என் வளர்ச்சிக்குக் காரணமே தனுஷ்தான்... அவருடன் எந்த தகராறும் இல்லை! - சிவகார்த்திகேயன்
சென்னை: என் வளர்ச்சிக்குக் காரணமே தனுஷ்தான். அவருடன் தகராறு என்று வரும் செய்திகளில் உண்மையில்லை, என்றார் சிவகார்த்திகேயன்.
ஒரு சாதாரண தொலைக்காட்சி தொகுப்பாளராக நிகழ்ச்சிகளில் தலைகாட்டிய வந்த சிவகார்த்திகேயன் '3' என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இப் படத்தை தனுஷ் தயாரித்து நாயகனாக நடித்தார்.
சிவகார்த்திகேயனுக்கு நடிகராக வாய்ப்பு தரச் சொல்லி படத்தின் இயக்குநரான தன் மனைவியிடம் கூறியவரே தனுஷ்தான்.

எதிர்நீச்சல்
அதன் பிறகு தனுஷ் தயாரித்த ‘எதிர் நீச்சல்' படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்தார். இந்த படத்தின் வெற்றி, சிவகார்த்திகேயனுக்கு பெரும் வாய்ப்புகளைத் தேடித் தந்தது.

முந்திய சிவகார்த்தி
தொடர்ந்து படங்கள் ஹிட்டானதால் சம்பளம் பல மடங்கு உயர்ந்தது. இன்றைய நிலையில், தனுஷ் படத்தைவிட, சிவகார்த்திகேயன் படத்தை வாங்கவே அனைவரும் ஆர்வம் காட்டுவதாக செய்திகள் வர, அது தனுஷை அப்செட்டாக்கியதாகச் சொல்கிறார்கள்.

சண்டையா?
மேலும்தனுஷ் படங்களில் நடிக்க சிவகார்த்திகேயன் மறுப்பதாகவும், இதனால் இருவருக்கும் பனிப்போர் நடப்பதாகவும் கூறப்படுகிறது.

மறுப்பு
இது குறித்து சிவகார்த்திகேயனிடம் கேட்டபோது, இதனை மறுத்தார். அவர் கூறுகையில், "எனக்கும், தனுசுக்கும் எந்த தகராறும் இல்லை.

காரணமே தனுஷ்தான்
நான் இந்த அளவு உயர்வதற்கு காரணமே தனுஷ் தான். என் வளர்ச்சியில் அவர் சந்தோஷப்படுகிறார். தினமும் ஒருவரையொருவர் தொடர்பு கொண்டு பேசி வருகிறோம்," என்றார்.


Click it and Unblock the Notifications











