சிம்பு களமிறங்கிட்டாரு.. அரசன் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்.. சீக்கிரமா முடிச்சு விடு தெய்வமே!
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் TR நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'அரசன்' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பிரத்யேக புகைப்படத்தை பதிவிட்டு, சிலம்பரசன் TR சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகி வரும் 'அரசன்' திரைப்படத்தில் சிலம்பரசன்TR, விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா ,சமுத்திரக்கனி, விக்ராந்த், கிஷோர், சைத்ரா ஜே. ஆச்சார் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையில் கிரைம் வித் ஆக்சன் திரில்லராக தயாராகி வரும் இந்தத் திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரித்து வருகிறார்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது. இதில் சிலம்பரசன் TR கலந்து கொண்டிருக்கிறார். இது தொடர்பான புகைப்படத்தை சிலம்பரசன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
டைகராக நடிக்கும் சிம்பு: இதனிடையே மதுரையில் நடைபெற்ற 'அரசன் ' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் சிலம்பரசன் TR- 'மதுரை டைகர்' என்ற கதாபாத்திரத்தில் கபடி விளையாட்டு வீரர்களுக்கான சீருடை அணிந்து நடித்திருக்கிறார் என்பதும், இப்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னை டி. நகர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பொல்லாதவனுக்கு முன்பே: வெற்றிமாறனின் வடசென்னை சினிமாடிக் யுனிவர்ஸாக குறிப்பிடத்தக்க வகையில் ' அரசன்' உருவாகி வருகிறது என்பதும் இப்படத்தின் கதையை 'பொல்லாதவன்' படத்திற்கு முன்பே இயக்குநர் வெற்றிமாறன் எழுதி நிறைவு செய்திருப்பதால் தொடர்ந்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று இந்த ஆண்டின் இறுதியிலேயே இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் வகையில் படப்பிடிப்பு பணிகள் திட்டமிடப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
சிம்பு படம் சீக்கிரம் வரணும்: சிம்புவின் அரசன் திரைப்படம் சீக்கிரமாக படப்பிடிப்பு எல்லாம் முடிந்து இந்த ஆண்டே ரிலீஸ் ஆனால், சிறப்பாக இருக்கும் என அவரது ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். வெற்றிமாறன் படத்தை முடித்து விட்டு அடுத்ததாக அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தான் சிம்பு நடிக்கப் போகிறார் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











