பெரியாராக நடிப்பது மட்டுமல்ல.. இன்னொரு நிறைவேறாத ஆசையுடன் மறைந்த பராசக்தி ஹீரோ!

சென்னை: தமிழாக வாழ்ந்தவர் சிவாஜி கணேசன் என மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியால் புகழப்பட்ட சிவாஜி கணேசன். 50 ஆண்டுகள் தமிழ் சினிமாவை தனது நடிப்பால் பெருமை படுத்தியவர். கலைஞரின் எழுத்தில் உருவான பராசக்தி படத்தின் மூலம் அறிமுகமான சிவாஜி, தமிழ் சினிமாவின் பெருமை மிகு கிரீடம். இன்று அதாவது ஜூலை 21 அவரது 24 வது நினைவு நாள். அவரது நினைவு நாளில் அவரது சில நிறைவேறாத ஆசைகள் குறித்து காணலாம்.

பொன்னியின் செல்வன் படம் வெளியானபோது, அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில், பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். அப்போது, பலரும் தெரிவித்தது, சிவாஜி கணேசனுக்கு பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது எனக் கூறினார்கள். படமாக எடுக்கவும், மேடை நாடகமாக மாற்றவும் அவரால் முடிந்த அளவுக்கு முயற்சி செய்துள்ளார். ஆனால் அது கடைசிவரை அவருக்கு கை கூடவில்லை. ஆனால் பொன்னியின் செல்வன் நாவலின் ஒரு பகுதியான ராஜராஜசோழன் கதாபாத்திரத்தில், ராஜராஜ சோழன் படத்தில் நடித்திருந்தார். ஆனாலும் பொன்னியின் செல்வனாக நடிக்க முடியாமல் போனது உண்மையாலுமே அவருக்கு நிறைவேறாத ஆசைதான்.

Sivaji Ganesan 24th Death Anniversary He Died Some Unsuccessful Dreams
Photo Credit:

நிறைவேறாத ஆசைகள்: அதேபோல் சிவாஜி கணேசனுக்கு தந்தை பெரியாராக நடிக்க வேண்டும் என்ற எண்ணம், அவரது கடைசி தருணம் வரை இருந்துள்ளது. அது கடைசிவரை நிறைவேறவில்லை. பெரியாராக நடிக்க ஆசைப்பட்டார் ஆனால் அது கடைசி வரை நிறைவேறவில்லை என்ற தகவல் பரவலாக அனைவருக்கும் தெரிந்ததே. அதேபோல், பொன்னியின் செல்வனாக நடிக்க ஆசைப்பட்டார் என்ற ஆசையுமே கூட, பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா வரை பலருக்கும் தெரியாமல் இருந்தது.

கடல் கடந்த ஆசை: அதேப்போல் சிவாஜி கணேசனுக்கு இருந்த மற்றொரு ஆசை குறித்து வெகுசிலரே அறிந்து வைத்திருந்தார்கள். அது, அவருக்கு வில்லியம் ஷேக்ஸ்பியரின் "ஹேம்லெட்" மற்றும் "மக்பத்" நாடகங்களில் உள்ள பல சவாலான கதாபாத்திரங்களை மையக் கதாபாத்திரங்களாக கொண்டு படங்களாக நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதற்காக தனக்கு நேரம் கிடைக்கும்போது எல்லாம் சில முயற்சிகளை அவர் மேற்கொண்டுள்ளார். அவரது காலத்து சில இயக்குநர்கள், கதாசிரியர்கள் உள்ளிட்டவர்களுடன் இது தொடர்பாக பேசியும் உள்ளார். ஆனால் அவை எல்லாம் முடிவில் அவருக்கு திருப்தி அளிக்கும் வகையில் அமையாததால், அந்த ஆசையும் கடைசி வரை நிறைவேறாத ஆசையாகவே இருந்துள்ளது.

Sivaji Ganesan 24th Death Anniversary He Died Some Unsuccessful Dreams
Photo Credit:

மக்களுக்கு: நடிப்பைக் கடந்து, மக்களுக்கு நேரடியாக உதவ வேண்டும் என்ற ஆசையும் அவருக்கு இருந்துள்ளது. அவர் ஏழை மக்களுக்காக பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் கட்டுவது குறித்து தீவிரமாக யோசித்து வந்துள்ளார். ஆனால் அவரது சிந்தனையில் இருந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த போதுமான நிதி மற்றும் நேரப் பற்றாக்குறையால் இந்தத் திட்டங்கள் முழுமையாக நிறைவேறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் மறைந்து கிட்டத்த கால்நூற்றாண்டு ஆகிவிட்டது. சினிமாவிலே அரை நூற்றாண்டு வேராக இருந்தவர். 75 ஆண்டுகளுக்கு பின்னரும் பராசக்தி என்ற படத்தின் டைட்டிலுக்கே திரையுலகிலும் அரசியல் தளத்திலும் அதிர்வுகளை ஏற்படுத்திகிறது என்றால் அதில் சரிபாதி கலைஞரின் வசனங்கள் சரி பாதி நடிகர் திலகத்தின் நடிப்பு தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X