லிப்லாக் சீன்… ஐயய்யோ நான் நடிக்கமாட்டேன்பா: சொல்வது சிவகார்த்திக்கேயன்

By Mayura Akilan

சிவகார்த்திக்கேயன் முத்தக்காட்சியில் நடிக்கவே மாட்டேன் என்று நடிகைகள்தான் சொல்வார்கள். ஆனால் முத்தக்காட்சியில் நடிக்கவே மாட்டேன் என்று கூறியுள்ளார் நடிகர் சிவகார்த்திக்கேயன்.

டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து சினிமாவில் ஹீரோவானவர் சிவகார்த்திக்கேயன். மெரீனா தொடங்கி மான் கராத்தே வரை அவர் நடித்த படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் வரவேற்பினை பெற்றுள்ளது.

குறிப்பாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வெற்றியினால் சிவகார்த்திக்கேயனின் சம்பளம் பலமடங்கு உயர்ந்துள்ளது. சினிமா நடிகர்களின் தீராத ஆசையான போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் நிலையில்தான் லிப் லாக் சீனில் நடிக்கமாட்டேன் என்று பேட்டி கொடுத்துள்ளார்.

குழந்தைகளின் நாயகன்

குழந்தைகளின் நாயகன்

டிவி தொகுப்பாளராக இருக்கும்போதே குழந்தைகளுக்கு சிவகார்த்திக்கேயனை பிடிக்கும் அதிலும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்குப் பின்னர் குழந்தைகள் ஃபேன்ஸ் அதிகமாகிவிட்டனர். அதற்கு சரியான காரணம் தெரியவில்லை என்கிறார் சிவகார்த்திக்கேயன்.

தனுஷ் உடன் பிரச்சினையா?

தனுஷ் உடன் பிரச்சினையா?

தனுஷ் உடன் தினமும் போனில் பேசுகிறேன். எங்களின் நட்பு அப்படியேதான் இருக்கிறது. என் மீது அவருக்கு பொறாமை எல்லாம் என்றும் கூறுகிறார் சிவகார்த்திக்கேயன்.

நானும் போலீஸ்தான்

நானும் போலீஸ்தான்

அடுத்த படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். அதற்காக 6 கிலோ எடை கூடியிருக்கிறார் சிவகார்த்திக்கேயன். அவருடைய அப்பா ஒரிஜினல் போலீஸ் என்பதால் சினிமாவில் போலீஸ் கேரக்டரில் நடிக்க ஆர்வமுடன் இருக்கிறார் சிவகார்த்திக்கேயன்.

ரசிகைகளுக்கு நான் அண்ணன்

ரசிகைகளுக்கு நான் அண்ணன்

பெண் ரசிகைகள் அனைவரும் சிவகார்த்திக்கேயனை அண்ணன் என்றுதான் கூப்பிடுகிறார்களாம். நான் கொடுத்துவைத்தவன் என்கிறார். மான் கராத்தே படத்தில் காலில் விழும் சீனுக்கு ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனராம். கெத்தா நடிக்கணும் என்று அட்வைஸ் செய்திருக்கிறார்களாம்.

லிப்லாக் சீனில் நடிக்கமாட்டேன்

லிப்லாக் சீனில் நடிக்கமாட்டேன்

என் படங்களை, பெண்களும், குழந்தைகளும் வந்து குடும்பத்துடன் பார்க்கக் கூடியதாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன் எனவே லிப்லாக் சீனில் நடிக்கவே மாட்டேன் என்கிறார் சிவகார்த்திக்கேயன்.

எவ்வளவே பார்த்துட்டோம்

எவ்வளவே பார்த்துட்டோம்

கவர்ச்சியாக நடிக்கமாட்டேன், லிப்லாக் சீனில் நடிக்கமாட்டேன் என்று கூறிய நடிகைகளே இப்போது துணிச்சலாக நடிக்கின்றனர். ஆனால் இப்போது ஸ்டேட்மென்ட் விட்டுள்ள சிவகார்த்திக்கேயன் அதை காப்பாற்றுவாரா? என்பதை ரசிகர்கள் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X