சிறை ஹீரோ அக்ஷய் குமாரின் அடுத்த படம் என்ன தெரியுமா?.. ஒரே ‘ராவடி’யா இருக்கே பாஸ்!
சென்னை: செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பாளர் S. S. லலித் குமார் தயாரிப்பில், பேஸில் ஜோசப் மற்றும் L. K. அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகி வரும் "ராவடி" திரைப்படத்தின் டைட்டில், முதல் பார்வை மற்றும் கேரக்டர் கிளிம்ப்ஸ் வெளியானது. 'ராக் ஸ்டார்' இசையமைப்பாளர் அனிருத் தன் சமூக வலைத்தளப் பக்கத்தில் இதனை வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கும் "ராவடி", தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் ஒரே பெயரில் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், L. K. அக்ஷய் குமாருடன், மலையாளத்தின் முன்னணி நடிகர் பேஸில் ஜோசப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

இப்படத்தில் ஜான் விஜய், சத்யன், ஜாபர் சாதிக், நோபல் K. ஜேம்ஸ், அருணாச்சலேஸ்வரன் PA, ஷாரீக் ஹாஸன், நடிகை ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பல நடிகர்கள் இணைந்துள்ளனர். ஒரு காமெடி என்டர்டெய்னராக தயாராகும் இத்திரைப்படத்திற்கு லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்ய, ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார்.
படத்தொகுப்பைப் பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தைப் P. S. ஹரிஹரன் கவனிக்கிறார். பிரியா ஆடை வடிவமைப்பாளராகவும், K. அருண் மற்றும் மணிகண்டன் ஆகியோர் நிர்வாக தயாரிப்பாளர்களாகவும் பொறுப்பேற்றுள்ளனர். L. K. விஷ்ணு குமார் இணை தயாரிப்பாளராக இத்திரைப்படத்தில் இணைந்துள்ளார்.
வெளியான டைட்டில், முதல் பார்வை மற்றும் கேரக்டர் கிளிம்ப்ஸ்கள் மூலம் நடிகர்களான பஸில் ஜோசப், L. K. அக்ஷய் குமார், ஜாபர், நோபல், அருணாசலம் ஆகியோரின் தனித்துவமான தோற்றங்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தன. "ராவடி" திரைப்படம் எதிர்வரும் கோடை விடுமுறையில் திரைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
சிறை படத்தின் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் வெற்றியைத் தொடர்ந்து அக்ஷய் குமாரின் அடுத்த படத்துக்கு எதிர்பார்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இந்த படத்தில் கல்லூரி மாணவர்களிடையே நடக்கும் கலாட்டா கதையை இயக்குநர் எடுத்துள்ளது சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











