ஹீரோ .. ஹீரோ ..

By Staff

கமல் பாணியில் இறங்கியிருக்கிறார் சிம்பு.

கமல்ஹாசன் முன்பு நடித்த பல படங்களின் இயக்குனர்கள் யாராகவோ இருப்பார்கள். ஆனால் அந்தப் படத்தை உண்மையில்(மறைமுகமாக) இயக்கியது கமலாக இருக்கும். இதற்கு சரியான உதாரணம் தேவர் மகன்.

தேவர் மகனைப் பொருத்தவரை இயக்குனர் பரதன். ஆனால் படம் முழுவதும் கமலின் கைவரிசை மேலோங்கி இருப்பதைக் காணமுடியும். இதுகுறித்து கமலிடமே கேட்கப்பட்டது. பரதன் மலையாளி, அவருக்கு தமிழர் கலாச்சாரம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.அதுகுறித்து தெரிந்த நான் அவருக்கு உதவியாக இருந்தேன். அதில் தவறொன்றும் இல்லையே என்று பதில் கூறியிருந்தார் கமல்.

கமலின் சொந்தத் தயாரிப்பு என்பதால் இயக்குனர்களும் வாய் மூடிக் கொண்டு இருக்க வேண்டிய நிலை. ஆனால்,வெளிப்படங்களிலும் கமலின் தலையீட்டால் பலமுறை டைரக்டர்கள்-கமல் மோதல் நடந்திருக்கிறது.

இதையடுத்து தனக்கு தோதான இயக்குனரின் படங்களில் மட்டுமே நடிக்க ஆரம்பித்தார் கமல்.

சொந்தப் படம் எடுத்தால் தனக்கு வசதியான சிங்கீதம் சீனிவாச ராவ், சந்தான பாரதி போன்ற யாரையாவைது டைரக்டர் என்றுசேர்த்துக் கொள்வார் கமல். இப்போது தானே நேரடியாக டைரக்ஷனிலும் இறங்கிவிட்டார் கமல். இதனால் டைரக்டர்கள் தேடும்வேலை அவருக்கு இல்லை.

இப்போது கமல் வழியைப் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார் சிம்பு. அதாவது தான் சொல்வதைக் கேட்கும், தனக்குக் கட்டுப்படும்இயக்குனர்களை உருவாக்க ஆரம்பித்துள்ளார் சிம்பு.

மன்மதன் படத்தின் உண்மையான இயக்குனர் ஏ.ஜே.முருஹன். ஆனால் படம் முழுக்க சிம்புதான் ஆதிக்கம் செலுத்தினார். கதை,திரைக்கதையோடு, இயக்க மேற்பார்வை என்ற பெயரில் படத்தை சிம்புவே இயக்கியிருந்தார்.

இப்போது சிம்பு நடிக்கப் போகும் அடுத்த படத்தின் ஸ்ரிக்ப்ட் ரெடியாகி விட்டது. படத்திற்குப் பெயர் வல்லவன். இந்தப்படத்தை இயக்கப் போவது, மன்மதனை இயக்கிய முருஹனின் உதவியாளர் ஸ்ரீநாத்.

இந்தப் படத்திலும் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, டைரக்ஷன் மேற்பார்வையையும் சிம்புவே மேற்கொள்ளவுள்ளார்.

இதில் இன்னொரு காமெடியும் இருக்கிறது, மன்மதனில் இயக்குனராகப் பணிபுரிந்த முருஹன் இந்தப் படத்தில் இணைஇயக்குனராக, அதாவது ஸ்ரீநாத்திடம் உதவியாளராகப் பணிபுரியப் போகிறாராம்.

இதில் சிம்புவுக்கு ஜோடி அசீன். மன்மதன் போல இந்தப் படத்தையும் இளமை துள்ள எடுக்கப் போகிறார்களாம்.

ஆக, மொத்தம் 2 "பொம்மைகளுடன்" மீண்டும் ஒரு விளையாட்டுக்குத் தயாராகி விட்டார் சிம்பு.

இந்தப் படத்தை முடித்துவிட்டு எஸ்.ஜே.சூர்யாவின் இயக்கத்தில் ஒரு படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார்.

சூர்யாவிடம் சிம்பு வேலையைக் காட்டினால் நிச்சயம் இருவருக்கும் ஒரு சண்டை வரும் என்று அருள்வாக்கு சொல்கின்றனகோலிவுட் குருவிகள்.

எப்படா, ஊர் ரெண்டு படும்னு காத்திருப்பீங்களேப்பா...

More from Filmibeat

Read more about: kamal hassan simbu young hero
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X