'என் முதல் காதல்'... விழா மேடையில் சீக்ரெட் உடைத்த சிம்பு!

'பியார் பிரேமா காதல்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் சிம்பு, தனது முதல் காதல் யாருக்கானது என்பதை பகிர்ந்து கொண்டார்.

Recommended Video

தனது முதல் காதல் அனுபவம் பற்றி சிம்பு!-வீடியோ

சென்னை: தனது முதல் காதல் அனுபவம் பற்றிய கேள்விக்கு நடிகர் சிம்பு பதில் அளித்துள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில், இளன் இயக்கியிருக்கும் படம் 'பியார் பிரேமா காதல்'. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாணும், ரைசா வில்சனும் இப்படத்தில் கதாநாயகன், கதாநாயகியாக நடித்துள்ளனர்.

Simbu tells about his first love

முழு நீள காதல் படமான இதற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையின் நடைபெற்றது. இதில் இசைஞானி இளையராஜா, இயக்குனர்கள் சீனுராமசாமி, அமீர், ராம், நடிகர்கள் தனுஷ், சிம்பு, விஜய்சேதுபதி, ஜிவி. பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நடிகர் சிம்புவை மேடைக்கு அழைத்த தொகுப்பாளர்கள், அவரது முதல் காதல் அனுபவம் பற்றி கேள்வி கேட்டனர்.

அதற்கு பதிலளித்த சிம்பு, "என் முதல் காதல் என் ரசிகன்தான்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், " இது இசை வெளியீடு மாதிரி இல்லாமல் சினிமா பிரபலங்களின் கெட் டூ கெதர் மாதிரி இருக்கிறது. நானும், யுவனும் எல்லா விஷயத்திலும் ஒரே மாதிரி தான். யுவன் எனக்கு அப்பா மாதிரி, அப்பா மாதிரி என்னை பார்த்துக் கொள்வார். எதிரி கூட நல்லா இருக்கணும்னு நினைப்பவர் யுவன். அவருக்காக சேர்ந்த கூட்டம் தான் இது" என்றார்.

நிகழ்ச்சியில் முன்னதாக வல்லவன் படத்தில் இடம் பெற்ற 'லூசுப்பெண்ணே பாடலை' யுவன் இசையில் சிம்பு பாடினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X