»   »  சிம்புவுக்கு அடி விழுந்தது உண்மை: நேரில் பார்த்தவர்கள் பேட்டி நள்ளிரவில் நடந்த தகராறில் நடிகர் சிம்பு அடிவாங்கியது உண்மை தான் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.கடந்த 26ம் தேதி நள்ளிரவில் நந்தனம் சிக்னல் அருகே ஜோதி தோட்டம் பகுதியில் நடிகர் சிம்புவுக்கும், சில இளைஞர்களுக்கும்தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் சிம்புவுக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது.ஆனால் இது போன்ற ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று சிம்புவும், அவரது தந்தை விஜய டி.ராஜேந்தரும் மறுத்தனர். இந்தநிலையில் சிம்பு தாக்கப்பட்டதை நேரில் பார்த்த சண்முகராஜ் என்பவர் கூறியதாவது:நான் நந்தனம் தேவர் சிலையில் இருந்து தி.நகர் வெங்கட் நாராயணா சாலைக்கு என் நண்பர் பாபுவுடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தேன். அப்போது முகத்தில் ரத்த காயத்துடன் சிம்பு வேகமாக ஓடி வந்தார். அவருடன் இன்னும் 2 பேர் இருந்தனர். சிம்பு அண்ணா அண்ணா என்று கத்தியபடி ஒரு ஆட்டோவை மடக்கி ஏறி உட்கார்ந்தார். அவருக்கு பக்கத்தில் ஒருவரும், டிரைவர்பக்கத்தில் இன்னொருவரும் உட்கார்ந்தனர். என்ன தான் நடக்கிறது என்று பார்க்க ஆட்டோவை பின் தொடர்ந்து சென்றேன்.ஆட்டோ இந்தி பிரச்சார சபா தெருவுக்குள் சென்றது. (இங்கு தான் சிம்புவின் வீடு உள்ளது) சிம்பு தான் அடிபட்டது என்பதுஎனக்கு நன்றாக தெரியும் என்றார்.நந்தனம் அருகேயுள்ள ஜோதி தோட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் ஆர்.ரமேஷ், கே. சுதாகர், ஆர். ராஜேந்திரன் ஆகியோர்கூறியதாவது:வியாழக்கிழமை இரவு எங்கள் பகுதிக்கு பதட்டத்துடன் ஒரு இளைஞர் ஓடி வந்தார். அவரை மடக்கி என்னவாயிற்று என்றுவிசாரித்த போது, சாலையை கடக்கும் போது எனக்கும் சிம்புவுக்கும் தகராறு ஏற்பட்டதில் சிம்பு என்னை அடித்து விட்டார் என்றுகூறி ஓடி ஒளிந்து கொண்டார். வெங்கட் நாராயணா சாலையில் வந்து நாங்கள் பார்த்த போது சிம்புவும் அவருடன் இருந்த 2 பேரும் ஜோதி தோட்டத்தில்யாரையோ தேடிக் கொண்டிருந்தனர். சிம்பு முகத்தில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.சிறிது நேரத்தில் ஆட்டோவில் வந்த சிம்பு மறைந்திருந்த இளைஞரை தேடிக் கண்டுபிடித்து இழுத்து சென்றார் என்று கூறினர்.இந்த விவகாரத்தை போலீஸ் விசாரிச்சா தான் முழு விவரமும் வெளியே வரும் போலிருக்கே... விசாரிக்குமோ?யாரும் என்னை அடிக்கவில்லை: சிம்பு மறுப்பு

