'யாரையும் குறை சொல்லல.. நான் அரசியல் கலக்கமாட்டேன்..' - சிம்பு அடுத்த அதிரடி
Recommended Video

சேலம் : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அனைவரும் போராடிக் கொண்டிருக்கையில், தமிழக மக்கள் மத்தியில் கர்நாடக மக்கள் மேலிருக்கும் அபிப்ராயத்தை மாற்றுவதற்காக ஒரு ஐடியா கொடுத்து கர்நாடக மக்கள் மத்தியிலும் பிரபலமானார் சிம்பு.
தமிழர்களுக்கு அங்கிருக்கும் கன்னடர்கள் குடிக்க தண்ணீர் கொடுத்து தங்கள் ஆதரவைக் காட்டினர். இந்த விஷயம் கர்நாடகாவில் செம ட்ரெண்டானது. இந்த ஐடியா வெற்றிபெற்றதைத் தொடர்ந்து பல விமர்சனங்களும் எழுந்தன.

இந்நிலையில், நேற்று சேலத்திற்குச் சென்ற சிம்பு, சூழலியல் செயற்பாட்டாளர் பியூஷ் மனுஷ் உடன் அங்கிருக்கும் கன்னங்குறிச்சி, மூக்கனேரி ஆகிய ஏரிகளைப் பார்வையிட்டார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களிலும் வைரலாகின.

"நீர்நிலைகளைப் பாதுகாக்கவேண்டும் எனும் நோக்கத்தில் யாரையும் குறை சொல்லாமல் புதிய அணுகுமுறையுடன் நானே ஏரியை பார்வையிட்டேன். எதிர்காலத்தில் எனது ரசிகர்கள், சமூக செயற்பாட்டாளர்களோடு இணைந்து நீர்நிலைகளைப் பாதுகாக்க உள்ளேன்.
அது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன். இதில் எந்த அரசியலும் கலக்காமல் செயல்படுவேன். மக்கள் நலனுக்காக மட்டுமே பாடுபடுவேன்." என ஏரியைப் பார்வையிட்ட சிம்பு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











