ஹீரோ .. ஹீரோ ..

By Staff

நான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கொஞ்சம் கூட வாய் கூசாமல் பேச ஆரம்பித்துள்ளார் சிம்பு என்றசிலம்பரசன். அப்பா டி.ராஜேந்திரின் மண்டைக் கனத்துக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் இருக்கிறது இவரதுமண்டைக் கனம் என்கிறார்கள்..

இவர் போடும் ஆட்டத்தால் சூட்டிங் ஸ்பாட்டி டைரக்டர் உள்பட அனைவருமே எரிச்சலடைந்து விடுகின்றனர்.

டி.ஆர். தான் சம்பாதித்து வைத்துள்ள பல கோடிகளில் சில கோடிகளைப் போட்டு காதல் அழிவதில்லை படத்தைசிலம்பரசனை வைத்து எடுத்தார். அந்தப் படத்தில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று மகனுக்கு தானே இலவச பட்டமும்கொடுத்தார் டி.ஆர்.

அந்தப் படம் ஏ சென்டர்களில் துண்டைக் காணோம் என்று ஓடிவிட்டது. சி சென்டர்களில் ஓரளவுக்கு தம் பிடித்துஓடியது.

இதனால் தனக்கு கீழ் மட்டத்தில் மிக அதிக ஆதரவு இருப்பதாகவும், இதனால் நான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார்என்றும் பேசி எரிச்சல்படுத்தி வருகிறார் சிலம்பரசன். இவர் அடுத்ததாக நடித்து வரும் தம் படத்தின்டிஸ்கசன் நடந்தபோது உதவி இயக்குனர்களை போட்டு படாதபாடு படுத்தியுள்ளார்.

உதவி இயக்குனர்கள், வசன உதவியாளர்களிடம் போய் இது தான் அடுத்த சூப்பர் ஸ்டாருக்கு எழுதும் வசனமா?.அடுத்த சூப்பர் ஸ்டார் நான் தான். அதை மனசுல வச்சுக்கிட்டு வசனம் எழுதுங்க என்று சொல்லிடென்சன்படுத்தினராம்.

நீ ரஜினி இல்லப்பா என்று எடுத்துச் சொல்ல யாரும் இல்லாததால் அவரது மண்டைக்கனம் அவரைவிட வேகமாக வளர்ந்து வருகிறதாம்.

சூட்டங் ஸ்பாட்டில் ரஜினியைப் போலவே நடப்பது, சிரிப்பது, டைரக்டர் சொல்லாமலே காட்சியில்தானே ஏதாவது ஸ்டைலை டிரை பண்ணுவது என்று சிலம்பரசன் செய்யும் துக்கிரி வேலைகளைப்பார்த்து சிரிப்பாய் சிரிக்கிறார்கள் கோலிவுட்காரர்கள்.

சும்மா இருக்கும்போதே விரல்களில் வித்தை காட்டுவது, சும்மா சேரில் உட்காரும்போதே கால்களைமாற்றி மாற்றிப் போட்டு உட்காருவது, சும்மாவே வாயை அசத்தலாக அசைப்பது, தலையைநகத்தால் கோதுவது, சடாரென திரும்புவது, தடாரென குதிப்பது என்று உடலின் சகலபாகங்களுக்கும் சகட்டுமேனிக்கு பயிற்சி தருகிறாராம்.

சொல்லிச் சொல்லி சிரிக்கிறார்கள். தனது சேஷ்டைகளை பிறர் பார்த்துவிட்டால் இஸ்டைலுமா,இஸ்டைலு! என்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X