ஹீரோ .. ஹீரோ ..
சிலம்பரசன் தனது பிறந்த நாளை இந்த ஆண்டு ரசிகர்களுடன் படு விமரிசையாகக் கொண்டாட முடிவுசெய்துள்ளார். இதற்காக தமிழகத்தின் அனைத்துப் பகுதியிலிருந்தும் சிம்பு ரசிகர்கள் சென்னைக்கு வருகிறார்கள்.
சிம்புவுக்கு வரும் பிப்ரவரி 3ம் தேதி பிறந்த நாள். இதை தனது ரசிகர்களுடன் விமரிசையாகக் கொண்டாடவிரும்பினார் சிம்பு. விடுவாரா அப்பா டி.ராஜேந்தர்?. தனது தி.நகர் அலுவலகத்திலேயே பிரமாண்டமானநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார். அலுவலகத்திற்கு முன்பாக பந்தல் போடப்பட்டு மேடையும்அமைக்கப்படுகிறது.
தற்போது டி.ராஜேந்தர், அவரது மனைவி உஷா, சிலம்பரசன், குறளரசன், இலக்கியா ஆகியோர் மலேசியாவில்சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். அவர்கள் 2ம் தேதி சென்னை திரும்புகிறார்கள்.
3ம் தேதி அண்ணாசாலை அருகில் உள்ள லிட்டில் பிளவர் பார்வையற்றோர் மற்றும் காது கேளாதோர் பள்ளிக்குச்சென்று, சிம்பு மதிய உணவு வழங்குகிறார். அவரும் அங்கு சாப்படுகிறார். பின்பு தி.நகரில் போடப்பட்டிருக்கும்மேடையில் ரசிகர்களுடன் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார் சிம்பு. இதில் கலந்துகொள்வதற்காக பஸ்கள், வேன்களில் சிம்புவின் ரசிகர்கள் சென்னையில் குவியவுள்ளனர்.


Click it and Unblock the Notifications











