»   »  3 காதலைத் தாண்டி வந்து விட்டேன் என்பதையே நம்ப முடியவில்லை... சிம்பு

3 காதலைத் தாண்டி வந்து விட்டேன் என்பதையே நம்ப முடியவில்லை... சிம்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் காதலிப்பதே வேடிக்கை தான். அதில் நான் 3 காதலை தாண்டி வந்துவிட்டேன் என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை. ஒரு காலத்தில் ரஜினி ஆக ஆசைப்பட்டேன். தற்போது அந்த ஆசை இல்லை என்று சிம்பு தெரிவித்துள்ளார்.

2 ஆண்டுகளாக சிம்புவின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு அவரின் படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இதனால் மனிதர் சந்தோஷத்தில் உள்ளார்.

இந்நிலையில் அவர் முன்னணி நாளிதழுக்கு அளித்த பேட்டியில் காதல் பற்றி கூறுகையில்,

நயன், ஹன்சிகா

நயன், ஹன்சிகா

காதல் முறிந்துவிட்டதே என்று அதையே நினைத்துக் கொண்டிருக்க முடியாது. இதை உணர்ந்ததால் தான் என்னால் தற்போதும் ஹன்சிகா, நயன்தாராவுடன் நடிக்க முடிகிறது.

காதல்

காதல்

தற்போது காதல் ஒரு பிளஸ் மற்றும் ஒரு மைனஸ் ஆக உள்ளது. முன்பெல்லாம் காதல் தோல்வி அடைந்தால் அந்த பெண்ணை பழிவாங்கத் துடித்தோம். தற்போது அந்த எண்ணம் இல்லாமல் அடுத்த வேலையை கவனிக்கச் செல்வது பிளஸ். ஆனால் பலர் இஷ்டத்திற்கு ஜாலியாக காதலிக்கிறார்கள். அதை காதல் என்று வேறு தவறாக நினைப்பது தான் மைனஸ்.

காதல் வேடிக்கை

காதல் வேடிக்கை

நான் காதலிப்பதே வேடிக்கை தான். என்னை போன்றவன் காதலிக்க முடியாது. அப்படி இருந்தும் நான் 3 காதலை தாண்டி வந்துவிட்டேன் என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை.

காதல் தோல்வி

காதல் தோல்வி

காதலில் தோல்வி ஏற்பட்டால் உடனே அழக் கூடாது. நடந்தது நன்மைக்கே என்று நினைத்து வாழ்க்கையைத் தொடர வேண்டும்.

2015ல் திருமணம்

2015ல் திருமணம்

நான் ஏன் திருமணம் செய்ய வேண்டும்? நான் ஒன்றும் திருமணத்திற்கு எதிரானவன் கிடையாது. நல்ல புரிதல் உள்ள ஆணும், பெண்ணும் செய்து கொள்வது தான் திருமணம். தற்போது விவாகரத்தும் அதிகரித்துவிட்டது. சூழ்நிலைக்கேற்ப என்னையே மாற்றிக் கொள்வேன். யாரோ ஒரு பெண்ணை பார்த்து, பேசி, திருமணம் செய்து கொள்ள முடியாது. சாகும் வரை இவளிடம் தோற்கலாம் என்று நினைக்கும் அளவுக்கு உள்ள பெண் கிடைத்த பிறகே திருமணம்.

ரஜினி

ரஜினி

ஒரு காலத்தில் ரஜினி சார் போன்று ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. தற்போது அது இல்லை என்றார் சிம்பு.

English summary
Simbu told that though someone like him cannot fall in love he has so far crossed 3 loves.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil