twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிம்புவின் கிராமத்து பொங்கல்! நடிகர் விஜய்யைத் தொடர்ந்து, சிலம்பரசனும் கிராமத்திற்கு சென்று பொங்கல் கொண்டாடி ரசிகர்களை அசத்தினார்.நடிகர் விஜய் போன தீபாவளியன்று சிவகாசிக்கு சென்று ரசிகர்கள் மத்தியில் தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்தார். இதையடுத்துபொங்கல் பண்டிகை வருவதையொட்டி, சென்னை அருகே உள்ள நேமம் கிராமத்திற்குச் சென்று ஏர் உழுது, கதிர் அறுத்து,கிராமத்து ஸ்டைலில் பொங்கல் கொண்டாடினார்.விஜய்யின் வித்தியாச கொண்டாட்டம் மற்ற நடிகர்களையும் கவர்ந்து விட்டது போலும். விஜய் பாணியில் சிம்புவும் இப்போதுகிராமத்துக்குச் சென்று பொங்கலைக் கொண்டாடியுள்ளார்.சென்னை அருகே உள்ள பாரிவாக்கம் என்ற கிராமத்திற்கு சிம்பு சென்றார். அவர் வருவது ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்ததால்,ஊர் ஜனம் மொத்தம் திரண்டு இருந்தது. அக்கம் பக்கத்து கிராமங்களைச் சேர்ந்தவர்களும் கூடிவிட்டனர். சிம்பு வந்து இறங்கியதும், அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து திலகம் இட்டனர். பின்னர் ஊருக்குள் ஊர்வலமாக அழைத்துச்செல்லப்பட்டார் சிம்பு. தாரை தப்பட்டை, மேள தாளம் முழங்க ஊருக்குள் சென்றார் சிம்பு.பின்னர் அங்குள்ள கருமாரி அம்மன் கோவில் ன்பு வைக்கப்பட்டிருந்த பொங்கலை சுவைத்துப் பார்த்தார். பெண்கள்,சிம்புவுக்கு பொங்கலை ஊட்டி விட்டனர். பின்னர் கோவிலுக்குள் சென்று சிம்பு சாமி கும்பிட்டார்.அதன் பிறகு ஊரில் உள்ள சிறுவர்களுடன் சேர்ந்து பாட்டுப் பாடி, ஆட்டம் போட்டார். என் ஆசை மைதிலியே பாட்டை பாடுமாறுசிறுவர்கள் அன்புக் கட்டளையிட அவ்வாறே செய்தார் சிம்பு.தொடர்ந்து மாட்டு வண்டியில் ஏறி சிறிது தூரம் ஓட்டி கிராமத்தினரை குதூகலப்படுத்தினார். அப்புறம் வயலுக்கு சென்ற சிம்புஅங்கு டிராக்டரை ஓட்டிக் கொண்டிருந்த விவசாயிடம் தனது ஆசையைக் கூறி சிறிது தூரம் டிராக்டர் ஓட்டிப் பார்த்தார். இரு வேலைகளும் புதிது என்றாலும் இரண்டையும் சிம்பு எளிதாக செய்தது ஊர் மக்களைக் கவர்ந்தது. இப்படியாக கிராமத்தில் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடிய சிம்பு பின்னர் அவர்களிடமிருந்து விடைபெற்றார்.என்ன இது கிராமத்தில் பொங்கல் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, இது எனக்கு புது அனுபவம். இதுவரை குக்கரில்பொங்கல் வைத்து சாப்பிட்டுள்ளேன். ஆனால் முதல்முதலாக மண் பானையில் பொங்கல் வைத்து சாப்பிட்டேன். இதுவித்தியாசமாக இருக்கிறது.நடிகன் என்பதால் கிராமத்து மக்கள் என் மீது கூடுதல் அன்பு வைத்திருக்கிறார்கள். அவர்களது அன்பு என்னை நெகிழ வைத்துவிட்டது என்றார் சிம்பு.

