வீடு கட்டி முடித்த பிறகுதான் திருமணம்… சிம்பு எடுத்த அதிரடி முடிவு !
சென்னை : கோலிவுட்டில் பிஸியான நடிகராக வலம் வரும் சிம்பு, வீடு கட்டி முடித்து விட்டுத்தான் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியான சிம்புவின் தீவிர ரசிகர்கள், பாஸ் வீட்டை பிறகு கட்டுங்க முதலில் கல்யாண சாப்பாடு போடுங்க என்று கூறி வருகின்றனர்.
தமிழ் சினிமா வட்டாரத்தில் தற்போது ஹாட் டாப்பிக் சிம்புவின் திருமணத்தை பற்றித்தான் பேசி வருகின்றனர்.

படம் தோல்வி
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படம் தோல்விக்கு பிறகு சிம்புவின் சினிமா வாழ்க்கை அவ்வளவுதான், இனி அவர் தேறுவது ரொம்ப கஷ்டம் என பல விமர்சனங்கள் சிம்பு குறித்து பரவியது. ஆனால், அத்தனை விமர்சனங்களை உடைத்துவிட்டு, மாநாடு திரைப்படத்தில் மாஸ் என்ட்ரி கொடுத்திருந்தார் சிம்பு.

மறக்க முடியாத படம்
வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடையக் காரணம் சிம்புவின் நடிப்புதான். மாநாடு திரைப்படம் சிம்புவின் திரைப்பயணத்தில் மறக்க முடியாத திரைப்படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தை அடுத்து கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற திரைப்படங்களை கையில் வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வருகிறார்.

சிம்புவின் அதிரடி முடிவு
இந்நிலையில், சிம்பு தனது திருமணம் குறித்து முக்கியமான முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம். அது என்னவென்றால், சிம்பு ஈசிஆரில் ஒரு பிரம்மாண்டமான பங்களாவை கட்டிவருகிறார். இந்த பங்களா கட்டி முடித்தப்பிறகுதான் திருமணம் என்ற அதிரடி முடிவை எடுத்துள்ளாராம். இதைக் கேட்ட ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கல்யாணம் பண்ணுங்க பாஸ்
சிம்பு ரசிகர்கள் மனதில் வரும் கேள்வி ஒன்று தான். சிம்பு எப்போது திருமணம் செய்து கொள்வார் அதற்கான அறிவிப்பு அல்லது செய்தி எப்போது வரும் என்று காத்திருக்கும் நேரத்தில் இப்படி ஒரு முடிவு தேவையா என்றும், வயசு ஆகிக்கொண்டே போகிறது, வீடு அப்புறம் கட்டுங்க முதலில் திருமண வேலையை பாருங்க என்றும் ரசிகர்கள் அவரை இணையத்தில் தொடர்ந்து நச்சரித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











