சிங்கிளா ஜாலியாக இருக்கிறேன்: சொல்கிறார் சிம்பு
சென்னை: காதலிக்கும் போது செய்ய முடியாதவற்றை இப்போது என்னால் செய்ய முடிகிறது என்று சிம்பு தெரிவித்துள்ளார்.
சிம்புவுக்கும் காதலுக்கும் ஏழாம் பொருத்தமாகவே உள்ளது. முதலில் பெரிய நடிகர் ஒருவரின் மகளை காதலித்தார். அதன் பிறகு நயன்தாராவை காதலித்து பிரிந்தார்.
நயனுக்கு பிறகு ஹன்சிகாவை காதலித்து அதுவும் தோல்வி அடைந்தது. இந்நிலையில் காதல் குறித்து சிம்பு கூறுகையில்,

காதல்
காதல் ஒரு அனுபவம். பலர் அதை அனுபவிக்காமல் திருமணம் செய்து குழந்தை பெத்துக்கிறாங்க.

குடும்பம்
குடும்பம், குழந்தை பற்றி நினைத்தால் நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் அதை தானே அனைவரும் செய்கிறார்கள். இதுவரை திருமணம் எனக்கு கைகூடவில்லை.

திருமணம்
எனக்கு திருமணம் ஒத்து வருமா என்றும் தெரியவில்லை. நான் வேதாந்தம், தத்துவம் என்று போய் கொண்டிருக்கிறேன். என் வருங்கால மனைவியையும் அதே வழியில் செல்ல கட்டாயப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை.

சிங்கிள்
சிங்கிளாக இருப்பது ஜாலியாக இருக்கு. காதலிக்கும் போது செய்ய முடியாதவற்றை எல்லாம் இப்போது என்னால் செய்ய முடிகிறது.

இப்போதைக்கு
இப்போதைக்கு எனக்கு திருமணம் கிடையாது. இது குறித்து யோசிக்க எனக்கு இன்னும் நேரம் வேண்டும் என்று சிம்பு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











