அடாது மழையிலும் விடாது டப்பிங்.. டான் பட டப்பிங்கை கொட்டும் மழையிலும் முடித்த சிவகார்த்திகேயன்!
சென்னை: கோலிவுட்டின் முன்னணி நடிகராக மாறியுள்ள சிவகார்த்திகேயன் தனது டான் பட டப்பிங்கை நிறைவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
சென்னை முழுக்க கடந்த சில தினங்களாக மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், "அடாது மழையிலும் விடாது டப்பிங்" என சிவகார்த்திகேயன் போட்டுள்ள ட்வீட் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
டாக்டர் திரைப்படம் 100 கோடி வசூலை தாண்டிய நிலையில், டான் திரைப்படம் 100 கோடி வசூலை குவிக்க ரசிகர்கள் இப்பவே வாழ்த்தி வருகின்றனர்.

விஸ்வரூப வெற்றி
விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பது நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சரியாக பொருந்தும். காமெடியனாக விஜய் டிவியில் அறிமுகமாகி அங்கேயே தொகுப்பாளராக வளர்ந்து ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை விருது விழாக்களை தொகுத்து வழங்கி சினிமாவில் அடியெடுத்து வைக்க சிறிது சிறிதாக அவர் செய்த விடாத முயற்சி தான் இன்று அவரை முன்னணி நடிகராக கோலிவுட்டில் மாற்றி உள்ளது.

100 கோடி நாயகன்
தமிழ் சினிமாவில் 100 கோடி கிளப்பில் இணைந்த நாயகர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என வெகு சிலரே 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளனர். இந்நிலையில், இளம் நடிகரான சிவகார்த்திகேயன் டாக்டர் திரைப்படம் மூலம் 100 கோடி நாயகனாக மாறியுள்ளார்.

அடுத்த டான்
அமிதாப் பச்சனின் டான் படத்தை தமிழில் ரஜினிகாந்த் பில்லாவாக ரீமேக் செய்து நடித்டு ஹிட்டாக்கினார். அடுத்து தல அஜித் பில்லாவாக மாறினார். பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கான் அதே டான் டைட்டிலில் தொடர்ந்து படங்களில் நடித்து அசத்தி வருகிறார். கோலிவுட் ஷாருக்கான் என அழைக்கப்பட்டு வரும் சிவகார்த்திகேயன் தற்போது அடுத்த டானாக மாறி உள்ளார்.

காலேஜ் பாய்
நெல்சன் இயக்கத்தில் மிலிட்ரி டாக்டராக மெச்சூரிட்டியான ரோலில் மிரட்டிய சிவகார்த்திகேயன். அடுத்ததாக, இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் காலேஜ் பாயாக செம ஜாலியான ரோலில் டான் படத்தில் நடித்து வருகிறார். மீண்டும் தனது கல்லூரி நினைவுகளை டான் திரைப்படம் கொண்டு வந்துள்ளதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

அடாது மழையிலும் விடாது டப்பிங்
சென்னையையே மழை புரட்டி எடுத்து வரும் நிலையில், ஏகப்பட்ட சினிமா படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், "அடாது மழையிலும் விடாது டப்பிங்" என கேப்ஷன் போட்டு டான் படத்தின் டப்பிங்கை முடித்து விட்டதாக நடிகர் சிவகார்த்திகேயன் போட்டுள்ள ட்வீட் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
Recommended Video

அயலான் எப்போ
அயலான் பஞ்சாயத்து எல்லாம் ஓவர் என்று தகவல்கள் வெளியான நிலையில், இன்னமும் அந்த படத்தின் புரமோஷன் வேலைகள் ஆரம்பிக்கவே இல்லை. அந்த படம் எப்போது திரைக்கு வரும் என ரசிகர்கள் பெரும் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர். இன்று நேற்று நாளை இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள அயலான் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











