ரஜினி இடத்தை பிடிப்பாரா சிம்பு?.. செம விஷயம் நடக்கப்போகுது.. எஸ்டிஆர் ஃபேன்ஸ் குஷி

சென்னை: சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான பத்து தல திரைப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. இருப்பினும் அவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்தப் படத்துக்கு முன்னதாக அவர் நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு, மாநாடு ஆகிய இரண்டு படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருந்தன. தற்போது அவர் கமலுடன் தக் லைஃப் படத்தில் நடிக்கிறார். அடுத்ததாக தேசிங்கு பெரியசாமி இயக்கத்திலும், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.

டி. ராஜேந்தரின் மகனான சிம்பு தனது சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடித்துவருபவர். நடிப்பு மட்டுமின்றி இயக்கம், பாடல்கள் பாடுவது, எழுதுவது, இசையமைப்பது என பல ஜானர்களில் கலக்குபவர். இன்றுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் அவர் முதலில் நயன்தாரவை காதலித்தார். அந்தக் காதல் பாதியில் முடிந்தது. தொடர்ந்து ஹன்சிகாவை காதலித்தார். அஜித் - ஷாலினி போல் நாங்கள் இருப்போம் என்று அவர்கள் கூறினார்கள். ஆனால் அந்தக் காதலும் பாதியில் முடிந்தது. ஹன்சிகாவுடனான காதல் முறிவுக்கு பிறகு சிம்பு முழுக்க ஆன்மீக வழியில் சென்றார்.

தரமான கம்பேக்: மேலும் சினிமாவில் கவனம் செலுத்த முடியாமலும் இருந்தார். ஒருகட்டத்தில் அவர் இனி அவ்வளவுதான் என்று பலரும் ஆரூடம் சொன்னார்கள். ஆனால் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்பு பேசிய 'அந்த சீன்லாம் இங்க இல்ல' என்ற வசனத்துக்கேற்ப; ஈஸ்வரன் படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார் எஸ்டிஆர். அந்தப் படம் சரியாக போகவில்லை. அதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்தார். டைம் லூப் கான்செப்ட்டில் உருவாகியிருந்த மாநாடு மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி நூறு கோடி ரூபாய்வரை வசூல் செய்து கெத்து காண்பித்தது.

Simbu s Maanaadu Movie Will Release in Japan Soon

பழைய சிம்புவின் என்ட்ரி: அந்தப் படத்தின் மெகா ஹிட் அவரையும் அவரது ரசிகர்களையும் உற்சாகத்தின் உச்சத்துக்கு கொண்டு சென்றது. அந்த வெற்றிக்கு பிறகு சிம்பு பழைய எனர்ஜியோடு இருக்கிறார். அதே எனர்ஜியோடு கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு, கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல ஆகிய படங்களில் நடித்தார். அந்த இரண்டு படங்களில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் மட்டும் சூப்பர் ஹிட்டடித்தது. பத்து தல திரைப்படமோ சுமாரான வரவேற்பையே பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த படங்கள்: அவர் இப்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் ஹீரோவாக நடிக்கும் தக் லைஃப் படத்தில் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார். இதுதவிர்த்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்கும் சிம்பு அந்தப் படத்தை தயாரிக்கவும் செய்கிறார். அந்தப் படத்தைத் தொடர்ந்து ஓ மை கடவுளே, டிராகன் படங்களின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும், பார்க்கிங் திரைப்பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்திலும் நடிக்கிறார் அவர். அவரது லைன் அப்பில் இருக்கும் படங்கள் எஸ்டிஆர் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

ரஜினியின் தீவிர ரசிகர்: இதற்கிடையே சிம்பு ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்தது. தான் வளர்ந்து வந்த சமயத்தில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று முதலில் பட்டம் போட்டுக்கொண்டார். மேலும் பாடல் வரிகளிலும் அந்த பட்டம் வரும்படி பார்த்துக்கொண்டார். திடீரென என்ன நினைத்தாரோ தெரியவில்லை அந்தப் பட்டத்தை போடுவதை அவர் நிறுத்திக்கொண்டார்.

ரஜினி இடத்தை பிடிப்பாரா?: இந்நிலையில் ரஜினிகாந்த்தின் இடத்தை சிம்பு பிடிப்பாரா என்ற ஆவல் அவரது ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது. அதாவது வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் அவர் நடித்த மாநாடு திரைப்படம் ஜப்பானில் ரிலீஸாகவிருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சுரேஷ் வெளியிட்டிருக்கிறார். ஏற்கனவே ஜப்பானில் ரஜினிகாந்த்துக்கு ரசிகர்கள் அதிகம். எனவே மாநாடு படத்தின் மூலம் ஜப்பானில் ரஜினியின் இடத்தை சிம்பு பிடிப்பாரா என்று எஸ்டிஆர் ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கியிருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X