சிங்கம் 3... சிபிஐ அதிகாரி அவதாரம் எடுக்கும் சூர்யா!
சென்னை: இயக்குநர் ஹரியின் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் சிங்கம். சிங்கம் படத்தின் வெற்றியால் அதன் இரண்டாம் பாகமான சிங்கம் 2 வும் எடுக்கப்பட்டு வெற்றி பெற்றது.
தற்பொழுது அதன் மூன்றாம் பாகமான சிங்கம் 3 படத்தை எடுக்கவிருக்கும் இயக்குநர் ஹரி படத்தின் முழுக் கதையையும் தயார் செய்து விட்டு சூர்யாவிற்காக காத்திருக்கிறார். 24 மற்றும் ஹைக்கூ படங்களில் பிஸியாக நடித்து வரும் சூர்யா இந்த 2 படங்களையும் முடித்து விட்டு சிங்கம் 3 யில் நடிக்க இருக்கிறார்.

வேல், ஆறு, சிங்கம், சிங்கம் 2 படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ஹரியும் நடிகர் சூர்யாவும் இணைகின்ற 5 வது படம் இது.
சிங்கம் 2 படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த சூர்யா இந்தப் படத்தில் முதல் முறையாக சிபிஐ அதிகாரியாக நடிக்கிறார். இந்தமுறை சூர்யாவிற்கு ஜோடியாக இந்தப் படத்தில் சுருதி ஹாசன் நடிக்கிறார். விரைவில் படத்தைப் பற்றிய முழுமையான தகவல்கள் வெளியாகும் என்று கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











