»   »  சிம்புவின் காதல் வம்புகள்! சிம்புவுக்கு வம்பு செய்வது ரொம்பவே பிடித்தமான ஒன்று. என்ன இருந்தாலும் அப்பா டி.ஆர். ஆச்சே.இப்போது அடுத்தடுத்து சூடான கிசுகிசுக்களில் சிக்கி வருகிறார் சிம்பு. அவரை லண்டனில் ஒரு பெண்ணுடன் பார்த்ததாக சிலமாதங்களுக்கு முன்பு செய்திகள் வந்தன. லண்டனைச் சேர்ந்த அந்தப் பெண்ணை சிம்பு படு டீப்பாக காதலிக்கிறார் என்றும்,இரண்டு பேரும் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் கூறின.ஆனால் இந்த கிசு கிசுவை சிம்பு கண்டு கொள்ளவே இல்லை. மாறாக, நான் யாரையும் காதலிக்கவில்ல. அதற்கு எனக்குநேரமும் இல்லை. லண்டனை எனக்குப் பிடிக்கும். அதற்காக அடிக்கடி அங்கு போய் ஓய்வாக இருந்து விட்டு வருவேன் என்றுகூறினார் சிம்பு.இப்போது இன்னொரு கிசு கிசு இண்டஸ்ட்ரியில் படு வேகமாகப் பரவி வருகிறது. சென்னை நந்தம்பாக்கம் சென்னை வர்த்தகமையத்தில் சமீபத்தில் சரவணா பட ஷூட்டிங் நடந்தது. இதேபோல விஜிபி, அயப்பன்தாங்கல் ஆகிய இடங்களிலும் இந்தப் படஷூட்டிங் நடத்தப்பட்டது. இதற்காக மும்பையைச் சேர்ந்த 50 மாடல் பெண்களை சென்னைக்கு இறக்குமதி செய்திருந்தனர். இதில் சில மாடல்கள் சிம்புவைக்கவர்ந்து விட்டனர். உடனே அந்த மாடல்களை அழைத்துக் கொண்டு கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் உள்ள நட்சத்திரஹோட்டலுக்கு எஸ்கேப் ஆகியுள்ளார் சிம்பு.அங்கு சிம்புவும், அவரது மனம் கவர்ந்தவர்களும் படு குஜாலாக கொட்டமடித்துள்ளனராம். படப்பிடிப்பு சமயங்களில் கூட சிம்புஇப்படி குஷால் செய்ததால் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கடுப்பாகியுள்ளார். இருந்தாலும் நேரடியாக அவரிடம் சொல்லாமல்மறைமுமாக தனது கடுப்பைக் காட்டியுள்ளார். இதைப் புரிந்து கொண்ட சிம்பு அதன் பிறகு படப்பிடிப்பு சமயங்களில் வைத்துக்கொள்ளாமல், படப்பிடிப்பு முடிந்த பிறகு ஜமாய்த்துள்ளாராம்.இந்த செய்தி வதந்தியா அல்லது உண்மையா என்பது ருசுவாகவில்லை என்றாலும் கூட வம்புப் பார்ட்டி என்ற பெயர் சிம்புவின்கூடவே ஒட்டிக் கொண்டிருப்பதால் நடந்திருக்கலாமோ என்ற எண்ணமும் கூடவே வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

சிம்புவின் காதல் வம்புகள்! சிம்புவுக்கு வம்பு செய்வது ரொம்பவே பிடித்தமான ஒன்று. என்ன இருந்தாலும் அப்பா டி.ஆர். ஆச்சே.இப்போது அடுத்தடுத்து சூடான கிசுகிசுக்களில் சிக்கி வருகிறார் சிம்பு. அவரை லண்டனில் ஒரு பெண்ணுடன் பார்த்ததாக சிலமாதங்களுக்கு முன்பு செய்திகள் வந்தன. லண்டனைச் சேர்ந்த அந்தப் பெண்ணை சிம்பு படு டீப்பாக காதலிக்கிறார் என்றும்,இரண்டு பேரும் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் கூறின.ஆனால் இந்த கிசு கிசுவை சிம்பு கண்டு கொள்ளவே இல்லை. மாறாக, நான் யாரையும் காதலிக்கவில்ல. அதற்கு எனக்குநேரமும் இல்லை. லண்டனை எனக்குப் பிடிக்கும். அதற்காக அடிக்கடி அங்கு போய் ஓய்வாக இருந்து விட்டு வருவேன் என்றுகூறினார் சிம்பு.இப்போது இன்னொரு கிசு கிசு இண்டஸ்ட்ரியில் படு வேகமாகப் பரவி வருகிறது. சென்னை நந்தம்பாக்கம் சென்னை வர்த்தகமையத்தில் சமீபத்தில் சரவணா பட ஷூட்டிங் நடந்தது. இதேபோல விஜிபி, அயப்பன்தாங்கல் ஆகிய இடங்களிலும் இந்தப் படஷூட்டிங் நடத்தப்பட்டது. இதற்காக மும்பையைச் சேர்ந்த 50 மாடல் பெண்களை சென்னைக்கு இறக்குமதி செய்திருந்தனர். இதில் சில மாடல்கள் சிம்புவைக்கவர்ந்து விட்டனர். உடனே அந்த மாடல்களை அழைத்துக் கொண்டு கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் உள்ள நட்சத்திரஹோட்டலுக்கு எஸ்கேப் ஆகியுள்ளார் சிம்பு.அங்கு சிம்புவும், அவரது மனம் கவர்ந்தவர்களும் படு குஜாலாக கொட்டமடித்துள்ளனராம். படப்பிடிப்பு சமயங்களில் கூட சிம்புஇப்படி குஷால் செய்ததால் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கடுப்பாகியுள்ளார். இருந்தாலும் நேரடியாக அவரிடம் சொல்லாமல்மறைமுமாக தனது கடுப்பைக் காட்டியுள்ளார். இதைப் புரிந்து கொண்ட சிம்பு அதன் பிறகு படப்பிடிப்பு சமயங்களில் வைத்துக்கொள்ளாமல், படப்பிடிப்பு முடிந்த பிறகு ஜமாய்த்துள்ளாராம்.இந்த செய்தி வதந்தியா அல்லது உண்மையா என்பது ருசுவாகவில்லை என்றாலும் கூட வம்புப் பார்ட்டி என்ற பெயர் சிம்புவின்கூடவே ஒட்டிக் கொண்டிருப்பதால் நடந்திருக்கலாமோ என்ற எண்ணமும் கூடவே வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

Subscribe to Oneindia Tamil

சிம்புவுக்கு வம்பு செய்வது ரொம்பவே பிடித்தமான ஒன்று. என்ன இருந்தாலும் அப்பா டி.ஆர். ஆச்சே.

இப்போது அடுத்தடுத்து சூடான கிசுகிசுக்களில் சிக்கி வருகிறார் சிம்பு. அவரை லண்டனில் ஒரு பெண்ணுடன் பார்த்ததாக சிலமாதங்களுக்கு முன்பு செய்திகள் வந்தன. லண்டனைச் சேர்ந்த அந்தப் பெண்ணை சிம்பு படு டீப்பாக காதலிக்கிறார் என்றும்,இரண்டு பேரும் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் கூறின.

ஆனால் இந்த கிசு கிசுவை சிம்பு கண்டு கொள்ளவே இல்லை. மாறாக, நான் யாரையும் காதலிக்கவில்ல. அதற்கு எனக்குநேரமும் இல்லை. லண்டனை எனக்குப் பிடிக்கும். அதற்காக அடிக்கடி அங்கு போய் ஓய்வாக இருந்து விட்டு வருவேன் என்றுகூறினார் சிம்பு.

இப்போது இன்னொரு கிசு கிசு இண்டஸ்ட்ரியில் படு வேகமாகப் பரவி வருகிறது. சென்னை நந்தம்பாக்கம் சென்னை வர்த்தகமையத்தில் சமீபத்தில் சரவணா பட ஷூட்டிங் நடந்தது. இதேபோல விஜிபி, அயப்பன்தாங்கல் ஆகிய இடங்களிலும் இந்தப் படஷூட்டிங் நடத்தப்பட்டது.


இதற்காக மும்பையைச் சேர்ந்த 50 மாடல் பெண்களை சென்னைக்கு இறக்குமதி செய்திருந்தனர். இதில் சில மாடல்கள் சிம்புவைக்கவர்ந்து விட்டனர். உடனே அந்த மாடல்களை அழைத்துக் கொண்டு கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் உள்ள நட்சத்திரஹோட்டலுக்கு எஸ்கேப் ஆகியுள்ளார் சிம்பு.

அங்கு சிம்புவும், அவரது மனம் கவர்ந்தவர்களும் படு குஜாலாக கொட்டமடித்துள்ளனராம். படப்பிடிப்பு சமயங்களில் கூட சிம்புஇப்படி குஷால் செய்ததால் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கடுப்பாகியுள்ளார். இருந்தாலும் நேரடியாக அவரிடம் சொல்லாமல்மறைமுமாக தனது கடுப்பைக் காட்டியுள்ளார். இதைப் புரிந்து கொண்ட சிம்பு அதன் பிறகு படப்பிடிப்பு சமயங்களில் வைத்துக்கொள்ளாமல், படப்பிடிப்பு முடிந்த பிறகு ஜமாய்த்துள்ளாராம்.

இந்த செய்தி வதந்தியா அல்லது உண்மையா என்பது ருசுவாகவில்லை என்றாலும் கூட வம்புப் பார்ட்டி என்ற பெயர் சிம்புவின்கூடவே ஒட்டிக் கொண்டிருப்பதால் நடந்திருக்கலாமோ என்ற எண்ணமும் கூடவே வருவதைத் தவிர்க்க முடியவில்லை.


Read more about: simbu and mumbai models

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil