மிர்ச்சி சிவாவால் ஆர்யாவுக்கு வந்த நிலைமையை பார்த்தீர்களா?
சென்னை: நடிகைகளை கலாய்ப்பதில் ஆர்யாவை அடித்துக்கொள்ள முடியாது என்று கூறப்பட்டது. இந்நிலையில் கலாய்ப்பதில் சிவா ஆர்யாவை தூக்கி சாப்பிடும் அளவுக்கு உள்ளாராம்.
ஷூட்டிங்ஸ்பாட்டில் நடிகைகளை கலாய்ப்பதில் ஆர்யாவை அடித்துக் கொள்ளவே முடியாது என்ற நிலை இருந்தது. தற்போது அவருக்கு போட்டியாக கலாய்ப்பதில் வல்லவர் ஒருவர் வந்துள்ளார்.
அந்த கலாய்ப்பு மன்னன் மிர்ச்சி சிவா தான்.

ஆர்யாவின் டெக்னிக்
ஷூட்டிங் ஸ்பாட்டில் புதுமுக நடிகைகள் யாராவது தன்னை பார்க்கிறார்களா என்று கவனிப்பார் ஆர்யா. அதன் பிறகு அவர்களின் கவனத்தை ஈர்த்து மெல்ல பேச்சு கொடுத்து கலாய்ப்பை துவங்குவார்.

சிவா என்ன செய்கிறார்?
எந்த நடிகையாக இருந்தாலும் சரி, அவருடன் அறிமுகமில்லாவிட்டாலும் வலிய சென்று பேசி அவரது விவரங்களை வாங்கிக் கொள்கிறார் சிவா. மறுநாள் அந்த நடிகையின் செல்போனுக்கு கால் பண்ணி கலாய்க்கத் துவங்கிவிடுகிறாராம்.

சிவாவை மொய்க்கும் நடிகைகள்
சிவா கலாய்ப்பது சுவாரஸ்யமாக உள்ளதால் அவரை நடிகைகள் மொய்க்கிறார்களாம்.

இப்படி ஆகிடுச்சே ஆர்யா
போகிற போக்கை பார்த்தால் ஆர்யாவின் ரசிகை மன்றம் முழுவதையும் சிவா தன் வசப்படுத்திவிடுவார் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











