»   »  நான்கே ஆண்டுகள்.... சிவகார்த்திகேயனின் அபார வளர்ச்சி இது!

நான்கே ஆண்டுகள்.... சிவகார்த்திகேயனின் அபார வளர்ச்சி இது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி குறித்து இணைய வெளியில் உலா வரும் ஒரு படத்தைப் பார்த்தால், நிஜமாகவே மலைப்பாகத்தான் இருக்கிறது.

2011-ம் ஆண்டு. அவன் இவன் படம் வெளியான நேரம். விஜய் தொலைக்காட்சியில் படம் குறித்த சிறப்பு நிகழ்ச்சியில் இயக்குநர் பாலா, விஷால், ஆர்யாவை பேட்டி காண்கிறார் சிவா.


Sivakarthikeyan become darling of box office

பாலாவின் முறைப்புகளுக்கு பம்மியபடி கேள்விகளைத் தொடுக்க, அதை கிண்டலாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் விஷாலும் ஆர்யாவும்.


ஆனால் காலத்துக்கு குசும்பு ரொம்பவே அதிகம்.


சரியாக நான்கே ஆண்டுகள். அதே பாலாவின் தாரை தப்பட்டைக்கும், விஷாலின் கதகளிக்கும் போட்டியாக வந்து வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறது சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன்!


இன்று சிவாவின் ரேஞ்ச் என்ன தெரியுமா....


'ரஜினிக்கு எப்படி வயது வித்தியாசமின்றி ரசிகர் கூட்டம் உள்ளதோ, அதே போல சிவகார்த்திகேயனுக்கும் உள்ளது. குறிப்பாக குழந்தைகள் மாணவர்கள் மத்தியில் அவருக்கு கிடைத்துள்ள வரவேற்பு பிரமிக்க வைப்பதாக உள்ளது. நான்கே ஆண்டுகளில் அவர் இப்படியொரு வளர்ச்சியை எட்டுவார் என்பதை யாரும் கற்பனை கூட செய்து பார்த்திருக்க மாட்டார்கள்', என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில்.


Sivakarthikeyan become darling of box office

கடுமையான உழைப்பு, பொறுமை, அர்ப்பணிப்பு, நேர்மை இருந்தால் வெற்றி நிச்சயம் என்பது சிவகார்த்திகேயனின் வளர்ச்சி சொல்லும் சேதி!

English summary
Actor Sivakarthikeyan's growth in just 4 years is a big surprise to the industry people. But the actor's hard work, passion and dedication make this possible.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil