Independence Day 2025: குழந்தைகளுடன் சுதந்திர தினத்தை கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. அமரனாச்சே!
சென்னை: தேசிங் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் தேசத்துக்காக உயிரையும் விடக்கூடிய ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனாகவே வாழ்ந்த நடிகர் சிவகார்த்திகேயன் சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது குழந்தைகளுடன் கொடியை குத்திக் கொண்டு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கும் தேசபக்தி உணர்வை ஊட்டி வருகின்றன.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று வெளியான கூலி படத்தை குடும்பத்துடன் தியேட்டருக்குச் சென்று சிவகார்த்திகேயன் பார்த்த காட்சிகள் வெளியாகின. முன்னணி நடிகர்கள் படங்கள் வெளியானாலே சிவகார்த்திகேயன் தியேட்டருக்குச் சென்று பார்ப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ், அனிருத், ஸ்ருதிஹாசன், செளபின் சஹீர் என ஏகப்பட்ட பிரபலங்கள் சென்னையில் உள்ள திரையரங்குகளுக்கு படையெடுத்து இருந்தனர். அதே போல சுதந்திர தினத்தை முன்னிட்டு பலரும் தங்கள் தேசப்பக்தியை சோஷியல் மீடியாவில் இன்று வெளிப்படுத்தி வருகின்றனர்.
சுதந்திர தினம் கொண்டாடிய சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன் ஒவ்வொரு ஆண்டும் தனது தேசப்பறை வெளிப்படுத்தி வருகிறார். படங்களிலும் தொடர்ந்து தேசப்பற்றை நிலைநாட்டும் வகையில் நடித்து வருகிறார். கமல்ஹாசன் தயாரிப்பில் வெளியான அமரன் திரைப்படம் அதற்கு மிகப்பெரிய சான்றாக அமைந்தது. இந்நிலையில், 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது குழந்தைகளுடன் கொடியை குத்திக் கொண்டு கொண்டாடிய புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.
மகள் எங்கே காணோம்: சிவகார்த்திகேயனின் 2 குட்டிக் குழந்தைகள் மட்டுமே போட்டோவில் உள்ள நிலையில், அந்த வாயாடி பெத்த புள்ள ஆராதனாவை காணோமே என்றும் குகன் தாஸ் மற்றும் பவன் மட்டுமே உள்ளார்களே என்று ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அம்மாவுடன் ஆராதனாவும் போட்டோவுக்கு போஸ் கொடுக்கவில்லையோ என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
மதராஸி, பராசக்திக்கு வெயிட்டிங்: சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அவர் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி மற்றும் பராசக்தி படங்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். அடுத்த மாதம் செப்டம்பர் 5ம் தேதி மதராஸி படம் வெளியாகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் பராசக்தி படமும் வெளியாக காத்திருக்கிறது. அமரன் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் மார்க்கெட் உயர்ந்துள்ள நிலையில், குட் பேட் அக்லி பாக்ஸ் ஆபீஸை எந்த படம் வீழ்த்தப் போகிறது என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications











