twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அடங்கினார் சிம்பு, வென்றார் தாணு.. ஒப்பந்தம் செய்த சம்பளமான ரூ. 75 லட்சத்தையே பெற்றுக் கொள்கிறேன் என்று நடிகர் சிம்பு கூறி விட்டதால், தொட்டி ஜெயாபடம் வெளிவருவதற்கு இருந்த தடை நீங்கியுள்ளது.கலைப்புலி தாணு தயாரிக்க சிம்பு, கோபிகா நடிப்பில் உருவான படம் தொட்டி ஜெயா. இப்படத்தில் நடிப்பதற்காக சிம்புவுக்குரூ. 75 லட்சம் சம்பளம் பேசியுள்ளார் கலைப்புலி தாணு.தொட்டி ஜெயா ஆரம்பித்த நேரத்தில் மன்மதன் படம் வெளியாகியது. மன்மதன் பெரும் வெற்றி பெற்றதால், தொட்டி ஜெயாவும்நன்றாகி ஓடினால் கூடுதலாக 25 லட்சம் தருகிறேன் என்று சிம்புவிடம் கலைப்புலி தாணு வாய்மொழியாக கூறியதாக தெரிகிறது.பெரிய மனதுடன் தாணு அதைக் கூறியுள்ளார்.ஆனால், மன்மதன் பெரும் வெற்றியைப் பெற்றதால் (படம் ஓடினாலும் அதிக செலவு காரணமாக தயாரிப்பாளர் தலையில்துண்டு போட்டுக் கொண்டது தனிக் கதை) கூடுதல் சம்பளத்தைத் தருமாறு திடீரென தாணுவிடம் சிம்பு கேட்டுள்ளார். ஆனால், நான் படம் நன்றாக ஓடினால் தானே கூடுதலாக ரூ. 25 லட்சம் தருவதாகச் சொன்னேன் என்று பாயிண்டைப்பிடித்திருக்கிறார் தாணு. இதனால் எரிச்சலான சிம்பு படம் முடிவடைந்ததும், டப்பிங் பேச வராமல் இழுத்தடிக்க ஆரம்பித்தார். தனது வழக்கமானஅமைதியுடன், சிறிது நாட்கள் பொறுத்திருந்தார் தாணு. ஆனால், சிம்பு சரிப்பட்டு வராமல் போகவே தயாரிப்பாளர் கவுன்சிலில்புகார் கொடுத்தார்.இதுதவிர வக்கீல் மூலமும் சிம்புவுக்கு நோட்டீஸும் அனுப்பினார்.பதிலுக்கு சிம்புவும் நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்தார். ஆனால் இந்தப் பிரச்சினையில் சிம்பு தரப்பு வாதம் படு வீக்காகஇருந்ததால், தயாரிப்பாளருடன் சமாதானமாகப் போகும்படி நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த், அட்வைஸ் கூறி சிம்புவைஅனுப்பி வைத்துவிட்டார்.மேலும் விஜய்காந்தை வைத்து பல வெற்றிப் படங்களை தயாரித்த தாணு, தயாரிப்பாளர்கள் மத்தியில் மகா ஜென்டில்மேன்என்ற பெயர் எடுத்தவர். அவரிடம் சிம்பு மோதியதை கேப்டன் ரசிக்கவில்லை என்று தெரிகிறது.மேலும் தங்களது சங்கத்தின் முக்கியத் தயாரிப்பாளரான தாணுவையே அலையவிட்ட சிம்புவுக்கு பாடம் புகட்டவும்தயாரிப்பாளர் சங்கம் தயாரானது. ஆனாலும் சங்கத்தின் தலைவரான டி.ஜி.தியாகராஜன் இந்த விவகாரத்தை மிக நாசுக்காகவேகையாண்டார்.எடுத்தேன் கவித்தேன் என்ற வகையில் செயல்படாத மிக நிதானமான தியாகராஜன் ஒரு சமாதானக் கூட்டத்தைக் கூட்டினார்.அதில் முன்னாள் தலைவர் கே.ஆர்.ஜி, கலைப்புலி தாணு, சிம்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.அப்போது ரூ. 75 லட்சம் சம்பளத்திற்குத்தான் தாணு ஒப்பந்தம் செய்துள்ளார். அவராக விருப்பப்பட்டு கூடுதல் சம்பளம்கொடுத்தால் சிம்பு பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அதை கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என்று சட்டப்பூர்வமாக சிம்பு கோரமுடியாது.எனவே ஒத்துக் காண்ட சம்பளத்தை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தியாகராஜன் கட்-அண்ட் ரைட்டாக எடுத்துக்கூறியுள்ளார். மேலும் இதுவரை சம்பளமாக ரூ. 60 லட்சம் வரை தாணு கொடுத்து விட்டார். மீத பணத்தையும் உடனடியாக அவர் கொடுத்துவிடுவார். அதைப் பெற்றுக் கொண்டு டப்பிங்கை முடித்துத் தர வேண்டும் என்றும் சிம்புவிடம் எடுத்துக் கூறப்பட்டது.தப்பான இடத்தில் மோதி விட்டதை உணர்ந்து கொண்ட சிம்பு, உடனடியாக இறங்கி வர சம்மதித்தாராம். மேலும் கூடுதல்சம்பளம் கோர மாட்டேன் என்றும் உறுதியளித்துள்ளார். இதைத் தொடர்ந்து விரைவில் டப்பிங் பேச சிம்பு வரவிருப்பதாகவும்,இந்த சிக்கல் தீர்ந்து விட்டதாகவும் தியாகராஜன் அறிவித்துள்ளார்.எனவே விரைவில் தொட்டி ஜெயா வெளியாகும் என்று கலைப்புலி தாணுவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.மன்மதன் படம் எதிர்பாராத வகையில் பெரிய வெற்றியைப் பெற்று விட்டதால் சிம்புவின் மண்டைக் கனம் பல மடங்குஅதிகரித்துள்ளது. அவரது அப்பா விஜய. டி. ராஜேந்தரை விட அதிகமாகவே சொடக்கு போட்டுக் கொண்டு ஓவராகவே பேசிவரும் சிம்புவின் ஆட்டமும் அதிகமாகவே உள்ளதாக கோலிவுட் கரித்துக் கொட்டிக் கொண்டிருக்கிறது.தான் நினைத்த மாதிரிதான் படம் எடுக்க வேண்டும். தான் சொல்வது போல கதையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று சிம்புகூறியதால்தான் தொட்டி ஜெயா படம் ஏற்கனவே தாமதமானது. இந் நிலையில் டப்பிங் பேச சிம்பு வர மறுத்ததால், நல்ல மனம் கொண்ட தயாரிப்பாளர்களில் ஒருவரான தாணுவுக்கு கடந்த சிலவாரங்களில் மட்டும் பல லட்சங்கள் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், எதையும் வெளியில் காட்டிக் கொள்ளாமல்அமைதி காத்து வந்தார் தாணு.தங்கச்சி செண்டிமெண்ட் விஜய டி.ராஜேந்தர் பாஷையில் சொன்னால்,வளர்ர புள்ளை சிம்பு,கொஞ்சம் அடங்கி நடந்தா ஏன் வம்பு?ஏய் மடக், அடக், தடக்.. ஊய்...

