குழந்தை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு: வைரலாகும் சிவகார்த்திகேயன் வீடியோ
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் ஐந்து நிமிட வீடியோ வைரலாக பரவி வருகிறது.
சிவகார்த்திகேயன் சீமராஜா திரைப்படத்திற்குப் பிறகு இன்று நேற்று நாளை திரைப்பட இயக்குனர் ரவிகுமாரின் இயக்கத்தில் நடித்துவருகிறார்.

தற்போதுள்ள இளம் நடிகர்களில் குழந்தைகள் அதிகம் விரும்பும் நடிகராகவும் உள்ளார். அதனால் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுக்கு குரல் கொடுத்துள்ளார்.
ஒரு பள்ளிக்கூட முற்றத்தில் மாணவ, மாணவியர் அமர்ந்து பாடம் படித்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது காரில் வந்து இறங்கும் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு வகுப்பாசிரியராக இருந்து பாடம் நடத்தப் போவதாக தெரிவிக்கிறார்.
அந்த வகுப்பில், மாணாக்கர்களுக்கு நல்ல தொடுதல் எது, கெட்ட தொடுதல் எது, ஒருவர் தவறாக நடந்துகொள்ள முயற்சித்தால் முதலில் என்ன செய்ய வேண்டும், அந்த விஷயங்களை யாரிடம் சொல்லவேண்டும் உள்ளிட்ட பல விஷயங்களை சொல்லிக்கொடுக்கிறார்.
ஐந்தரை நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த குறும்படம் குழந்தைகளும் புரிந்துகொள்ளும்படி எளிமையாக எடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பாதுகாப்புத் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற தொண்டு நிறுவனத்தின் இந்த நல்ல முயற்சிக்கு உதவும் வகையில் சம்பளம் வாங்காமல் நடித்து கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.


Click it and Unblock the Notifications











