தெலுங்குப் பட ரீமேக்கில் சிம்பு!

கேபிள் ராஜா என்ற கேரக்டரில், கேபிள் டிவி ஆபரேட்டராக நடிக்கிறார் சிம்பு.
வேதம் படத்தில் அல்லு அர்ஜுன் நடித்திருந்தார். ஒரிஜினல் படத்தில் நாயகியாக நடித்த அனுஷ்காதான் இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடி.
மோகன் பாபுவின் மகன் மஞ்ச் மனோஜ் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
வேதம் படத்தை இயக்கிய க்ரிஷ்தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார்.
இசை யுவன் சங்கர் ராஜா. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். விடிவி புரொடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் பாக்ஸ் பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. மக்கள் தொடர்பாளராக நிக்ல் பணியாற்றுகிறார்.
இந்தப் படம் குறித்து சிம்பு கூறுகையில், "கிட்டத்தட்ட 145 நாட்கள் சும்மா சுத்திக்கிட்டே இருந்துட்டேன். இப்போதான் வானம் படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளேன். அனுஷ்காவின் மிகப்பெரிய ரசிகன் நான். இந்தப் படத்தில் யுவன், நீரவ் என டாப் டெக்னீஷியன்கள் அமைந்துள்ளனர். அதுவே பெரிய நம்பிக்கை தருகிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