    By Staff
    |

    ஒப்பந்தம் செய்த சம்பளமான ரூ. 75 லட்சத்தையே பெற்றுக் கொள்கிறேன் என்று நடிகர் சிம்பு கூறி விட்டதால், தொட்டி ஜெயாபடம் வெளிவருவதற்கு இருந்த தடை நீங்கியுள்ளது.

    கலைப்புலி தாணு தயாரிக்க சிம்பு, கோபிகா நடிப்பில் உருவான படம் தொட்டி ஜெயா. இப்படத்தில் நடிப்பதற்காக சிம்புவுக்குரூ. 75 லட்சம் சம்பளம் பேசியுள்ளார் கலைப்புலி தாணு.

    தொட்டி ஜெயா ஆரம்பித்த நேரத்தில் மன்மதன் படம் வெளியாகியது. மன்மதன் பெரும் வெற்றி பெற்றதால், தொட்டி ஜெயாவும்நன்றாகி ஓடினால் கூடுதலாக 25 லட்சம் தருகிறேன் என்று சிம்புவிடம் கலைப்புலி தாணு வாய்மொழியாக கூறியதாக தெரிகிறது.பெரிய மனதுடன் தாணு அதைக் கூறியுள்ளார்.

    ஆனால், மன்மதன் பெரும் வெற்றியைப் பெற்றதால் (படம் ஓடினாலும் அதிக செலவு காரணமாக தயாரிப்பாளர் தலையில்துண்டு போட்டுக் கொண்டது தனிக் கதை) கூடுதல் சம்பளத்தைத் தருமாறு திடீரென தாணுவிடம் சிம்பு கேட்டுள்ளார்.


    ஆனால், நான் படம் நன்றாக ஓடினால் தானே கூடுதலாக ரூ. 25 லட்சம் தருவதாகச் சொன்னேன் என்று பாயிண்டைப்பிடித்திருக்கிறார் தாணு.

    இதனால் எரிச்சலான சிம்பு படம் முடிவடைந்ததும், டப்பிங் பேச வராமல் இழுத்தடிக்க ஆரம்பித்தார். தனது வழக்கமானஅமைதியுடன், சிறிது நாட்கள் பொறுத்திருந்தார் தாணு. ஆனால், சிம்பு சரிப்பட்டு வராமல் போகவே தயாரிப்பாளர் கவுன்சிலில்புகார் கொடுத்தார்.

