பெண்கள் பற்றி சிம்பு இப்படி சொல்லிட்டாரே?.. திருமணத்துக்கு இப்படித்தான் தேர்ந்தெடுப்பாராம்
சென்னை: சிம்பு இப்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக அவர் ராம்குமார் பாலகிருஷ்ணன், தேசிங்கு பெரியசாமி, அஸ்வத் மாரிமுத்து ஆகியோரின் இயக்கங்களில் நடிக்கவிருக்கிறார். தொடர்ந்து சிம்பு இளம் இயக்குநர்களுடன் கூட்டணி வைத்திருக்கிறார். இதன் காரணமாக அவருடைய இரண்டாவது இன்னிங்ஸ் கண்டிப்பாக பட்டையை கிளப்பும் என்ற நம்பிக்கையில் அவரது ரசிகர்கள் இருக்கிறார்கள்.
நயன்தாரா, ஹன்சிகா மோத்வானி ஆகிய நடிகைகளை காதலித்த சிம்பு; சில காரணங்களால் அவர்களுடனான காதலை பிரேக் அப் செய்துகொண்டார். அவர்கள் இரண்டு பேரும் இப்போது திருமணமாகி செட்டிலாகிவிட்டார்கள். ஆனால் சிம்புவோ இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. இதற்கிடையே அவரது கவனம் எல்லாம் ஆன்மீக பாதையில் திரும்பின. மேலும் சில காரணங்களால் அவர் சினிமாவில் சரியான கவனத்தை செலுத்த முடியாமல் திண்டாடிக்கொண்டிருந்தார்.
கம்பேக் கொடுத்த சிம்பு: ஒருகட்டத்தில் சிம்புவால் இனி தமிழ் சினிமாவில் நிலைக்கவே முடியாது. கண்டிப்பாக அவரது சேப்டர் அவ்வளவுதான் என்று பேச்சுக்கள் எழுந்தன. ஆனால் சிம்புவோ தனது உடல் எடையை குறைத்து ஈஸ்வரன் படத்தில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். அந்தப் படம் சரியாக போகவில்லை. பிறகு நடித்த மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்கள் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் கொண்டாடப்பட்டு சிம்புவின் நடிப்புக்கும் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.

தக் லைஃப் சிம்பு: இரண்டாவது இன்னிங்ஸில் வேறு மாதிரியான சிம்புவை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் அவருடைய ரசிகர்கள் ஒருபக்கம் ராம்குமார் பாலகிருஷ்ணன், அஸ்வத் மாரிமுத்து, தேசிங்கு பெரியசாமி போன்ற இளம் இயக்குநர்களுடன் கூட்டணி அமைத்திருக்கிறார். மறுபக்கம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் தக் லைஃப் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். தக் லைஃப் திரைப்படம் ஜூன் மாதம் ரிலீஸாகவிருக்கிறது. நிச்சயமாக அவருக்கு இந்தப் படம் வெற்றியாக அமையும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் அவரது தீவிரமான ரசிகர்கள்.
வின்டேஜ் சிம்பு: மேலும் இளம் இயக்குநர்களுடன் அவர் பணியாற்றும் படங்களும் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கின்றன. ராம்குமார் இயக்கத்தில் நடிக்கும் படத்தில் கல்லூரி மாணவனாக நடிக்கிறார் எஸ்டிஆர். அதேபோல் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கும் படத்திலும் வின்டேஜ் சிம்புவை எதிர்பார்க்கலாம். தேசிங்கு பெரியசாமி படத்தை பொறுத்தவரை அது பிரமாண்ட படமாக அமைகிறது. அதனை அதிக பட்ஜெட்டில் சிம்புவே தயாரிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிம்புவின் பேச்சு: இந்நிலையில் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிம்பு பேசியது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் பேசுகையில், "ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் கல்லூரி மாணவன் ரோலை ஏற்றிருக்கிறேன். அந்த ரோலில் நடிக்க வேண்டும் என்று இயக்குநர் என்னிடம் சொன்னதும் என்னால் முடியுமா என்ற சந்தேகம் எனக்கு வந்துவிட்டது என சொல்லிவிட்டு எனவே நான் கல்லூரி மாணவன் போல் இருக்கிறேனா என்று மாணவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்களோ ஆம் என்று சத்தமாக கூறினார்கள்.
பெண்கள் பற்றி பேச்சு: தொடர்ந்து பேசிய சிம்பு, 'ஃபர்ஸ்ட் யாரு முன்னே போகிறார்கள் என்பது முக்கியம் இல்லை. கடைசியில் யார் முதலில் வருகிறார்கள் என்பதுதான் முக்கியம்' என்ற வசனத்தைதான் நான் எப்போதும் ஞாபகம் வைத்திருப்பேன். அதேபோல் ஜீன்ஸ் போட்டுக்கொண்டு சுற்றும் பெண்கள் எல்லாம் கெட்டவர்களும் இல்லை; சுடிதார் போட்டுக்கொண்டு இருக்கும் பெண்கள் எல்லாம் நல்லவர்களும் இல்லை. நான் திருமணத்துக்கு ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் அந்தப் பெண் நல்ல பெண்ணாக இருந்தால் மட்டும் போதும்" என்றார்.


Click it and Unblock the Notifications











