அஜித், சிம்பு எல்லாம் ஓகே.. நம்ம சிவகார்த்திகேயனும் துபாயில் வீடு வாங்கிட்டாராமே? இத்தனை கோடிகளா?
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான படமான பராசக்தி. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், பாக்ஸ் ஆபீஸாக படம் கொஞ்சம் ஒர்க் ஆகவில்லை. இப்படி இருக்கையில் நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து வெளியாகி உள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயனின் சொந்த மாவட்டம் என்றால் அது திருச்சி மாவட்டம் தான். தற்போது சென்னையில் தங்கி வந்தாலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது சொந்த ஊருக்குச் சென்று வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இப்படி இருக்கையில் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ்நாட்டை விட்டு மட்டும் இல்லாமல், இந்தியாவை விட்டே செல்லலாம் என்று முடிவெடுத்துள்ளாராம்.
அதாவது, சிவகார்த்திகேயன் துபாயில் தனக்கென இரண்டு வீடுகள் வாங்குவதற்கு அட்வான்ஸ் பணம் கொடுத்துவிட்டாராம். இந்த ஆண்டு இறுதியிலோ, அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திலோ சிவகார்த்திகேயன் பெயரில் துபாயில் இரண்டு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுவிடுமாம். அதன் பின்னர் குடும்பத்துடன் துபாய்க்கு சென்று தங்கலாம் என்றும் முடிவெடுத்துவிட்டாராம்.

சிவகார்த்திகேயன்: படப்பிடிப்புகள் என்றால், சம்பந்தப்பட்ட தேதிகளில் மட்டும் வந்து நடித்துக் கொடுத்து விட்டுப் போக அவர் முடிவு எடுத்துள்ளதாகவும், அதேபோல் இங்குள்ள அவரது பூர்வீக வீடு, அதன் பின்னர் வாங்கிய சொத்துக்களை எல்லாம் தனது அக்காவை வைத்து மெயின்டெய்ன் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
துபாயில் வீடு: ஏற்கனவே தமிழ் சினிமா பிரபலங்களில் அஜித், மாதவன் உள்ளிட்டோர் அங்கு தங்களுக்கு என்று தனி வீடுகள் வாங்கி தங்கி வருகிறார்கள். அஜித் லண்டனிலும் வீடு வாங்க பிளான் செய்து வருகிறாராம். இது இப்படி இருக்க, தற்போது சிம்பு துபாயில் வீடு வாங்க திட்டமிட்டு வருகிறாராம். அதுவும் நடிகர் அஜித் வீடு அமைந்துள்ள பகுதியிலேயே வீட்டை வாங்க எல்லா வகையான ஏற்பாடுகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறதாம். சிம்பு அங்கு வாங்கவுள்ள தனி வீட்டின் மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 50 கோடிகள் முதல் 60 கோடிகள் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
விலை இவ்வளவா?: இப்படி இருக்கையில் நடிகர் சிவகார்த்திகேயன் அங்கு தனக்கென இரண்டு வீடுகள் வாங்குகிறார் என்ற தகவல் தற்போது கோலிவுட் வட்டாரத்தை வலம் வந்து கொண்டு உள்ளது. மேலும் இந்த இரண்டு வீடுகளை வாங்க சிவகார்த்திகேயன் எப்படியும் சுமார் 60 கோடிகளில் இருந்து 80 கோடிகள் வரை வரும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











