»   »  சிம்பு தரும் தொல்லைகள் தயாரிபாளர்களை வதைப்பது எப்படி என்று சிம்பு புத்தகமே எழுதலாம் போலிருக்கிறது.அந்த அளவுக்கு போட்டுத் தாக்கிவிடுகிறார். சிம்புவை வைத்து படப்பிடிப்பைத் தொடங்கி முடிப்பதற்குள், தயாரிப்பாளர்களின்தாவு தீர்ந்து விடுகிறதாம்.தயாரிப்பாளர்களை நொந்து நூடுல்சாகச் செய்வதில் வழக்கமாக நடிகைகள்தான் எக்ஸ்பர்ட். ஆனால்சிம்பு, ஜெயம் ரவிஆகியோரைப் போன்ற நடிகர்கள் நடிகைகளை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விடுகிறார்களாம்.சிம்பு, ரவியை வைத்து படம் எடுத்துள்ள இயக்குனர்களையும், வெளித் தயாரிப்பாளர்களையும் கேட்டால் வண்டி வண்டியாகரத்தக் கண்ணீர் வடிக்கிறார்கள்.சிம்புவிடம் முதலில் கிருஷ்ணகாந்த் சிக்கினார். சிம்புவை வைத்து மன்மதன் படத்தை எடுத்து முடிப்பதற்குள் தலை சுற்றிதாறுமாறாகி விட்டார்.பின்னர் மாட்டினார் கலைப்புலி தாணு. தொட்டி ஜெயாவை எடுத்து முடித்து அதை வெளியிடுவதற்குள் சிம்புவிடம்சின்னாபின்னமாகி விட்டார் தாணு.ஒரு வழியாக பஞ்சாயத்துப் பேசி படத்தை ரிலீஸ் செய்தார் தாணு. ஆனால் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை. இப்போதுஅப்படத்தை தெலுங்கில் டப் செய்து விட்ட பணத்தைப் பிடிக்க முயற்சிகளில் இறங்கியுள்ளார். இந் நிலையில் தயாரிப்பாளர் தேனப்பன், வல்லவன் என்ற படத்தை சிம்புவை வைத்து ஆரம்பித்தார். படப்பிடிப்பு நடக்கிறதா,இல்லையா என்றே தெரியாத அளவுக்கு ஏகப்பட்ட அவஸ்தைகளில் சிக்கி ஆமை போல நகர்ந்து கொண்டிருக்கிறது வல்லவன்.கதையை மாற்றி, மாற்றி தயாரிப்பு செலவை எகிறச் செய்து கொண்டிருக்கிறாராம் சிம்பு.அத்தோடு படப்பிடிப்பும் திட்டமிட்டபடி நடக்காமல், சிம்புவுக்கு தோதாக டைம் கிடைக்கும்போதெல்லாம் நடந்து வருவதால்தேனப்பன், நொந்து போயிருக்கிறாராம். சமீபத்தில் ரொம்ப வெறுத்துப் போய் யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் சிங்கப்பூரில்போய் 10 நாட்கள் ரெஸ்ட் எடுத்துவிட்டு மனதை அமைதியாக்கிக் கொண்டு திரும்பியிருக்கிறார் தேனப்பன்.இப்போது சிம்புவால் தயாரிப்பாளர் துரை தவியாய் தவிக்க ஆரம்பித்துள்ளார் என்கிறார்கள். இவர் தயாரிக்க சரவணா என்றபெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி வருகிறார்.மன்மதன் படப்பிடிப்பின்போது சிம்பு செய்த சில்மிஷங்களால் வெகுண்டு போயிருந்த ஜோதிகா, சமாதானமாகி, சில பலகண்டிஷன்களுடன் சரவணாவில் சிம்புவுக்கு ஜோடியாக இதில் நடித்துக் கொண்டுள்ளார்.இப்படத்தின் ஷூட்டிங்கிலும் சிம்பு தனது வாலை மெதுவாக நீட்டி வருகிறாராம். ஆரம்பத்தில் சமர்த்தாக வந்து போய்க்கொண்டிருந்த சிம்பு, இப்போது ஏகப்பட்ட வம்புகளை செய்து வருகிறாராம்.அவரது அனத்தலால் மேக்னா நாயுடுவைக் கூட்டி வந்து ஒரு குத்துப் பாட்டை எடுத்தார் ரவிக்குமார். மேக்னா கேட்ட பெரும்தொகையை சிம்பு சொன்னதால் வேறு வழியின்றி கொடுத்தாராம் தயாரிப்பாளர். இப்படி சின்னச் சின்னச் செலவுகளாக இழுத்து இப்போது தயாரிப்புச் செலவு திட்டமிட்டதை விட எகிறி எங்கேயோ போய்விட்டதாம்.தெலுங்கில் ஏற்கனவே வெற்றி பெற்ற படத்தைத்தான் சரவணா என்ற பெயரில் ரீமேக் செய்து கொண்டுள்ளார்கள். பொதுவாகரீமேக் படத்திற்கு அதிக செலவு ஆகாது என்பார்கள். ஆனால் அதை மீறி விட்டதாம் சரவணா.இப்படியே போனால் துண்டுதான் மிஞ்சும் என்று யோசித்துப் பார்த்த தயாரிப்பாளர் துரை, சரவணா படத் தயாரிப்பு செலவுகளைநீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்று சிம்புவும் மெதுவாகப் பேசியுள்ளார். அதுக்குத்தானே காத்திருந்தேன் என்பது போல,சரியென்று சொல்லி விட்டாராம் சிம்பு.இப்படித்தான் சரவணா படம், சிம்புவின் கஸ்டடிக்கு வந்ததாம். தனது தந்தை டி.ஆரின் உதவியுடன் படத்தை இப்போது அவர்தான் தயாரிக்கிறார் என்பதை நாம் முன்பே சொல்லியிருக்கிறோம். ஆனால், ஏன் தயாரிப்பு அவர் வசம் வந்தது என்பதற்குத் தான்மேற்கண்ட விளக்கம்.

சிம்பு தரும் தொல்லைகள் தயாரிபாளர்களை வதைப்பது எப்படி என்று சிம்பு புத்தகமே எழுதலாம் போலிருக்கிறது.அந்த அளவுக்கு போட்டுத் தாக்கிவிடுகிறார். சிம்புவை வைத்து படப்பிடிப்பைத் தொடங்கி முடிப்பதற்குள், தயாரிப்பாளர்களின்தாவு தீர்ந்து விடுகிறதாம்.தயாரிப்பாளர்களை நொந்து நூடுல்சாகச் செய்வதில் வழக்கமாக நடிகைகள்தான் எக்ஸ்பர்ட். ஆனால்சிம்பு, ஜெயம் ரவிஆகியோரைப் போன்ற நடிகர்கள் நடிகைகளை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விடுகிறார்களாம்.சிம்பு, ரவியை வைத்து படம் எடுத்துள்ள இயக்குனர்களையும், வெளித் தயாரிப்பாளர்களையும் கேட்டால் வண்டி வண்டியாகரத்தக் கண்ணீர் வடிக்கிறார்கள்.சிம்புவிடம் முதலில் கிருஷ்ணகாந்த் சிக்கினார். சிம்புவை வைத்து மன்மதன் படத்தை எடுத்து முடிப்பதற்குள் தலை சுற்றிதாறுமாறாகி விட்டார்.பின்னர் மாட்டினார் கலைப்புலி தாணு. தொட்டி ஜெயாவை எடுத்து முடித்து அதை வெளியிடுவதற்குள் சிம்புவிடம்சின்னாபின்னமாகி விட்டார் தாணு.ஒரு வழியாக பஞ்சாயத்துப் பேசி படத்தை ரிலீஸ் செய்தார் தாணு. ஆனால் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை. இப்போதுஅப்படத்தை தெலுங்கில் டப் செய்து விட்ட பணத்தைப் பிடிக்க முயற்சிகளில் இறங்கியுள்ளார். இந் நிலையில் தயாரிப்பாளர் தேனப்பன், வல்லவன் என்ற படத்தை சிம்புவை வைத்து ஆரம்பித்தார். படப்பிடிப்பு நடக்கிறதா,இல்லையா என்றே தெரியாத அளவுக்கு ஏகப்பட்ட அவஸ்தைகளில் சிக்கி ஆமை போல நகர்ந்து கொண்டிருக்கிறது வல்லவன்.கதையை மாற்றி, மாற்றி தயாரிப்பு செலவை எகிறச் செய்து கொண்டிருக்கிறாராம் சிம்பு.அத்தோடு படப்பிடிப்பும் திட்டமிட்டபடி நடக்காமல், சிம்புவுக்கு தோதாக டைம் கிடைக்கும்போதெல்லாம் நடந்து வருவதால்தேனப்பன், நொந்து போயிருக்கிறாராம். சமீபத்தில் ரொம்ப வெறுத்துப் போய் யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் சிங்கப்பூரில்போய் 10 நாட்கள் ரெஸ்ட் எடுத்துவிட்டு மனதை அமைதியாக்கிக் கொண்டு திரும்பியிருக்கிறார் தேனப்பன்.இப்போது சிம்புவால் தயாரிப்பாளர் துரை தவியாய் தவிக்க ஆரம்பித்துள்ளார் என்கிறார்கள். இவர் தயாரிக்க சரவணா என்றபெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி வருகிறார்.மன்மதன் படப்பிடிப்பின்போது சிம்பு செய்த சில்மிஷங்களால் வெகுண்டு போயிருந்த ஜோதிகா, சமாதானமாகி, சில பலகண்டிஷன்களுடன் சரவணாவில் சிம்புவுக்கு ஜோடியாக இதில் நடித்துக் கொண்டுள்ளார்.இப்படத்தின் ஷூட்டிங்கிலும் சிம்பு தனது வாலை மெதுவாக நீட்டி வருகிறாராம். ஆரம்பத்தில் சமர்த்தாக வந்து போய்க்கொண்டிருந்த சிம்பு, இப்போது ஏகப்பட்ட வம்புகளை செய்து வருகிறாராம்.அவரது அனத்தலால் மேக்னா நாயுடுவைக் கூட்டி வந்து ஒரு குத்துப் பாட்டை எடுத்தார் ரவிக்குமார். மேக்னா கேட்ட பெரும்தொகையை சிம்பு சொன்னதால் வேறு வழியின்றி கொடுத்தாராம் தயாரிப்பாளர். இப்படி சின்னச் சின்னச் செலவுகளாக இழுத்து இப்போது தயாரிப்புச் செலவு திட்டமிட்டதை விட எகிறி எங்கேயோ போய்விட்டதாம்.தெலுங்கில் ஏற்கனவே வெற்றி பெற்ற படத்தைத்தான் சரவணா என்ற பெயரில் ரீமேக் செய்து கொண்டுள்ளார்கள். பொதுவாகரீமேக் படத்திற்கு அதிக செலவு ஆகாது என்பார்கள். ஆனால் அதை மீறி விட்டதாம் சரவணா.இப்படியே போனால் துண்டுதான் மிஞ்சும் என்று யோசித்துப் பார்த்த தயாரிப்பாளர் துரை, சரவணா படத் தயாரிப்பு செலவுகளைநீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்று சிம்புவும் மெதுவாகப் பேசியுள்ளார். அதுக்குத்தானே காத்திருந்தேன் என்பது போல,சரியென்று சொல்லி விட்டாராம் சிம்பு.இப்படித்தான் சரவணா படம், சிம்புவின் கஸ்டடிக்கு வந்ததாம். தனது தந்தை டி.ஆரின் உதவியுடன் படத்தை இப்போது அவர்தான் தயாரிக்கிறார் என்பதை நாம் முன்பே சொல்லியிருக்கிறோம். ஆனால், ஏன் தயாரிப்பு அவர் வசம் வந்தது என்பதற்குத் தான்மேற்கண்ட விளக்கம்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

