வந்தான்.. சுட்டான்.. ரிப்பீட்டு.. இது சிம்பு வெர்ஷன்.. வைரலாகும் மாநாடு படத்தின் டப்பிங் வீடியோ!
சென்னை: மாநாடு படத்தின் டிரைலர் 1 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ள நிலையில், மாநாடு படத்தின் டப்பிங் வீடியோவை ஷேர் செய்துள்ளார் நடிகர் சிம்பு.
மாநாடு டிரைலரில் எஸ்.ஜே. சூர்யா வெறித்தனமாக பேசிய அந்த வசனம் வேற லெவலில் வைரலாக அதே வசனத்தை சிம்பு இந்த வீடியோவில் பேசி இருப்பதை பார்த்து ரசிகர்கள் இன்பதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தீபாவளிக்கு அண்ணாத்த மற்றும் ஜெய் பீம் உடன் சிம்புவின் மாநாடு படமும் போட்டியிடுகிறது.

டைம் லூப் படம்
தமிழ் சினிமாவிலேயே இதுவரை வராத டைம் லூப் கான்செப்ட்டில் நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படம் உருவாகி உள்ளது. ஹாலிவுட் படமான டெனெட் படத்தின் இன்ஸ்பிரேஷனில் இயக்குநர் வெங்கட் பிரபு இந்த படத்தை இயக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வைரலான வசனம்
மீண்டும் மீண்டும் நடக்கும் ஒரு விஷயத்தை எஸ்.ஜே. சூர்யா "வந்தான்.. சுட்டான்.. ரிப்பீட்டு" என டிரைலரில் சொல்ல அந்த வசனம் சமூக வலைதளங்களில் வேற லெவலில் டிரெண்டாகி வருகின்றன. பல்வேறு விஷயங்களுக்கும் அந்த வசனத்தை ஒரு மீம் மெட்டீரியலாக பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர்.

ஒரு கோடி வியூஸ்
சிம்புவின் மாநாடு டிரைலர் வெறும் 5 நாட்களில் ஒரு கோடி வியூஸ் கடந்து அபார சாதனையை படைத்துள்ளது. சிம்புவின் மாநாடு படத்திற்காக ஏகப்பட்ட ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட் பண்ணிக் கொண்டிருப்பது இந்த ரெக்கார்டிலேயே தெரிகிறது. நடிக்க கூடாது என ரெட் கார்டு போட்ட தடை நீங்கியதும் அவர் பல ரெக்கார்டுகளை செய்ய ஆரம்பித்து விட்டார்.

சிம்பு வெளியிட்ட வீடியோ
நடிகர் சிம்பு ஸ்லிம் ஆனதில் இருந்தே சோஷியல் மீடியாவில் செம ஆக்டிவாக உள்ளார். அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வரும் அவர், தற்போது மாநாடு படத்தின் டப்பிங் வீடியோவை ஷேர் செய்து ரசிகர்களுக்கு செம விருந்து கொடுத்துள்ளார்.
Vandhan.. suttan.. sethaan.. REPEATU♾️! 😂#Maanadu #MaanaduDubbing
— Silambarasan TR (SilambarasanTR_) October 6, 2021
#Atmanvp_offl iam_SJSuryah thisisysr pic.twitter.com/UwUwyHtNWY
வந்தான் சுட்டான் ரிப்பீட்டு
மாநாடு படத்தின் டிரைலரில் எஸ்.ஜே. சூர்யா பேசும் "வந்தான்.. சுட்டான்.. ரிப்பீட்டு" வசனத்தை டப்பிங்கின் போதே நடிகர் சிம்பு பேசி நிச்சயம் இந்த வசனம் வைரலாகும் என நினைத்த அவர் அதனை வீடியோவாக எடுத்து இருந்த நிலையில், தற்போது ரசிகர்களுக்காக அதனை ஷேர் செய்துள்ளார்.

தீபாவளி சரவெடி தான்
ரஜினிகாந்தின் அண்ணாத்த, சூர்யாவின் ஜெய் பீம் மற்றும் சிம்புவின் மாநாடு என இந்த தீபாவளி சினிமா ரசிகர்களுக்கு சரவெடி தீபாவளியாகவே இருக்கப் போகிறது என்பதில் எந்தவொரு டவுட்டும் இல்லை. பாக்ஸ் ஆபிஸில் எந்த படம் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை விட ரசிகர்களின் மனங்களை இந்த தீபாவளிக்கு யார் வெல்லப் போகிறார் என்பது தான் மிகப் பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











