சிம்பு - சினேகாவின் சிலம்பாட்டம்
| Click here for more images |
காளை படம் அறிவிக்கப்பட்டபோது அதில் அட்டகாசமான ஒரு அத்தை வேடத்தை வைத்திருந்தார் சிம்பு. இதில் நடிக்க சினேகாவை அவர் அணுகினார். ஆனால் அத்தை வேடத்தில் நடிக்கும் அளவுக்கு எனக்கு வயதாகிவிடவில்லை. வேண்டுமானால் உங்களுடன் ஆடும் வாய்ப்பு கிடைத்தால் நடிக்க ரெடி என்று கூறி வாய்ப்பை மறுத்து விட்டாராம் சினேகா.
இதை அவர் சில பத்திரிக்கையாளர்களிடம் சொல்லப் போக கடுப்பாகிய சிம்பு, சினேகாவை காய்ச்சி எடுத்து விட்டார். என்னுடன் ஆடவும் ஒரு தகுதி வேண்டும். முடியாது என்றால் விட்டு விட வேண்டும், அதை விட்டு தேவையில்லாமல் பேசக் கூடாது என்று சொல்லி சினேகாவுக்கு நோஸ் கட் கொடுத்தார்.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக சிம்புவுடன் சினேகா இணைந்து நடிக்கிறார். சிலம்பாட்டம் படத்தில்தான் இந்த கூட்டணி.
லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் 25வது படம்தான் சிலம்பாட்டம். கேமராமேன் சரவணன் முதல் முறையாக இப்படத்தின் மூலம் இயக்குநராகிறார். கெட்டவன் படத்தை ஒத்திவைத்து விட்ட சிம்பு, இப்போது சிலம்பாட்டத்தில் நடிக்க ஆயத்தமாகி விட்டார்.
படத்தில் 2 ஹீரோயின்கள். அதில் ஒரு ஹீரோயினாக சினேகா நடிக்கிறார். இதை சினிமா உலகம் ஆச்சரியமாக பார்க்கிறது. காளை படத்தில் நடிக்க மறுத்த்தற்காக இருவரும் முட்டிக் கொண்டார்கள். இப்போது இணைந்த நடிப்பதால் என்ன நடந்த தோ என்று ஆச்சரியக் கேள்வி எழுந்துள்ளது.
சிலம்பாட்டம் படத்தில் நடிக்க வேண்டும் சிம்புவே சினேகாவை அணுகியுள்ளார். அவரும் உடனே சரி என்று சொல்லி விட்டார். அத்தோடு படத்திற்காக கால்ஷீட்களையும் ஒதுக்கியுள்ளாராம்.
தற்போது சினேகா, தெலுங்கில் 3 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழில் பிரிவோம் சந்திப்போம், ஷாமுடன் இன்பா, மம்முட்டியுடன் அறுவடை, லாரன்ஸுடன் பாண்டி என படு பிசியாக உள்ளார் சினேகா.


Click it and Unblock the Notifications











