சிம்பு திடீரென விளம்பரங்களில் நடிக்கவும் பல படங்களை கமிட் பண்ணவும் இதுதான் காரணமா?.. நல்ல ஐடியா!
சென்னை: நடிகர் சிம்பு திடீரென ஏகப்பட்ட விளம்பர படங்களில் நடித்து வருகிறார். மேலும், வரிசைக்கட்டி தனது புதிய படங்களின் அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார். வருடத்துக்கு ஒரு படம் கொடுக்கவே முடியாமல் திணறுகிறார் சிம்பு என கலாய்க்கப்பட்டு வந்த நிலையில், அவருக்குள் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றத்துக்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது என்கின்றனர். இயக்குநரும் நடிகருமான டி. ராஜேந்திரன் மகனான சிம்பு சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். நடிப்பை தாண்டி பாடல்கள் பாடுவது, படம் இயக்குவது, நடனம் ஆடுவது என பன்முகத்தன்மை கொண்டவர் சிம்பு என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை எல்லாம் பார்த்த ரசிகர்கள் சிம்பு மட்டும் சினிமாவை சீரியஸாக எடுத்துக் கொண்டிருந்தால், இந்நேரம் அவரது ரேஞ்சே வேறு என்று கூறி வருகின்றனர். ஆனால், சமீப காலமாக சினிமாவை சீரியஸ் ஆக எடுத்துக்கொண்டு சிம்பு உழைப்பு வருகிறார் என்பதுதான் நிதர்சனமான உண்மை என்று சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

இந்த ஆண்டு சிம்பு நடிப்பில் தக் லைஃப் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், அடுத்ததாக அவர் பார்க்கிங் படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். சிம்புவின் 50வது படம் குறித்தும் 51வது படம் குறித்த அறிவிப்புகளும் வெளியாகி உள்ளன.
விளம்பரங்களில் பிஸி: பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் சிம்பு நடிக்கத் தொடங்கிவிட்டார் என சமீபத்தில் சில புகைப்படங்கள் வெளியாகின. ஆனால், அது சிம்பு நடிப்பில் உருவான விளம்பர படம் தான் என்றும் இன்னும் சிம்புவின் 49 வது படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கவில்லை என்று சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன. காசா கிராண்ட் விளம்பரத்தில் சிம்பு நடிக்க பல கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கோடி கணக்கில் சம்பளம்: ஐபிபோ, காசா கிராண்ட் என தொடர்ந்து பல விளம்பரப் படங்களில் சிம்பு நடிக்க முக்கிய காரணமே அதற்கு சம்பளமாக பெரிய தொகையை கொடுக்கின்றனர் என்பதால்தான். திடீரென சிம்பு தனது அடுத்த அடுத்த பட அறிவிப்புகளையும், பெரிய விளம்பரங்களிலும் நடிக்க காரணம் சொந்தத் தயாரிப்பில் 50வது படத்தை சிம்பு தயாரிக்கப் போவது தான் என்று சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் கிளம்பியுள்ளன.
100 கோடி பட்ஜெட்: கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள 50வது படத்தை 100 கோடி பட்ஜெட்டில் சிம்பு தயாரிக்க உள்ளார். அதற்காகத்தான், தனது 51 வது படம் வரை அறிவிப்பை வெளியிட்டு அத்தனை தயாரிப்பாளர்களிடமும் அட்வான்ஸ் தொகையை பெற்று தனது ஐம்பதாவது படத்திற்கான வேலைகளை சிம்பு செய்யப் போகிறார் என்று கூறுகின்றனர்.
நல்ல ஐடியா: மேலும், சினிமாவில் இத்தனை ஆண்டுகள் தான் சம்பாதித்த பணத்தையும் தனது 50 வது படத்தில் முதலீடாக போட சிம்பு முடிவு செய்துள்ளார் என்றும் மேலும், சில விநியோகஸ்தர்களிடம் பணம் வாங்கியும் சீக்கிரமே அந்தக் கனவு ப்ராஜெக்டை நிறைவேற்றுவார் என்று கூறுகின்றனர். அதற்காகத்தான் தற்போது சிம்பு ஓய்வே எடுக்காமல் ஓடோடி உழைத்து வருகிறார் என்றும் "ஆண்டவன் படைத்தான் என்கிட்ட கொடுத்தான் அனுபவி ராஜான்னு அனுப்பி வச்சான்" என்கிற பாடலுக்கு பதில் "ஓடி ஓடி உழைக்கணும்" என்கிற பாடல் தான் சிம்புவுக்கு சரியாக பொருந்தும் என்கின்றனர்.
