கல்யாண வரம் வேண்டியா? கோயில் கோயிலாக சுற்றும் சிம்பு.. நேற்று திருப்பதி, இன்று மதுரை.. செம வைரல்!

சென்னை: நடிகர் சிம்பு கோயில் கோயிலாக சுற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

வெங்கட் பிரபுவின் மாநாடு படத்திற்கு முன்பாக, சுசீந்திரன் இயக்கத்தில் சின்ன ஷெட்யூலில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

இந்நிலையில், திருப்பதி, மதுரை என ஆன்மீக சுற்றுலா செய்து வரும் சிம்புவின் புகைப்படங்கள் கசிந்துள்ளன.

எப்பவுமே மாஸ்

எப்பவுமே மாஸ்

தல அஜித்தை போல சிம்புவும் எப்பவுமே மாஸ் தான். எத்தனை படங்கள் தோல்வி அடைந்தாலும், அவரது ரசிகர்கள் பலம், அவரை சுற்றி எப்பவுமே இருக்கும். ரசிகர்களுக்காக மறுபடியும் வெயிட்டான கம்பேக் உடன் சிம்பு வர உள்ளார். அடுத்தடுத்த பெரிய புராஜெக்ட் படங்களிலும் சிம்பு கமீட் ஆகி வருவது அதனை உறுதி செய்துள்ளது.

அரசியல் மாநாடு

அரசியல் மாநாடு

வெங்கட் பிரபுவின் அரசியல் படமாக மாநாடு படம் பிரம்மாண்டமாக உருவாக உள்ளது. வரும் நவம்பர் முதல் மாநாடு படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிம்புவுக்கு ஹீரோயினாக சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தில் நடித்த கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க உள்ளார். எஸ்.ஜே. சூர்யா, மனோஜ், எஸ்.ஏ. சந்திரசேகர் என நட்சத்திர பட்டாளமே மாநாடு செய்ய காத்திருக்கிறது.

சின்ன கேப்பில்

சின்ன கேப்பில்

மாநாடு படத்தின் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்னதாக உள்ள ஒரு சின்ன கேப்பில் இயக்குநர் சுசீந்திரன் படத்தில் நடிகர் சிம்பு நடித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால், அந்த படம் குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏழுமலையான் தரிசனம்

ஏழுமலையான் தரிசனம்

நேற்று வேட்டி சட்டை அணிந்து கொண்டு, திருப்பதியில் ஏழுமலையானை தரிசித்த நடிகர் சிம்பு, காரில் ஏறும் போது தனது புதிய கெட்டப் தெரிந்து விடக் கூடாது என பட்டுத் துண்டால் முகத்தை மறைத்தபடி காரில் ஏறி பறந்து சென்றுள்ளார். திடீரென திருப்பதிக்கு சிம்பு வந்ததன் காரணம் என்ன என புரியாமல் ரசிகர்கள் இருந்த நிலையில், இன்று மதுரையில் சிக்கி உள்ளார் சிம்பு.

மீனாட்சி அம்மனை வேண்டி

மீனாட்சி அம்மனை வேண்டி

முகத்தை கருப்பு மாஸ்க் போட்டு முற்றிலும் மறைத்துக் கொண்டு, தலையில் தொப்பி அணிந்து கொண்டு, பேன்ட், சட்டையில் மதுரை மீனாட்சி அம்மனை தரிசிக்க வந்த சிம்புவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நேற்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சிம்பு, இன்று மதுரை மீனாட்சி அம்மனிடம் அப்படி என்னத்தான் வேண்டிக் கொண்டார் என்பதே சமூக வலைதளத்தில் பேச்சாக அடிபட்டு வருகிறது.

கல்யாண வரம் வேண்டியா

கல்யாண வரம் வேண்டியா

மேலும், நடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணம் ஆக போகிறது என்றும், அதற்காகத் தான் கோயில் கோயிலாக சென்று பரிகாரம் செய்து வருகிறார் என்றும், இந்த ஆன்மிக சுற்றுலாவின் காரணமும் அதுதான் என்றும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். எதுவாக இருந்தாலும் சிம்புவே சீக்கிரம் அந்த நல்ல சேதியை சொல்லி விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகைகளுடன் காதல்

நடிகைகளுடன் காதல்

சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வரும் சிம்பு, இயக்கம், இசை, பாட்டு பாடுவது, நடிப்பது என சகலகலா வல்லவனாக அசத்தி வருகிறார். வல்லவன் பட சமயத்தில் நயன்தாராவுடன் காதல் கொண்டார். பின்னர், இருவருக்கும் பிரேக்கப் ஆனது. வாலு படத்தின் போது ஹன்சிகாவுடன் காதல் பின்னர் அதுவும் செட் ஆகவில்லை. திரிஷாவை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்றும் சமீபத்தில் வதந்தி ஒன்று பரவியது. சிம்புவை கட்டிக்கப் போகும் அந்த பெண் யார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சிகப்பு ரோஜாக்கள் 2

சிகப்பு ரோஜாக்கள் 2

சுசீந்திரன் படம், ஹன்சிகாவுடன் மஹா மற்றும் வெங்கட் பிரபுவின் மாநாடு படங்களை தொடர்ந்து, உலக நாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து சிகப்பு ரோஜாக்கள் 2 படத்தில் சிம்பு நடிக்கப் போகிறார் என்கிற தகவலும் தீயாய் பரவி வருகிறது. முன்னதாக இந்தியன் 2 படத்தில் சிம்பு நடிக்க இருந்த நிலையில், கடைசி நேரத்தில் அவர் அந்த படத்தில் இருந்து விலகியது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X