    இதுதவிர வக்கீல் மூலமும் சிம்புவுக்கு நோட்டீஸும் அனுப்பினார்.

    பதிலுக்கு சிம்புவும் நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்தார். ஆனால் இந்தப் பிரச்சினையில் சிம்பு தரப்பு வாதம் படு வீக்காகஇருந்ததால், தயாரிப்பாளருடன் சமாதானமாகப் போகும்படி நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த், அட்வைஸ் கூறி சிம்புவைஅனுப்பி வைத்துவிட்டார்.

    மேலும் விஜய்காந்தை வைத்து பல வெற்றிப் படங்களை தயாரித்த தாணு, தயாரிப்பாளர்கள் மத்தியில் மகா ஜென்டில்மேன்என்ற பெயர் எடுத்தவர். அவரிடம் சிம்பு மோதியதை கேப்டன் ரசிக்கவில்லை என்று தெரிகிறது.

    மேலும் தங்களது சங்கத்தின் முக்கியத் தயாரிப்பாளரான தாணுவையே அலையவிட்ட சிம்புவுக்கு பாடம் புகட்டவும்தயாரிப்பாளர் சங்கம் தயாரானது. ஆனாலும் சங்கத்தின் தலைவரான டி.ஜி.தியாகராஜன் இந்த விவகாரத்தை மிக நாசுக்காகவேகையாண்டார்.

    எடுத்தேன் கவித்தேன் என்ற வகையில் செயல்படாத மிக நிதானமான தியாகராஜன் ஒரு சமாதானக் கூட்டத்தைக் கூட்டினார்.அதில் முன்னாள் தலைவர் கே.ஆர்.ஜி, கலைப்புலி தாணு, சிம்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அப்போது ரூ. 75 லட்சம் சம்பளத்திற்குத்தான் தாணு ஒப்பந்தம் செய்துள்ளார். அவராக விருப்பப்பட்டு கூடுதல் சம்பளம்கொடுத்தால் சிம்பு பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அதை கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என்று சட்டப்பூர்வமாக சிம்பு கோரமுடியாது.

    எனவே ஒத்துக் காண்ட சம்பளத்தை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தியாகராஜன் கட்-அண்ட் ரைட்டாக எடுத்துக்கூறியுள்ளார்.


    மேலும் இதுவரை சம்பளமாக ரூ. 60 லட்சம் வரை தாணு கொடுத்து விட்டார். மீத பணத்தையும் உடனடியாக அவர் கொடுத்துவிடுவார். அதைப் பெற்றுக் கொண்டு டப்பிங்கை முடித்துத் தர வேண்டும் என்றும் சிம்புவிடம் எடுத்துக் கூறப்பட்டது.

    தப்பான இடத்தில் மோதி விட்டதை உணர்ந்து கொண்ட சிம்பு, உடனடியாக இறங்கி வர சம்மதித்தாராம். மேலும் கூடுதல்சம்பளம் கோர மாட்டேன் என்றும் உறுதியளித்துள்ளார். இதைத் தொடர்ந்து விரைவில் டப்பிங் பேச சிம்பு வரவிருப்பதாகவும்,இந்த சிக்கல் தீர்ந்து விட்டதாகவும் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

    எனவே விரைவில் தொட்டி ஜெயா வெளியாகும் என்று கலைப்புலி தாணுவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

    மன்மதன் படம் எதிர்பாராத வகையில் பெரிய வெற்றியைப் பெற்று விட்டதால் சிம்புவின் மண்டைக் கனம் பல மடங்குஅதிகரித்துள்ளது. அவரது அப்பா விஜய. டி. ராஜேந்தரை விட அதிகமாகவே சொடக்கு போட்டுக் கொண்டு ஓவராகவே பேசிவரும் சிம்புவின் ஆட்டமும் அதிகமாகவே உள்ளதாக கோலிவுட் கரித்துக் கொட்டிக் கொண்டிருக்கிறது.

    தான் நினைத்த மாதிரிதான் படம் எடுக்க வேண்டும். தான் சொல்வது போல கதையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று சிம்புகூறியதால்தான் தொட்டி ஜெயா படம் ஏற்கனவே தாமதமானது.

    இந் நிலையில் டப்பிங் பேச சிம்பு வர மறுத்ததால், நல்ல மனம் கொண்ட தயாரிப்பாளர்களில் ஒருவரான தாணுவுக்கு கடந்த சிலவாரங்களில் மட்டும் பல லட்சங்கள் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், எதையும் வெளியில் காட்டிக் கொள்ளாமல்அமைதி காத்து வந்தார் தாணு.

    தங்கச்சி செண்டிமெண்ட் விஜய டி.ராஜேந்தர் பாஷையில் சொன்னால்,

    வளர்ர புள்ளை சிம்பு,

    கொஞ்சம் அடங்கி நடந்தா ஏன் வம்பு?

    ஏய் மடக், அடக், தடக்.. ஊய்...

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X