சிம்பு குரலில் பிரேக்கப் பாடல்: ஓ மை கடவுளே படத்தை இயக்கி ஹிட் கொடுத்த அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கயாடு லோஹர் நடித்துள்ள டிராகன் படத்தின் வெற்றிக்கு சிம்புவின் சூப் சாங் மிகப்பெரிய உதவியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.. அந்த படத்தின் "வழித்துணையே" பாடல் வெற்றிப் பெற்ற நிலையில், அடுத்த பாடலை இன்னமும் ரசிகர்களுக்கு பிடித்தவாறு வெளியிட வேண்டும் என்கிற முனைப்புக் காட்டிய அஷ்வத் மாரிமுத்து அடுத்து தான் சிம்பு படம் இயக்கவுள்ள நிலையில், அவரையே வைத்து இந்த பாடலை உருவாக்கியுள்ளார். சிம்பு குரலில் வெளியாகி உள்ள "ஏன்டி விட்டுப்போன" பாடலை சிம்பு பாடும் விதத்தை பார்த்தே ரசிகர்களுக்குப் பிடித்துவிட்டது.
லூசுப்பெண்ணே: "காதல் வளர்த்தேன்", "லூசுப்பெண்ணே" என சிம்புவின் சூப் சாங் எல்லாமே ரசிகர்களின் ஆல் டைம் ஃபேரைட் பாடல்கள் தான். அந்த வரிசையில் இந்த பாடலும் ரசிகர்களை கேட்டமாத்திரத்திலேயே பித்துப் பிடிக்க வைக்கும் அளவுக்கு வரிகளும் பாடத் தூண்டும் வகையில் இடம்பெற்றுள்ளது. பிரதீப் ரங்கநாதன் உடன் கல்லூரியில் லவ் பண்ணும் அனுபமா பரமேஸ்வரன் அவரை பிரேக்கப் செய்துவிட இந்த பாடல் வருகிறது. அதன் பின்னர், கயாடு லோஹரை பிரதீப் ரங்கநாதன் காதலித்து சேர்வது தான் டிராகன் படத்தின் கதையாக இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கிளைமேக்ஸில் செம ட்விஸ்ட் காத்திருந்தது. லவ் டுடே படத்தைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் படமும் அவருக்கு 100 கோடி கிளப் படமாக மாறியது. இதுவரை 150 கோடிக்கும் அதிக வசூலை டிராகன் ஈட்டி தொடர்ந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஹரிஷ் கல்யாணின் டீசல் படத்துக்கும் சிம்பு செம சூப்பரான பாடலை பாடியுள்ளார். இளம் நடிகர்கள் எல்லாம் தனக்கு போட்டியாக வந்துவிடுவார்கள் என நினைக்கும் சீனியர் நடிகர்களுக்கு எல்லாம் இன்னமும் சினிமாவில் இருக்க சிம்பு இளம் நடிகர்களுக்கு காட் ஃபாதராகவே மாறி ஹெல்ப் செய்து வருவதை பார்த்த அவரது ரசிகர்கள் உங்க படம் வரலைன்னாலும் நீங்க மாஸ் தான் தலைவான்னு சொல்கின்றனர்.
பெரிய இலக்கு: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து நடித்துள்ள தக் லைஃப், 49 வது படம் உள்ளிட்ட இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்று விட்டால் சிம்புவின் 50 வது படமும் பிரம்மாண்ட வசூல் வேட்டையை நடத்தும் என்கிற முடிவுடன் சிம்பு உழைத்து வருவதாக கூறுகின்றனர். 51வது படம் டிராகன் படத்தை இயக்கிய அஷ்வத் மாரிமுத்து என்பதால் அந்த படமும் கண்டிப்பாக பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என சிம்பு ரசிகர்கள் கூறி வருகின்றனர். குட் பேட் அக்லி படத்தில் கேமியோவாக நடிக்கவும் அவர் ஓகே சொல்லக் காரணமும் பெரிய சம்பளம் தான் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











