வெளிநாடு பறந்த சிம்பு.. வந்ததும் இதுதான் முதல்வேலை.. விட்ட இடத்தை பிடிக்க சூப்பர் பிளான்!

முன்னணி நடிகர் சிம்பு தற்போது பல்வேறு விஷங்களை மனதில் வைத்து வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.

சென்னை: முன்னணி நடிகர் சிம்பு தற்போது பல்வேறு விஷங்களை மனதில் வைத்து வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.

நடிகர் சிம்பு பல்வேறு திறமைகளை கொண்ட, தனக்கு என்று தனி ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகர். இவர் படம் வந்தாலும், வரவில்லை என்றாலும், இவரின் ரசிகர்கள் மட்டும் எப்போதும் இவரை கொண்டாடிக் கொண்டே இருப்பார்கள்.

வாலு பட பிரச்சனையின் போது நடிகர் சிம்புவிற்கு அவரின் ரசிகர்கள் உறுதுணையாக இருந்தார்கள். நடிகர் சிம்பவும் தனது ரசிகர்களை எப்போதும் விட்டுக்கொடுத்தது இல்லை.

இப்போது என்ன

இப்போது என்ன

இந்த நிலையில் செக்க சிவந்த வானத்திற்கு பின் நடிகர் சிம்புவிற்கு ஹிட் படம் எதுவும் வெளியாகவில்லை. அதேபோல் ஏஏஏ, வந்தா ராஜாவாதான் வருவேன் போன்ற படங்களும் அவருக்கு சரியாக கை கொடுக்கவில்லை. சிம்பு விண்ணை தாண்டி வருவாயா போல ஒரு ஹிட் கொடுக்க மாட்டாரா என்று ரசிகர்கள் இன்னும் காத்து இருக்கிறார்கள்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் நடிகர் சிம்புவும் தனக்கு வரும் சினிமா வாய்ப்புகளை தவறவிட்டுக் கொண்டு இருக்கிறார். முக்கியமாக கான் படம் அதன்பின் தற்போது மாநாடு படம் ஆகிய படங்களை தவறவிட்டுவிட்டார். மாநாடு படம் டிராப் ஆகி, அதில் மீண்டும் சிம்பு நடிக்கிறார் என்று பேச்சுக்கள் அடிப்பட்டு வருகிறது. ஆனால் இது இன்னும் உறுதியாகவில்லை.

உடல் எடை

உடல் எடை

இந்த நிலையில் நடிகர் சிம்பு தற்போது தன்னுடைய உடல் எடையால் பாதிக்கப்பட்டுள்ளார். மிக அதிக அளவில் எடை போட்டு, குண்டாகி உள்ளார். ஏஏஏ படத்திலேயே அவர் குண்டாக இருப்பது எல்லோருக்கும் தெரிந்தது. தற்போது இன்னும் சில கிலோக்கள் அவர் கூடி உள்ளார்.

என்ன சிக்கல்

என்ன சிக்கல்

அவர் உடல் எடை கூடிக்கொண்டே செல்வதால் தற்போது அமெரிக்காவிற்கு சிறப்பு பயிற்சி மற்றும் சிகிச்சை மேற்கொள்ள சென்றுள்ளார். இன்னும் ஒரு மாதம் அவர் உடல் எடையை குறைக்க சிகிச்சை மேற்கொள்வார் என்கிறார்கள். உடல் எடையை தீவிரமாக குறைக்க அவர் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

என்ன செய்வார்

என்ன செய்வார்

இந்த நிலையில் உடல் எடையை குறைத்துவிட்டு அவர் தமிழகம் திரும்பிய பின் இரண்டு படங்களில் நடிக்க உள்ளார். கன்னட படம் ஒன்றின் ரீமேக்கில் அவர் நடிக்க உள்ளார். இதற்கான இயக்குனர் யார் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை.

அடுத்து என்ன

அடுத்து என்ன

அதேபோல் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் சிம்பு நடிப்பதற்காக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த படத்திற்காகவும் சிம்பு தமிழகம் திரும்பிய பின் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று கூறுகிறார்கள்.

More from Filmibeat

Read more about: simbu சிம்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X