ஏஐ பற்றி படிக்கும் சிம்பு?.. அரசன் பட ஷூட்டிலிருந்து சும்மா பிரேக் எடுக்கவில்லை.. எஸ்டிஆர் கலக்குறாரு
சென்னை: சிம்பு இப்போது தனது இரண்டாவது இன்னிங்ஸை சினிமாவில் தொடங்கி கண்ணும் கருத்துமாக நடித்துவருகிறார். இப்போது அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடித்துவருகிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்பை இப்படம் சம்பாதித்திருக்கிறது. படத்தின் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் சமீபத்தில் முடிந்தது. இந்நிலையில் சிம்பு குறித்து புதிய தகவல் ஒன்று சோஷியல் மீடியாவில் வட்டமடிக்க ஆரம்பித்திருக்கிறது.
கோலிவுட்டில் மிகப்பெரிய இடத்தை பிடிப்பார் என்று கணிக்கப்பட்ட சிம்பு இடையில் சில விஷயங்களால் முழு கவனத்தை சினிமாவில் செலுத்த முடியாமல் திணறினார். இதன் காரணமாக உடல் எடை கூடிய அவர்; நடிப்பதற்கும், நடப்பதற்குமே கஷ்டப்பட்டார். ஒருவழியாக அனைத்து எண்ணங்களையும் ஒழுங்குப்படுத்தி உடல் எடையை குறைத்து மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். இது அவரது ரசிகர்களுக்கு உச்சக்கட்ட மகிழ்ச்சி.
ஃபுல் ஃபார்மில் சிம்பு: தனது இரண்டாவது இன்னிங்ஸில் படு பிஸியாக நடித்துவருகிறார். மாநாடு, வெந்து தணிந்தது காடு என வரிசையாக ஹிட் படங்களில் நடித்த வருக்கு பத்து தல, தக் லைஃப் ஆகிய இரண்டு படங்களும் சறுக்கலை கொடுத்தன. இருந்தாலும் அவரது நடிப்புக்கு பக்கா மாஸ் ரெஸ்பான்ஸ் கிடைத்தது. இப்படி வின்டேஜ் சிம்புவாக அவர் மாறி வந்திருப்பதை பார்த்து திரைத்துறையே ஆச்சரியத்தில்தான் இருக்கிறது.

சிம்புவின் பக்கா லைன் அப்: சிம்புவின் லைன் அப்பை பொறுத்தவரை சூப்பராக அமைந்திருக்கிறது. அஸ்வத் மாரிமுத்து, தேசிங்கு பெரியசாமி ஆகியோரின் இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். அவர்களது இயக்கத்தில் நடிப்பதற்கு முன்னதாக வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடித்துவருகிறார். கலைப்புலி தாணு படத்தை தயாரிக்கிறார். கண்டிப்பாக இந்தப் படம் கோலிவுட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிகிறது.
என்ன கதை?: இந்தக் கூட்டணி வடசென்னை படத்திலேயே அமைந்திருக்க வேண்டியது. ஆனால் சில காரணங்களால் அப்போது நடக்கவில்லை. இப்போது இணைந்திருக்கும் அரசன் படமும் வடசென்னை யுனிவர்ஸில்தான் உருவாகிறது. மறைந்த ரவுடி மயிலை சிவாவின் வாழ்க்கை வரலாறைத்தான் இந்தப் படத்தில் எடுப்பதாக கூறப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி ஒரு ஷெட்யூல் முடிந்திருக்கிறது. அடுத்தகட்ட ஷூட்டிங் மார்ச் மாதத்தில் தொடங்கும் என தெரிகிறது.
அமெரிக்காவில் சிம்பு: இந்நிலையில் சிம்பு குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நிறைய விஷயங்களை தெரிந்துகொள்வதில் ரொம்பவே ஆர்வமாக இருப்பவர் அவர். அதன் காரணமாகத்தான் அவரால் இயக்கம், இசையமைப்பு, பாடல்கள் எழுதுவது என பல துறைகளில் தடம் பதிக்க முடிந்தது. தற்போது ஏஐ மயம் எங்கும் ஆகிவிட்டதால் அதுகுறித்து படிப்பதற்காக அமெரிக்கா சென்றிருக்கிறாராம். அரசன் படத்தின் ஷூட்டிலிருந்து எடுத்த பிரேக்கை இதற்காக செலவழிக்கிறாராம். ஏற்கனவே கமல்ஹாசன் அமெரிக்கா சென்று ஏஐ குறித்து படித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