தயாரிபாளர்களை வதைப்பது எப்படி என்று சிம்பு புத்தகமே எழுதலாம் போலிருக்கிறது.

அந்த அளவுக்கு போட்டுத் தாக்கிவிடுகிறார். சிம்புவை வைத்து படப்பிடிப்பைத் தொடங்கி முடிப்பதற்குள், தயாரிப்பாளர்களின்தாவு தீர்ந்து விடுகிறதாம்.

தயாரிப்பாளர்களை நொந்து நூடுல்சாகச் செய்வதில் வழக்கமாக நடிகைகள்தான் எக்ஸ்பர்ட். ஆனால்சிம்பு, ஜெயம் ரவிஆகியோரைப் போன்ற நடிகர்கள் நடிகைகளை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விடுகிறார்களாம்.

சிம்பு, ரவியை வைத்து படம் எடுத்துள்ள இயக்குனர்களையும், வெளித் தயாரிப்பாளர்களையும் கேட்டால் வண்டி வண்டியாகரத்தக் கண்ணீர் வடிக்கிறார்கள்.

சிம்புவிடம் முதலில் கிருஷ்ணகாந்த் சிக்கினார். சிம்புவை வைத்து மன்மதன் படத்தை எடுத்து முடிப்பதற்குள் தலை சுற்றிதாறுமாறாகி விட்டார்.

பின்னர் மாட்டினார் கலைப்புலி தாணு. தொட்டி ஜெயாவை எடுத்து முடித்து அதை வெளியிடுவதற்குள் சிம்புவிடம்சின்னாபின்னமாகி விட்டார் தாணு.

ஒரு வழியாக பஞ்சாயத்துப் பேசி படத்தை ரிலீஸ் செய்தார் தாணு. ஆனால் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை. இப்போதுஅப்படத்தை தெலுங்கில் டப் செய்து விட்ட பணத்தைப் பிடிக்க முயற்சிகளில் இறங்கியுள்ளார்.


இந் நிலையில் தயாரிப்பாளர் தேனப்பன், வல்லவன் என்ற படத்தை சிம்புவை வைத்து ஆரம்பித்தார். படப்பிடிப்பு நடக்கிறதா,இல்லையா என்றே தெரியாத அளவுக்கு ஏகப்பட்ட அவஸ்தைகளில் சிக்கி ஆமை போல நகர்ந்து கொண்டிருக்கிறது வல்லவன்.

கதையை மாற்றி, மாற்றி தயாரிப்பு செலவை எகிறச் செய்து கொண்டிருக்கிறாராம் சிம்பு.

அத்தோடு படப்பிடிப்பும் திட்டமிட்டபடி நடக்காமல், சிம்புவுக்கு தோதாக டைம் கிடைக்கும்போதெல்லாம் நடந்து வருவதால்தேனப்பன், நொந்து போயிருக்கிறாராம். சமீபத்தில் ரொம்ப வெறுத்துப் போய் யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் சிங்கப்பூரில்போய் 10 நாட்கள் ரெஸ்ட் எடுத்துவிட்டு மனதை அமைதியாக்கிக் கொண்டு திரும்பியிருக்கிறார் தேனப்பன்.

இப்போது சிம்புவால் தயாரிப்பாளர் துரை தவியாய் தவிக்க ஆரம்பித்துள்ளார் என்கிறார்கள். இவர் தயாரிக்க சரவணா என்றபெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி வருகிறார்.

மன்மதன் படப்பிடிப்பின்போது சிம்பு செய்த சில்மிஷங்களால் வெகுண்டு போயிருந்த ஜோதிகா, சமாதானமாகி, சில பலகண்டிஷன்களுடன் சரவணாவில் சிம்புவுக்கு ஜோடியாக இதில் நடித்துக் கொண்டுள்ளார்.

இப்படத்தின் ஷூட்டிங்கிலும் சிம்பு தனது வாலை மெதுவாக நீட்டி வருகிறாராம். ஆரம்பத்தில் சமர்த்தாக வந்து போய்க்கொண்டிருந்த சிம்பு, இப்போது ஏகப்பட்ட வம்புகளை செய்து வருகிறாராம்.

அவரது அனத்தலால் மேக்னா நாயுடுவைக் கூட்டி வந்து ஒரு குத்துப் பாட்டை எடுத்தார் ரவிக்குமார். மேக்னா கேட்ட பெரும்தொகையை சிம்பு சொன்னதால் வேறு வழியின்றி கொடுத்தாராம் தயாரிப்பாளர்.


இப்படி சின்னச் சின்னச் செலவுகளாக இழுத்து இப்போது தயாரிப்புச் செலவு திட்டமிட்டதை விட எகிறி எங்கேயோ போய்விட்டதாம்.

தெலுங்கில் ஏற்கனவே வெற்றி பெற்ற படத்தைத்தான் சரவணா என்ற பெயரில் ரீமேக் செய்து கொண்டுள்ளார்கள். பொதுவாகரீமேக் படத்திற்கு அதிக செலவு ஆகாது என்பார்கள். ஆனால் அதை மீறி விட்டதாம் சரவணா.

இப்படியே போனால் துண்டுதான் மிஞ்சும் என்று யோசித்துப் பார்த்த தயாரிப்பாளர் துரை, சரவணா படத் தயாரிப்பு செலவுகளைநீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்று சிம்புவும் மெதுவாகப் பேசியுள்ளார். அதுக்குத்தானே காத்திருந்தேன் என்பது போல,சரியென்று சொல்லி விட்டாராம் சிம்பு.

இப்படித்தான் சரவணா படம், சிம்புவின் கஸ்டடிக்கு வந்ததாம். தனது தந்தை டி.ஆரின் உதவியுடன் படத்தை இப்போது அவர்தான் தயாரிக்கிறார் என்பதை நாம் முன்பே சொல்லியிருக்கிறோம். ஆனால், ஏன் தயாரிப்பு அவர் வசம் வந்தது என்பதற்குத் தான்மேற்கண்ட விளக்கம்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil