»   »  தாணு-சிம்பு மோதல்! தொங்கலில் தொட்டி ஜெயா!! தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவுக்கும், நடிகர் சிம்புவுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதால், டப்பிங் பாதிக்கப்பட்டு, தொட்டிஜெயா படம் வெளிவர முடியாத அளவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிம்பு, கோபிகா ஜோடியாக நடிக்க, மன்மதன் படத்தின் ரிலீஸுக்குப் பிறகு உடனடியாக பூஜை போடப்பட்டு ஆரம்பிக்கப்பட்டபடம் தொட்டி ஜெயா. முகவரி படத்தை இயக்கிய துரை தான் இப்படத்தின் இயக்குனர். கலைப்புலி தாணு இந்தப் படத்தை தயாரித்து வந்தார். தொட்டி ஜெயா படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டது.இருப்பினும் படம் வெளியாவதில் தொடர்ந்து இழுபறியாக இருந்து வந்தது. என்ன காரணம் என்று விசாரித்த போது தாணுவுக்கும், சிம்புவுக்கும் ஏற்பட்ட ரகளை காரணமாகவே படம் வெளியாவதில்தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. டப்பிங் பேச சிம்பு வர மறுப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிம்பு தரப்பில் கேட்டபோது, ரூ. 60 லட்சம் மட்டுமே சம்பளப் பணத்தை கலைப்புலி தாணு கொடுத்துள்ளார்.(மொத்த சம்பளம் ரூ. 75 லட்சம்). மீத சம்பளம் இன்னும் தரவில்லை. மன்மதன் நன்றாக ஓடினால் கூடுதலாக 25 லட்சம்தருவதாக தாணு கூறியிருந்தார். மன்மதன் நன்றாக வெற்றி பெற்றும் கூறியபடி கூடுதல் சம்பளத்தைத் தரவில்லை என்கிறது சிம்பு வட்டாரம். தாணுவோ வேறு மாதிரியாக கூறுகிறார். பேசினபடி சிம்புவுக்கு சம்பளம் கொடுத்தாகி விட்டது. இருந்தும் அவர் டப்பிங்குக்குவர மறுக்கிறார். கூடுதலாக சம்பளம் கேட்கிறார் என்று தாணு தரப்பு குற்றம் சாட்டுகிறது. 6 ரீல்களுக்கு மட்டுமே சிம்பு டப்பிங் பேசியுள்ளதாக தெரிகிறது. இதனால், சிம்பு மீது தயாரிப்பாளர் கவுன்சில்,விநியோகஸ்தர்கள் சங்கம் ஆகியவற்றில் தாணு புகார் கொடுத்துள்ளார். வக்கீல் நோட்டீஸும் சிம்புவுக்கு அனுப்பியுள்ளார். சிம்புவும், பதிலுக்கு நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார். இவர்களது தகராறால் தொட்டி ஜெயா படம் திட்டமிட்டபடிவருகிற12ம் தேதி வெளியாவதில் சிக்கல் நிலவுகிறது. ஏற்கனவே ஆளவந்தான் படம்தொடர்பாக கமல்ஹாசனுக்கும், தாணுவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. தான் போண்டிஆனதற்கு கமல்ஹாசனே காரணம் என்று சரமாரியாக புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் தாணு. காக்க காக்க படத்தின் மூலம் தான் மீண்டு வந்ததாகவும் கூறினார். இப்போது சிம்புவுடன் புதுப் பிரச்சினை வந்துள்ளது. ஏற்கனவே வல்லவன் பட விவகாரத்திலும் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்தினத்துக்கும், சிம்புவுக்கும் தகராறு ஏற்பட்டதுகுறிப்பிடத்தக்கது. அதிக செலவு வைக்கிறார் சிம்பு என்று ரத்தினம் குற்றம்சாட்டியிருந்தார்.

தாணு-சிம்பு மோதல்! தொங்கலில் தொட்டி ஜெயா!! தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவுக்கும், நடிகர் சிம்புவுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதால், டப்பிங் பாதிக்கப்பட்டு, தொட்டிஜெயா படம் வெளிவர முடியாத அளவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிம்பு, கோபிகா ஜோடியாக நடிக்க, மன்மதன் படத்தின் ரிலீஸுக்குப் பிறகு உடனடியாக பூஜை போடப்பட்டு ஆரம்பிக்கப்பட்டபடம் தொட்டி ஜெயா. முகவரி படத்தை இயக்கிய துரை தான் இப்படத்தின் இயக்குனர். கலைப்புலி தாணு இந்தப் படத்தை தயாரித்து வந்தார். தொட்டி ஜெயா படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டது.இருப்பினும் படம் வெளியாவதில் தொடர்ந்து இழுபறியாக இருந்து வந்தது. என்ன காரணம் என்று விசாரித்த போது தாணுவுக்கும், சிம்புவுக்கும் ஏற்பட்ட ரகளை காரணமாகவே படம் வெளியாவதில்தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. டப்பிங் பேச சிம்பு வர மறுப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிம்பு தரப்பில் கேட்டபோது, ரூ. 60 லட்சம் மட்டுமே சம்பளப் பணத்தை கலைப்புலி தாணு கொடுத்துள்ளார்.(மொத்த சம்பளம் ரூ. 75 லட்சம்). மீத சம்பளம் இன்னும் தரவில்லை. மன்மதன் நன்றாக ஓடினால் கூடுதலாக 25 லட்சம்தருவதாக தாணு கூறியிருந்தார். மன்மதன் நன்றாக வெற்றி பெற்றும் கூறியபடி கூடுதல் சம்பளத்தைத் தரவில்லை என்கிறது சிம்பு வட்டாரம். தாணுவோ வேறு மாதிரியாக கூறுகிறார். பேசினபடி சிம்புவுக்கு சம்பளம் கொடுத்தாகி விட்டது. இருந்தும் அவர் டப்பிங்குக்குவர மறுக்கிறார். கூடுதலாக சம்பளம் கேட்கிறார் என்று தாணு தரப்பு குற்றம் சாட்டுகிறது. 6 ரீல்களுக்கு மட்டுமே சிம்பு டப்பிங் பேசியுள்ளதாக தெரிகிறது. இதனால், சிம்பு மீது தயாரிப்பாளர் கவுன்சில்,விநியோகஸ்தர்கள் சங்கம் ஆகியவற்றில் தாணு புகார் கொடுத்துள்ளார். வக்கீல் நோட்டீஸும் சிம்புவுக்கு அனுப்பியுள்ளார். சிம்புவும், பதிலுக்கு நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார். இவர்களது தகராறால் தொட்டி ஜெயா படம் திட்டமிட்டபடிவருகிற12ம் தேதி வெளியாவதில் சிக்கல் நிலவுகிறது. ஏற்கனவே ஆளவந்தான் படம்தொடர்பாக கமல்ஹாசனுக்கும், தாணுவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. தான் போண்டிஆனதற்கு கமல்ஹாசனே காரணம் என்று சரமாரியாக புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் தாணு. காக்க காக்க படத்தின் மூலம் தான் மீண்டு வந்ததாகவும் கூறினார். இப்போது சிம்புவுடன் புதுப் பிரச்சினை வந்துள்ளது. ஏற்கனவே வல்லவன் பட விவகாரத்திலும் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்தினத்துக்கும், சிம்புவுக்கும் தகராறு ஏற்பட்டதுகுறிப்பிடத்தக்கது. அதிக செலவு வைக்கிறார் சிம்பு என்று ரத்தினம் குற்றம்சாட்டியிருந்தார்.

Subscribe to Oneindia Tamil

தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவுக்கும், நடிகர் சிம்புவுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதால், டப்பிங் பாதிக்கப்பட்டு, தொட்டிஜெயா படம் வெளிவர முடியாத அளவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சிம்பு, கோபிகா ஜோடியாக நடிக்க, மன்மதன் படத்தின் ரிலீஸுக்குப் பிறகு உடனடியாக பூஜை போடப்பட்டு ஆரம்பிக்கப்பட்டபடம் தொட்டி ஜெயா. முகவரி படத்தை இயக்கிய துரை தான் இப்படத்தின் இயக்குனர்.

கலைப்புலி தாணு இந்தப் படத்தை தயாரித்து வந்தார். தொட்டி ஜெயா படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டது.இருப்பினும் படம் வெளியாவதில் தொடர்ந்து இழுபறியாக இருந்து வந்தது.

என்ன காரணம் என்று விசாரித்த போது தாணுவுக்கும், சிம்புவுக்கும் ஏற்பட்ட ரகளை காரணமாகவே படம் வெளியாவதில்தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. டப்பிங் பேச சிம்பு வர மறுப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிம்பு தரப்பில் கேட்டபோது, ரூ. 60 லட்சம் மட்டுமே சம்பளப் பணத்தை கலைப்புலி தாணு கொடுத்துள்ளார்.(மொத்த சம்பளம் ரூ. 75 லட்சம்). மீத சம்பளம் இன்னும் தரவில்லை. மன்மதன் நன்றாக ஓடினால் கூடுதலாக 25 லட்சம்தருவதாக தாணு கூறியிருந்தார்.

மன்மதன் நன்றாக வெற்றி பெற்றும் கூறியபடி கூடுதல் சம்பளத்தைத் தரவில்லை என்கிறது சிம்பு வட்டாரம்.

தாணுவோ வேறு மாதிரியாக கூறுகிறார். பேசினபடி சிம்புவுக்கு சம்பளம் கொடுத்தாகி விட்டது. இருந்தும் அவர் டப்பிங்குக்குவர மறுக்கிறார். கூடுதலாக சம்பளம் கேட்கிறார் என்று தாணு தரப்பு குற்றம் சாட்டுகிறது.


6 ரீல்களுக்கு மட்டுமே சிம்பு டப்பிங் பேசியுள்ளதாக தெரிகிறது. இதனால், சிம்பு மீது தயாரிப்பாளர் கவுன்சில்,விநியோகஸ்தர்கள் சங்கம் ஆகியவற்றில் தாணு புகார் கொடுத்துள்ளார். வக்கீல் நோட்டீஸும் சிம்புவுக்கு அனுப்பியுள்ளார்.

சிம்புவும், பதிலுக்கு நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார். இவர்களது தகராறால் தொட்டி ஜெயா படம் திட்டமிட்டபடிவருகிற12ம் தேதி வெளியாவதில் சிக்கல் நிலவுகிறது.

ஏற்கனவே ஆளவந்தான் படம்தொடர்பாக கமல்ஹாசனுக்கும், தாணுவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. தான் போண்டிஆனதற்கு கமல்ஹாசனே காரணம் என்று சரமாரியாக புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் தாணு.

காக்க காக்க படத்தின் மூலம் தான் மீண்டு வந்ததாகவும் கூறினார். இப்போது சிம்புவுடன் புதுப் பிரச்சினை வந்துள்ளது.

ஏற்கனவே வல்லவன் பட விவகாரத்திலும் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்தினத்துக்கும், சிம்புவுக்கும் தகராறு ஏற்பட்டதுகுறிப்பிடத்தக்கது. அதிக செலவு வைக்கிறார் சிம்பு என்று ரத்தினம் குற்றம்சாட்டியிருந்தார்.


Read more about: simbu vs producer dhanu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil