கார்த்திக்கு ஒர்க்அவுட்டான 'சிவா ராசி' சூர்யாவுக்கும் ஆகுமா?
சென்னை: சூர்யா சிவா இயக்கத்தில் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது.
இயக்குநர் சிவா அஜித்தை மொத்த குத்தகைக்கு எடுத்திருந்தார். அவரை வைத்து தொடர்ந்து 4 படங்கள் எடுத்து முடித்தார். அதன் பிறகே அஜித் வேறு இயக்குநரின் படத்தில் நடிக்கிறார்.

அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சிவா சூர்யாவை வைத்து படம் எடுக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த படத்தை ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்குமாம். சூர்யா கே.வி. ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படத்தை அவரின் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கிறார்கள்.
காப்பான் படத்தை அடுத்து சூர்யா சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். ஏர் டெக்கன் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறுதான் அந்த படம் என்று கூறப்படுகிறது.
கார்த்திக்கு ஒரு சிறுத்தையை கொடுத்த சிவா, சிங்கம் சூர்யாவுக்கு நிச்சயம் ஒரு நல்ல படத்தை கொடுப்பார் என்று நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications











