பொண்டாட்டி கூட செய்ய மாட்டாங்க.. யாரை பத்தியும் யோசிக்காம கெனிஷா செய்த செயல்!
சென்னை: தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருக்கும் ரவி மோகன், சமீபத்தில் தனது தோழி கெனிஷா பிரான்சிஸ் உடன் கேரளாவில் நடைபெற்ற கோவில் திருவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பாடகிகி கெனிஷா செய்த செயல் அங்கு இருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
'ஜெயம்' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ரவி மோகன், தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்ததன் மூலம் டாப் நடிகர் என பெயர் எடுத்தார். கடந்த ஆண்டு, இவருக்கும் அவரது மனைவி ஆர்த்திக்கும் இடையே மனக்கசப்பு கருத்துவேறுபாடு, மனக்கசப்பு ஏற்பட்டதை அடுத்து, மனைவியிடம் இருந்து பிரிவதாக விவாகரத்து முடிவை அறிவித்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

கெனிஷா பிரான்சிஸ்: இதைத்தொடர்ந்து பாடகியும், ஆன்மீக சிகிச்சை நிபுணருமான கெனிஷா பிரான்சிஸுடன் ரவி மோகன் நெருக்கமாக பழகி வருவது குறித்து பல செய்திகள் வெளியாகின. மேலும், தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமண நிகழ்ச்சிக்கு இருவரும் கைகளை கோர்த்துக்கொண்டு, ஒரே நிற ஆடை அணிந்து கொண்டு கலந்து கொண்டது சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டது. இவர்கள் குறித்து வந்த கிசுகிசுக்களை எல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல், இருவரும் இணைந்து ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற பெயரில் புது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்கள். அந்த நிறுவனத்தின் மூலம் 'ப்ரோ கோட்' மற்றும் 'ஆன் ஆன்ட்னரி மேன்' ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. "ஆன் ஆன்ட்னரி மேன்" படத்தை ரவி மோகன் இயக்கியும் நடித்தும் வருகிறார். இதைத் தவிர கராத்தே பாபு, ஜாம்பி மிருதன் 2 உள்ளிட்ட பல படங்களும் அவரின் கைவசம் உள்ளன.
பொண்டாட்டி கூட செய்ய மாட்டாங்க: இந்நிலையில், கேரளாவில் நடைபெற்ற கோவில் விழா ஒன்றில் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா இருவரும் கலந்து கொண்டனர். திருவிழாவில் கலந்து கொண்ட ரவி மோகனுக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாடகி கெனிஷா பாடலை பாடுவதற்காக செல்லும் முன் ரவி மோகனின் காலை தொட்டு வணங்கிவிட்டு பாட்டு பாடத் தொடங்கினார். கெனிஷாவின் இந்த செயல் அனைவரையும் கவனத்தையும் ஈர்த்தது. அதோடு, ரவி மோகனையும் மேடைக்கு அழைத்து உற்சாகப்படுத்தியதுடன், அவரை பாடவும் வைத்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மனைவிக்கூட செய்யாத செய்யாத மரியாதையை கெனிஷா செய்கிறார்" என்று இணையவாசிகள் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications