளம் கேட்டதாக சொல்லப்பட்டது. ஆனால், கமல் இப்போதைக்கு அது முடியாது படம் வெளியாகட்டும் அதுவரை 20 கோடி மட்டுமே சம்பளமாக முடிவு செய்துகொள்வோம் எனக் கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது. விக்ரம் படத்தின் வெற்றியால் வெறித்தனமான கம்பேக் கொடுத்துள்ளார் கமல். அதனால், இப்போது ராஜ்கமல் பேனரில் படம் பண்ணுவதே பெரிய விஷயம் தான் என சிம்புவும் கமல் பேச்சுக்கு மறுப்பு தெரிவிக்கவில்லையாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X