வண்டலூர் உயிரியல் பூங்காவில்.. மேலும் 4 மாதங்களுக்கு.. அந்த 'அனு'வைத் தத்தெடுத்த பிரபல ஹீரோ!

By

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் மேலும் 4 மாதங்களுக்கு அந்த 'அனு'வை தத்தெடுத்து உள்ளார், நடிகர் சிவகார்த்திகேயன்.

Recommended Video

Sivakarthikeyan adopted White Tiger | Vandalur Zoo, Doctor, Ayalaan

நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது, ரவிகுமார் இயக்கும் அயலான் படத்தில் நடித்து வருகிறார்.

இதில் ரகுல் பிரீத் சிங், இஷா கோபிகர், பாலசரவணன், பானுப்பிரியா, யோகிபாபு, கருணாகரன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

பிரியங்கா மோகன்

பிரியங்கா மோகன்

ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இந்தப் படத்தை அடுத்து 'டாக்டர்' படத்தில் நடித்து வருகிறார். இதை நெல்சன் இயக்குகிறார். இவர் நயன்தாரா நடித்த 'கோலமாவு கோகிலா' படத்தை இயக்கியவர். அனிருத் இசை அமைக்கிறார். பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடிக்கிறார். இதன் கதை சென்னையிலும் கோவாவிலும் நடப்பது போல அமைக்கப்பட்டு இருக்கிறது.

உயிரியல் பூங்கா

உயிரியல் பூங்கா

லாக்டவுன் காரணமாக இந்த படங்களின் ஷூட்டிங் தடைபட்டுள்ளது. படப்பிடிப்பு இல்லை என்பதால் மற்ற நடிகர், நடிகைகளைப் போல நடிகர் சிவகார்த்திகேயனும் வீட்டில் தனது குடும்பத்துடன் இருக்கிறார். இந்நிலையில், அவர் வண்டலூர் வன உயிரியல் பூங்காவில், அனு என்ற வெள்ளைப் புலியை கடந்த சில வருடங்களுக்கு முன் தத்து எடுத்திருந்தார்.

மேலும் 4 மாதம்

மேலும் 4 மாதம்

அதற்கான உணவு உள்ளிட்ட செலவுகளுக்கு அவர் பணம் கொடுத்து வந்தார். இப்போது அந்தப் புலியை மேலும் 4 மாதங்களுக்கு தத்தெடுத்துள்ளார். இந்த புலி, வண்டலூர் பூங்காவில் உள்ள 14 வெள்ளைப் புலிகளில் ஒன்று. இந்தியாவிலுள்ள வன உயிரியல் பூங்காக்களில், அதிக விலங்கு வகைகளை கொண்ட பூங்காவாக வண்டலூர் பூங்கா இருக்கிறது.

சலுகைகள்

சலுகைகள்

இங்கு, விலங்குத் தத்தெடுப்பு திட்டம் கடந்த 2009 ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறது. அதன்படி, தங்களுக்கு பிடித்த விலங்குகளுக்கு உணவு மற்றும் பராமரிப்பு செலவை தத்தெடுப்பவர்கள் ஏற்றுக் கொள்ளலாம். இதற்கு ஏற்றவாறு வரி விலக்குக்கான ரசீது, இலவச பூங்கா வசதிகள் போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X