ஹீரோ .. ஹீரோ ..

By Staff
அப்பா அரசியலில் ஈடுபட்டுள்ளதால் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று நடிகர் சிலம்பரசன் கூறினார்.

சிம்பு என்ற சிலம்பரசன் தனது 22வது பிறந்த நாளை நேற்று ரசிகர்கள் மத்தியில் கொண்டாடினார். மன்மதன் வெற்றியின்எதிரொலியாக ரசிகர்கள் உற்சாகமாகக் கூறியிருக்க, மகனுக்காக கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வேலையை அப்பா விஜயடி.ராஜேந்தர் பார்த்தார்.

தி.நகரில் உள்ள வீட்டுக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த மேடையில் ரசிகர்கள் மத்தியில் சிம்பு கேக் வெட்டி, முதல் கேக்கைராஜேந்தருக்கு ஊட்டினார்.

பி.எப். பட நாயகி நிலா, இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா, கலைப்புலி தாணு, நிக் ஆர்ட் சக்கரவர்த்தி, தயாரிப்பாளர்கள் தேனப்பன்,காஜா மொய்தீன் உள்ளிட்ட பலரும் சிம்பவை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

தாணுவின் தொட்டி ஜெயா படத்தில் நடிக்கும் சிம்பு, அடுத்ததாக எஸ்ஜே சூர்யாவின் இயக்கத்தில் ஏ.சி. என்ற படத்தில் நடிக்கப்போவது வாசகர்கள் அறிந்தது தானே.

பிறந்த நாள் குஷியில் நிருபர்களிடம் சிம்பு பேசுகையில், சூப்பர் ஸ்டார் ஆக வேண்டும், முதலிடத்தைப் பிடிக்க வேண்டும், அந்தஇடத்தைப் பிடிக்க வேண்டும், இந்த இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் எனக்கு இல்லை. என் வேலையைமட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

ரசிகர்கள் எனக்கென்று ஒரு இடத்தைக் கொடுத்துள்ளார்கள். அவர்களை நான் ஏமாற்றாமல் நல்ல படங்கள் செய்வேன்.

வித்தியாசமான வேடங்களில் நடிப்பதையே விரும்புகிறேன். இனிமேல் படங்களை மிக ஜாக்கிரதையாகவே தேர்வு செய்யப்போகிறேன்.

அப்பா அரசியலில் இருப்பதால் எனக்கு எந்த நெருக்கடியும் இல்லை, பிரச்சினையும் இல்லை. அது அவரது விருப்பம். முன்பு சிலபிரச்சினைகள் வந்தன. ஆனால் மன்மதன் எல்லாவற்றையும் ஸ்டாப் செய்து விட்டது.

தந்தையிடம் இருந்து சினிமாவைக் கற்றுக் காண்டேன். எனது வளர்ச்சிக்கு அவரும் முக்கிய காரணம். ஆனால் அவரது பாணிவேறு, எனது பாணி வேறு. நான் எனது வழியில், பாணியில் செல்லவே விரும்புகிறேன் என்றார் சிம்பு.

22 வயதே ஆன சிம்பு ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளம் ரூ. 1 கோடி!

அப்புறம்..ராஜேந்தர் தனது பெயரை விஜய டி.ராஜேந்தர் என்று மாற்றிக் கொண்டைதப் போல நடிகர் சந்திரசேகரும் தன் பெயரைவாகை சந்திரசேகர் என்று மாற்றிக் கொண்டாராம். வாகை என்பது தனது சொந்த ஊரான வாகைக்குளத்தின் சுருக்கமாம்.(சிம்பு-ராஜேந்தர் விஷயத்தில் வந்து சந்திரசேகர் விவகாரத்தை நுழைக்கனுமா?... நீங்கள் நறநறப்பது கேட்கிறது)

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X