கோலிவுட்டில் விஜய் குரலுக்கு எவ்வளவு கிராக்கி தெரியுமா?
சென்னை: இளைய தளபதி விஜய்க்கு படங்களில் பாட ஏராளமான வாய்ப்புகள் வந்து குவிகிறதாம்.
விஜய் நன்றாக பாடுவார் என்று நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. அவர் தன் படங்களில் தனக்காக பாடியதுடன் பிறருக்காவும் பாடியுள்ளார்.
அதிலும் குறிப்பாக சூர்யாவுக்காக அவர் பாடிய நான் தம்மடிக்கிற ஸ்டைல பாத்து தனலட்சுமி விரும்புச்சு பாடல் மிகவும் பிரபலமானது ஆகும்.

கூகுள் கூகுள்
துப்பாக்கி படத்தில் விஜய் பாடிய கூகுள் கூகுள் பாடல் ஹிட்டானது.

தலைவாவிலும் ஒரு பாட்டு
தலைவா படத்திலும் விஜய் ஒரு பாடலை பாடியுள்ளார். அந்த பாடல் கண்டிப்பாக ஹிட் தான் என்று அதை கேட்ட அஜீத் தெரிவித்துள்ளார்.

ஜில்லாவிலும் பாடுகிறார்
விஜய் தான் நடிக்கும் ஜில்லா படத்திலும் ஒரு பாடலை பாடவிருக்கிறாராம். அவரை ஒரு பாடல் பாடுமாறு கேட்கப் போவதாக இசையமைப்பாளர் இமான் தெரிவித்துள்ளார்.

முருகதாஸ் படத்திலும்
விஜய் முருகதாஸ் மீண்டும் இணையும் படத்திலும் அவரை பாட வைக்க திட்டமிடுகிறார்கள். இந்த படத்தில் விஜய்யை பாட வைக்குமாறு அவரது ரசிகர்கள் இசையமைப்பாளர் அனிருத்துக்கு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறார்களாம்.


Click it and Unblock the Notifications