    By Staff
    |

    நடிகர் விஜய்யைத் தொடர்ந்து, சிலம்பரசனும் கிராமத்திற்கு சென்று பொங்கல் கொண்டாடி ரசிகர்களை அசத்தினார்.

    நடிகர் விஜய் போன தீபாவளியன்று சிவகாசிக்கு சென்று ரசிகர்கள் மத்தியில் தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்தார். இதையடுத்துபொங்கல் பண்டிகை வருவதையொட்டி, சென்னை அருகே உள்ள நேமம் கிராமத்திற்குச் சென்று ஏர் உழுது, கதிர் அறுத்து,கிராமத்து ஸ்டைலில் பொங்கல் கொண்டாடினார்.

    விஜய்யின் வித்தியாச கொண்டாட்டம் மற்ற நடிகர்களையும் கவர்ந்து விட்டது போலும். விஜய் பாணியில் சிம்புவும் இப்போதுகிராமத்துக்குச் சென்று பொங்கலைக் கொண்டாடியுள்ளார்.

    சென்னை அருகே உள்ள பாரிவாக்கம் என்ற கிராமத்திற்கு சிம்பு சென்றார். அவர் வருவது ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்ததால்,ஊர் ஜனம் மொத்தம் திரண்டு இருந்தது. அக்கம் பக்கத்து கிராமங்களைச் சேர்ந்தவர்களும் கூடிவிட்டனர்.


    சிம்பு வந்து இறங்கியதும், அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து திலகம் இட்டனர். பின்னர் ஊருக்குள் ஊர்வலமாக அழைத்துச்செல்லப்பட்டார் சிம்பு. தாரை தப்பட்டை, மேள தாளம் முழங்க ஊருக்குள் சென்றார் சிம்பு.

    பின்னர் அங்குள்ள கருமாரி அம்மன் கோவில் ன்பு வைக்கப்பட்டிருந்த பொங்கலை சுவைத்துப் பார்த்தார். பெண்கள்,சிம்புவுக்கு பொங்கலை ஊட்டி விட்டனர். பின்னர் கோவிலுக்குள் சென்று சிம்பு சாமி கும்பிட்டார்.

    அதன் பிறகு ஊரில் உள்ள சிறுவர்களுடன் சேர்ந்து பாட்டுப் பாடி, ஆட்டம் போட்டார். என் ஆசை மைதிலியே பாட்டை பாடுமாறுசிறுவர்கள் அன்புக் கட்டளையிட அவ்வாறே செய்தார் சிம்பு.

    தொடர்ந்து மாட்டு வண்டியில் ஏறி சிறிது தூரம் ஓட்டி கிராமத்தினரை குதூகலப்படுத்தினார். அப்புறம் வயலுக்கு சென்ற சிம்புஅங்கு டிராக்டரை ஓட்டிக் கொண்டிருந்த விவசாயிடம் தனது ஆசையைக் கூறி சிறிது தூரம் டிராக்டர் ஓட்டிப் பார்த்தார்.


    இரு வேலைகளும் புதிது என்றாலும் இரண்டையும் சிம்பு எளிதாக செய்தது ஊர் மக்களைக் கவர்ந்தது.

    இப்படியாக கிராமத்தில் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடிய சிம்பு பின்னர் அவர்களிடமிருந்து விடைபெற்றார்.

    என்ன இது கிராமத்தில் பொங்கல் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, இது எனக்கு புது அனுபவம். இதுவரை குக்கரில்பொங்கல் வைத்து சாப்பிட்டுள்ளேன். ஆனால் முதல்முதலாக மண் பானையில் பொங்கல் வைத்து சாப்பிட்டேன். இதுவித்தியாசமாக இருக்கிறது.

    நடிகன் என்பதால் கிராமத்து மக்கள் என் மீது கூடுதல் அன்பு வைத்திருக்கிறார்கள். அவர்களது அன்பு என்னை நெகிழ வைத்துவிட்டது என்றார் சிம்பு.

      Read more about: simbus village pongal
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X