அடேங்கப்பா.. வரலாறு அஜித் மாதிரி நடிக்கப் போறாரா சிம்பு.. அதுவும் எந்த படத்தில் தெரியுமா?

சென்னை: நடிகர் சிம்பு இதுவரை எடுக்காத ரிஸ்க்கை தனது 50வது படத்தில் எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை துல்கர் சல்மான், ரிது வர்மா மற்றும் கெளதம் மேனனை வைத்து இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கியிருந்தார். கடந்த 2020ம் ஆண்டு வெளியான அந்த படம் அறிமுக இயக்குநரான தேசிங் பெரியசாமிக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தையும் பாராட்டுக்களையும் பெற்றுத் தந்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே அழைத்து பாராட்டி தனக்கு ஒரு கதையை ரெடி செய்ய சொல்ல, பிரம்மாண்டமாக ஒரு ஸ்க்ரிப்ட் உடன் போய் நின்ற தேசிங் பெரியசாமிக்கு ரஜினிகாந்தை வைத்து படம் பண்ணக் கூடிய பாக்கியம் கிடைக்கவில்லை.

Simbu will do a feminine kind of role in his 50th mega budget movie

சிம்புவை வைத்து பிரம்மாண்டமாக அந்த படத்தை கூடிய விரைவில் எடுத்து ஒட்டுமொத்த தேசத்தையும் தன் பக்கம் திருப்ப காத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், அந்த படத்தில் வரலாறு படத்தில் அஜித் குமார் எடுத்து நடித்த ரிஸ்க்கான கதாபாத்திரத்தில் சிம்பு முதன்முறையாக நடிக்கப் போவதாக கே.எஸ். ரவிக்குமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் போட்டு வாங்க சிம்புவும் ஒப்புக் கொண்டார்.

நீண்ட தலைமுடியின் ரகசியம்: நடிகர் சிம்பு தனது தலைமுடியை நீண்டதாக வளர்க்க காரணமே தேசிங் பெரியசாமி இயக்கத்தில் அப்படியொரு கதாபாத்திரத்தில் நடிக்கத்தான் எனக் கூறப்படுகிறது. பொதுவாகவே ஆண் நடிகர்கள் பெண் வேடமிட்டு நடிக்கத் தயங்குவார்கள். கமல்ஹாசன் அவ்வை சண்முகி படத்திலும் பிரசாந்த் ஆணழகன் படத்திலும்,சிவகார்த்திகேயன் ரெமோ படத்திலும் நடித்து அசத்தியிருப்பார்கள். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சிங்கிள் டேக்கில் நடித்து தள்ளும் சிம்பு இதுவரை அப்படியொரு கதாபாத்திரத்தில் நடிக்காத நிலையில், தனது 50வது படத்தில் அப்படியொரு ரோலில் நடிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Simbu will do a feminine kind of role in his 50th mega budget movie

வரலாறு அஜித் ஸ்டைலில்: வரலாறு படத்தில் பெண்ணியம் கலந்த நடிப்போடு நடிகர் அஜித் குமார் நடித்து மிரட்டியிருப்பார். தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் இப்படியெல்லாம் நடிக்க ஒப்புக் கொள்வார்களா? என்பதே அரிது தான். கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் அந்த மேஜிக் நடந்திருக்கும். அதே போல உங்க படத்தில் முயற்சிக்கப் போவதாக கேள்விப்பட்டேனே என கே.எஸ். ரவிக்குமார் கேட்டதும் மறைத்து வைத்திருந்த ரகசியம் அம்பலமாகி விட்டதே என்பதை அறிந்தாலும், சீனியர் இயக்குநர் கேட்டதும் ஆமாம் சார் என சிம்பு ஒப்புக் கொண்ட நிலையில், சிம்புவின் வேறலெவல் சம்பவத்தைக் காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதற்காக கமல்ஹாசனிடம் பிரத்யேகமாக பல டிப்ஸ்களையும் கேட்டு பாடம் கற்று வருகிறாராம்.

Take a Poll

டான் பிக்சர்ஸ் தயாரிப்பில்: ஹரிஷ் கல்யாண், எம்.எஸ். பாஸ்கர் நடிப்பில் வெளியான பார்க்கிங் படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் அடுத்ததாக சிம்பு நடித்து வரும் படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். அந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக டிராகன் படத்தில் நடித்த கயாடு லோஹர் நடித்து வருகிறார். மேலும், டிராகன் பட இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தனது 51வதுபடத்தையும் விரைவில் தொடங்க உள்ளார். அடுத்தடுத்து திறமையான இயக்குநர்கள் படங்களில் சிம்பு நடிக்கவுள்ளதே அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய பூஸ்ட்டாக அமைந்திருக்கிறது. தக் லைஃப் படத்தில் கமல்ஹாசனை விட உங்களுக்கு ஒரு ஸ்டெப் கூடுதலாகவே முக்கியத்துவத்தை மணி சார் கொடுத்திருக்கிறார் என்பது போல தெரிகிறது என்றும் கே.எஸ். ரவிக்குமார் பேசி சிம்புவை பூரிக்க வைத்து விட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X