கமலை வைத்துக்கொண்டே பாடம்.. திருமணம் பற்றி தக் லைஃப் கொடுத்த சிம்பு.. செம ஓபன் டாக்

சென்னை: எஸ்டிஆர் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் சிம்பு தற்போது கமல் ஹாசனுடன் தக் லைஃப் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். முதன்முறையாக கமலுடன் அவர் இணைந்து நடித்திருப்பதால் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. படத்திலிருந்து வெளியான முதல் சிங்கிளான ஜிங்குச்சா பாடலில் சிம்புவின் நடனம் பட்டையை கிளப்பியது. இந்தச் சூழலில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் சிம்பு பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

டி.ராஜேந்தரின் மகனான சிம்பு சிறு வயதிலிருந்தே நடித்துவருபவர். நடிப்பு மட்டுமின்றி இள வயதிலேயே வல்லவன் ஆகிய படத்தை அவர் இயக்கினார். அதேபோல் பாடல்கள் பாடுவது, எழுதுவது, இசையமைப்பது என சினிமாவில் இருக்கும் பெரும்பான்மையான ப்ளாட்பார்ம்களில் தனது தடத்தை அழுத்தமாக பதித்தவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கோலிவுட்டில் அதீத திறமை பெற்றவர்களில் ஒருவர் என்கிற பெயரையும் அவர் எடுத்திருக்கிறார்.

இடையில் எடுத்த பிரேக்: ஃபுல் ஃபார்மில் சென்றுகொண்டிருந்த சிம்புவுக்கு இடையில் இரண்டு காதல் தோல்விகள் அரங்கேறின. நயனுடனான பிரேக்கப்புக்கு பிறகு அவர் நடித்துக்கொண்டுதான் இருந்தார். ஆனால் ஹன்சிகாவுடனான காதல் முறிவுக்கு பிறகு அவரது சிந்தனைகள் எல்லாம் ஆன்மீகம் பக்கம் சென்றது. மேலும் தயாரிப்பாளர் சங்கத்தில் சில பிரச்னைகள், உடல் எடை அதிகரித்தல் என சிம்புவால் ஒருமித்த கவனத்தோடு சினிமாவை அணுக முடியவில்லை. இதன் காரணமாக இடையில் கொஞ்சம் பிரேக் எடுத்தார்.

சிம்புவின் இரண்டாவது இன்னிங்ஸ்: இப்படிப்பட்ட நிலைமையில்தான் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி, உடல் எடையை குறைத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். அதில் அவர் நடித்த மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. அந்த வெற்றிகள் கொடுத்த உற்சாகத்தின் காரணமாக மீண்டும் பழைய சிம்புவாக மாறி தொடர்ந்து படங்களில் கமிட்டாகியிருக்கிறார் அவர். எனவே அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட வைபில் இருக்கிறார்கள்.

செம லைன் அப் வைத்திருக்கும் சிம்பு: சிம்பு அடுத்ததாக தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்போதைய தமிழ் சினிமாவின் பல்ஸை தெரிந்துகொண்டு சரியாக இளம் இயக்குநர்களுடன் அவர் கைகோர்த்திருப்பது ஆரோக்கியமான ஒன்றே. எனவே வின்டேஜ் சிம்புவை இனி பார்க்கலாம் என்கிற நம்பிக்கை திரைத்துறையில் பிறந்திருக்கிறது.

Simbu talking about marriage while in Thug Life stage has become a trend

தக் லைஃப்: இதற்கிடையே ஒருபக்கம் இளம் இயக்குநர்களுடன் கைகோர்த்த அவர்; மறுபக்கம் சீனியர் இயக்குநர் மணிரத்னத்துடனும் இணைந்திருக்கிறார். அதன்படி கமல் ஹாசனுடன் தக் லைஃப் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். முதன்முறையாக கமலும், சிம்புவும் இணைந்து நடிப்பதால் இருவரும் ஸ்க்ரீனில் எந்த மாதிரியான எனர்ஜியை கொடுக்கப்போகிறார்கள் என்ற ஆவல் அதிகரித்திருக்கிறது. இந்தப் படம் வரும் ஜூன் மாதம் ரிலீஸாகவிருக்கிறது. சமீபத்தில்தான் படத்திலிருந்து முதல் சிங்கிளான ஜிங்குச்சா பாடல் வெளியானது.

சிம்புவின் பாடம்: இந்நிலையில் சமீபத்தில் திரிஷா, கமல் ஹாசன், சிம்பு ஆகியோர் தக் லைஃப் படம் தொடர்பான நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டார்கள். அதில் திருமணம் தொடர்பாக பேசிய சிம்பு, "திருமணம் என்பது ஒரு பிரச்னையே இல்லை. ஆனால் திருமணம் ஆன பிறகு ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்க வேண்டும் என்கிற மனப்பான்மை இல்லாததுதான் பிரச்னை. நான்தான், எனது வாழ்க்கைதான், நீ இல்லை என்றால் இன்னொருத்தர், நீ இல்லை என்றால் இன்னொருத்தி என்ற எண்ணம் அதிகரித்திருக்கிறது.

ஒருவர் இல்லையென்றால் இன்னொருவர் வாழ்க்கையில் வந்துகொண்டுதான் இருப்பார். அதனால் இருப்பவர்களை விட்டுட்டு போகக்கூடாது. எனவே திருமணம் ஒரு பிரச்னை இல்லை. நமக்கான சரியான ஒருவர் வரும்போது திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை நன்றாக இருக்கும்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X