சிம்புவுக்கு அடி விழுந்தது உண்மை: நேரில் பார்த்தவர்கள் பேட்டி நள்ளிரவில் நடந்த தகராறில் நடிகர் சிம்பு அடிவாங்கியது உண்மை தான் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.கடந்த 26ம் தேதி நள்ளிரவில் நந்தனம் சிக்னல் அருகே ஜோதி தோட்டம் பகுதியில் நடிகர் சிம்புவுக்கும், சில இளைஞர்களுக்கும்தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் சிம்புவுக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது.ஆனால் இது போன்ற ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று சிம்புவும், அவரது தந்தை விஜய டி.ராஜேந்தரும் மறுத்தனர். இந்தநிலையில் சிம்பு தாக்கப்பட்டதை நேரில் பார்த்த சண்முகராஜ் என்பவர் கூறியதாவது:நான் நந்தனம் தேவர் சிலையில் இருந்து தி.நகர் வெங்கட் நாராயணா சாலைக்கு என் நண்பர் பாபுவுடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தேன். அப்போது முகத்தில் ரத்த காயத்துடன் சிம்பு வேகமாக ஓடி வந்தார். அவருடன் இன்னும் 2 பேர் இருந்தனர். சிம்பு அண்ணா அண்ணா என்று கத்தியபடி ஒரு ஆட்டோவை மடக்கி ஏறி உட்கார்ந்தார். அவருக்கு பக்கத்தில் ஒருவரும், டிரைவர்பக்கத்தில் இன்னொருவரும் உட்கார்ந்தனர். என்ன தான் நடக்கிறது என்று பார்க்க ஆட்டோவை பின் தொடர்ந்து சென்றேன்.ஆட்டோ இந்தி பிரச்சார சபா தெருவுக்குள் சென்றது. (இங்கு தான் சிம்புவின் வீடு உள்ளது) சிம்பு தான் அடிபட்டது என்பதுஎனக்கு நன்றாக தெரியும் என்றார்.நந்தனம் அருகேயுள்ள ஜோதி தோட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் ஆர்.ரமேஷ், கே. சுதாகர், ஆர். ராஜேந்திரன் ஆகியோர்கூறியதாவது:வியாழக்கிழமை இரவு எங்கள் பகுதிக்கு பதட்டத்துடன் ஒரு இளைஞர் ஓடி வந்தார். அவரை மடக்கி என்னவாயிற்று என்றுவிசாரித்த போது, சாலையை கடக்கும் போது எனக்கும் சிம்புவுக்கும் தகராறு ஏற்பட்டதில் சிம்பு என்னை அடித்து விட்டார் என்றுகூறி ஓடி ஒளிந்து கொண்டார். வெங்கட் நாராயணா சாலையில் வந்து நாங்கள் பார்த்த போது சிம்புவும் அவருடன் இருந்த 2 பேரும் ஜோதி தோட்டத்தில்யாரையோ தேடிக் கொண்டிருந்தனர். சிம்பு முகத்தில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.சிறிது நேரத்தில் ஆட்டோவில் வந்த சிம்பு மறைந்திருந்த இளைஞரை தேடிக் கண்டுபிடித்து இழுத்து சென்றார் என்று கூறினர்.இந்த விவகாரத்தை போலீஸ் விசாரிச்சா தான் முழு விவரமும் வெளியே வரும் போலிருக்கே... விசாரிக்குமோ?யாரும் என்னை அடிக்கவில்லை: சிம்பு மறுப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

நள்ளிரவில் நடந்த தகராறில் நடிகர் சிம்பு அடிவாங்கியது உண்மை தான் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

கடந்த 26ம் தேதி நள்ளிரவில் நந்தனம் சிக்னல் அருகே ஜோதி தோட்டம் பகுதியில் நடிகர் சிம்புவுக்கும், சில இளைஞர்களுக்கும்தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் சிம்புவுக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது.

ஆனால் இது போன்ற ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று சிம்புவும், அவரது தந்தை விஜய டி.ராஜேந்தரும் மறுத்தனர். இந்தநிலையில் சிம்பு தாக்கப்பட்டதை நேரில் பார்த்த சண்முகராஜ் என்பவர் கூறியதாவது:

நான் நந்தனம் தேவர் சிலையில் இருந்து தி.நகர் வெங்கட் நாராயணா சாலைக்கு என் நண்பர் பாபுவுடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தேன். அப்போது முகத்தில் ரத்த காயத்துடன் சிம்பு வேகமாக ஓடி வந்தார். அவருடன் இன்னும் 2 பேர் இருந்தனர்.


சிம்பு அண்ணா அண்ணா என்று கத்தியபடி ஒரு ஆட்டோவை மடக்கி ஏறி உட்கார்ந்தார். அவருக்கு பக்கத்தில் ஒருவரும், டிரைவர்பக்கத்தில் இன்னொருவரும் உட்கார்ந்தனர். என்ன தான் நடக்கிறது என்று பார்க்க ஆட்டோவை பின் தொடர்ந்து சென்றேன்.

ஆட்டோ இந்தி பிரச்சார சபா தெருவுக்குள் சென்றது. (இங்கு தான் சிம்புவின் வீடு உள்ளது) சிம்பு தான் அடிபட்டது என்பதுஎனக்கு நன்றாக தெரியும் என்றார்.

நந்தனம் அருகேயுள்ள ஜோதி தோட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் ஆர்.ரமேஷ், கே. சுதாகர், ஆர். ராஜேந்திரன் ஆகியோர்கூறியதாவது:

வியாழக்கிழமை இரவு எங்கள் பகுதிக்கு பதட்டத்துடன் ஒரு இளைஞர் ஓடி வந்தார். அவரை மடக்கி என்னவாயிற்று என்றுவிசாரித்த போது, சாலையை கடக்கும் போது எனக்கும் சிம்புவுக்கும் தகராறு ஏற்பட்டதில் சிம்பு என்னை அடித்து விட்டார் என்றுகூறி ஓடி ஒளிந்து கொண்டார்.


வெங்கட் நாராயணா சாலையில் வந்து நாங்கள் பார்த்த போது சிம்புவும் அவருடன் இருந்த 2 பேரும் ஜோதி தோட்டத்தில்யாரையோ தேடிக் கொண்டிருந்தனர். சிம்பு முகத்தில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

சிறிது நேரத்தில் ஆட்டோவில் வந்த சிம்பு மறைந்திருந்த இளைஞரை தேடிக் கண்டுபிடித்து இழுத்து சென்றார் என்று கூறினர்.

இந்த விவகாரத்தை போலீஸ் விசாரிச்சா தான் முழு விவரமும் வெளியே வரும் போலிருக்கே... விசாரிக்குமோ?

யாரும் என்னை அடிக்கவில்லை: சிம்பு மறுப்பு

குடிசைவாசிகளிடம் சிக்கி அடி வாங்கிய சிம்பு!


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil