விஜய்க்கு நான் பாட்டு எழுதியிருக்கேன்... உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன்
சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் பீஸ்ட். இதன் 4வது கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
அனிருத் இசையமைப்பில் உருவாகிவரும் பீஸ்ட் படத்தை இயக்கிவருகிறார் நெல்சன்.
கடந்த சில மாதங்களாகவே இந்தப் படத்தின் ஒரு பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

விஜய்யின் பீஸ்ட் படம்
இளைய தளபதி விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகிவரும் படம் பீஸ்ட். நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தின் 4வது கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. பொங்கலுக்கு இந்தப் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் படப்பிடிப்பு நிறைவு
விஜய்யின் மாறுபட்ட நடிப்பை இந்தப் படத்தில் பார்க்கலாம் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் சென்னையில் பிரம்மாண்ட ஷாப்பிங் மால் செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இதில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே பங்கேற்று நடித்தனர். விரைவில் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெறவுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய்க்கு பாடல் எழுதிய சிவகார்த்திகேயன்
இந்நிலையில் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதியுள்ளதாக கடந்த சில மாதங்களாக தகவர்லகள் வெளியாகி வந்தன. இந்த தகவலை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. நெல்சனின் நெருங்கிய நண்பர் சிவகார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது.

உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன்
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். நேஙல்சன் இயக்கத்தில் சிவா நடித்துள்ள படத்திலும் அவர் பாடலை எழுதியுள்ள நிலையில், நெல்சன் -விஜய் இணைந்துள்ள பீஸ்ட் படத்திலும் சிவா தற்போது பாடல் எழுதியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விரைவில் படக்குழு இந்த தகவல் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்றும் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். பாடகர், பாடலாசிரியர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என்று பன்முகம் காட்டும் சிவகார்த்திகேயன் தான் நடித்த படங்களில் மட்டும் பாடல்களை எழுதிவந்த நிலையில் தற்போது இளைய தளபதி விஜய்க்கு பாடல் எழுதியுள்ளது இருதரப்பு ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications