»   »  மல்லிகாவுக்கு வலை வீசும் சிம்பு!

மல்லிகாவுக்கு வலை வீசும் சிம்பு!

Subscribe to Oneindia Tamil

3 ஹீரோயின்களுடன் தொடங்கப்படவுள்ள வல்லவன், படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வரும்போது அதில் 30 நாயகிகள் நடித்திருந்தாலும் ஆச்சரியப்படாதீர்கள்.

தினசரி மும்பை-சென்னை பிளைட்டில் சீசன் டிக்கெட் வாங்கியது மாதிரி, திடுதிப்பென மும்பை பக்கம் போய் யாராவது ஒரு புது பிகரை பிடித்துக் கொண்டு வர ஆரம்பித்திருக்கிறார் மன்மதன் சிம்பு.

சிம்புவின் கதை, திரைக்கதை மற்றும் இயக்கத்தில் உருவாகும் முதல் படம் வல்லவன். மன்மதனை மறைமுகமாக இயக்கியவர், முதல் முறையாக இந்தப் படத்தை நேரடியாகவே இயக்குகிறார் சிம்பு. படத்திற்கு வசனம் எழுதுவது பாலகுமாரன்.

பிளே பாய் உள்பட 4 கேரக்டர்களில் சிம்பு நடிக்கும் இந்தப் படத்தில் ரீமா சென், நயன்தாரா, சந்தியா என இப் படத்திற்கு 3 ஹீரோயின்கள்.

கவர்ச்சிக்கு நயன்தாரா, வில்லத்தனத்திற்கு ரீமா, ஜாலி தோழியாக சந்தியா என மூன்று அம்மணிகளுக்கும் கேரக்டரை இட ஒதுக்கீடு செய்து விட்டார் சிம்பு.

நயனதாரா முழு ஒத்துழைப்பு தந்ததையடுத்து தான் அவரிடம் உதட்டுக் கடியில் இறங்கி, அந்த போஸ்டர்களை ஊர் பூராவும் அடித்து ஒட்டி கலக்கினார் சிம்பு.

இப்போது ரீமாவும் அப்படிப்பட்ட பரபரப்பு சீன் ஏதாவது தனக்கும் வைக்கச் சொல்லியிருக்கிறாராம். கோரிக்கை ஏற்கப்படுவது உறுதி தான்.

இப்படி வகை வகையான 3 நடிகைகள் படத்தில் இருந்தாலும் ஏதோ ஒன்று கொறச்சலா இருக்கே மண்டை காய யோசித்துள்ளார் சிம்பு

மன்மதனில் மந்திரா பேடிக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரைப் போல வல்லவனிலும் ஒரு கேரக்டரைப் புகுத்தினால் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பார்த்த அவர் அதற்காக தேர்வு செய்துள்ள முகம், பாலிவுட்டின் தற்போதைய சூடான தேவதையான மல்லிகா ஷெராவத்.

உலக அளவிலும் கவர்ச்சி கன்னியாக வலம் வரத் தொடங்கியிருக்கும் மல்லிகாவைத் தொடர்பு கொண்ட சிம்பு தனது வல்லவன் குறித்துக் கூறி கால்ஷீட் கேட்டுள்ளாராம்.

மந்திரா பேடிக்குத் தந்ததை மாதிரி பல மடங்கு சம்பளம் என்ற விவரத்தையும் போனிலேயே சொல்லி கால்ஷீட் கேட்டிருக்கிறார். முதலில் மறுத்த மல்லிகா, சம்பளத்துக்கு மடங்கி விடுவார் என்றே தெரிகிறது.

மல்லிகாவின் மகத்தான கவர்ச்சி இமேஜை தனது படத்திற்கு மிகச் சரியான முறையில் சிம்பு பயன்படுத்திக் கொள்ளப் போகிறாராம்.

மல்லிகாவோடு இந்த ஆள் சேர்ப்பு நிற்காது என்கிறார்கள் சிம்புவின் உள் வட்டத்தினர். சூட்டிங் நடக்க நடக்க மேலும் பல அழகிகள் இறக்குமதியாகி படத்தை கலர்புல் ஆக்குவார்கள் என்கிறார்கள்.

பாரிஸ், ஜெர்மனி, லண்டனில் தான் பாடல் காட்சிகளை எடுக்க உள்ளாராம் சிம்பு.

தமிழோடு தெலுங்கிலும் எப்படியாவது காலை நுழைக்கும் ஆசையும் சிம்புவுக்கு வந்துவிட்டது. சமீபத்தில் மன்மதனை தெலுங்கில் டப் செய்து வெளியிட்ட சிம்பு ஹைதராபாத்தில் நிருபர்களை சந்தித்தார்.

அவர்களிடையே பேசுகையில், யாராவது நல்ல ரோல் கொடுத்தால் தெலுங்கில் நடிக்க நான் ரெடி. என் தாய் மொழியே தெலுங்கு தானே. என் அம்மாவுக்கு சொந்த ஊர் ஆந்திரா தான் என்றார்.

அப்படியா?


Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil